ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர் சந்திப்பு ! (110 கோடி இந்தியர்களில் ஒரு அரை இந்தியர் ?)

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அடுத்த பிரதமர்  சந்திப்பு !
(110 கோடி இந்தியர்களில்  ஒரு அரை இந்தியர் ?)

சென்னையில்,  ஐந்து  நட்சத்திர  ஹோட்டலில் –
அடுத்ததாக பிரதமர் ஆவதற்காக
காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கும்
ஒரு அரை இந்தியர்
(ஒபாமாவை  அரை அமெரிக்கர் /
அரை ஆப்பிரிக்கர் என்று  கூறும்போது
நாம் இங்கு அத்தகைய சொல்லை
பயன்படுத்துவதில் தவறில்லையே ?)
கூட்டிய  கூட்டத்திற்கு
அழைப்பு கிடைத்ததிலேயே அகமகிழ்ந்து  போய்  வெளியே
வந்தவுடன்  பரவசத்துடன் பேட்டி  கொடுத்த  மதன், ஞானி
போன்றவர்களிடையே (  இதற்கு முன் அறிமுகமில்லாத )
கவிதா முரளிதரன் என்கிற  பத்திரிகையாளர் செய்திருக்கும்
பணி மிக மிகச்சிறப்பானது.

எல்லா கேள்விகளுக்கும்  அரை வேக்காட்டுத்தனமாக
பதில் சொல்லி வந்தவரை  ஈழத் தமிழர்களைப்பற்றிய
உணர்ச்சிகரமான கேள்விக்கணைகளின்  மூலம்
திணற வைத்திருக்கிறார் இந்த
பத்திரிகை  நண்பர் !

50,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.
2000 கோடி ரூபாய்  கொடுக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு துறை செயலாளர், வெளி உறவுத்துறை அமைச்சர்
ஆகியோர் சென்று பேசி இருக்கிறார்கள் – இன்னும் என்ன செய்ய
வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் ?
என்று  வினவி இருக்கிறார் ராகுல்.

(இன்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள பத்திரிகைக்
குறிப்பின்படி – இன்னும் ஒரு வீடு கூட கட்டப்பட வில்லை !
அனைத்தும் இன்னும் அறிக்கை அளவிலேயே,
திட்ட அளவிலேயே உள்ளன.
மொத்தம் 50,000 வீடுகள் கட்டுவதாக திட்டம்.

மழைக்காலம்   முடிந்த பின்னர் (?) முதல் ஆயிரம்
வீடுகளை கட்டுவதற்கான வேலைகள் துவங்கப்படும்.
அதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு
மீதி வீடுகளை கட்டுவதற்கான திட்டங்கள்
வரையப்படும் ! இந்த அழகில் இருக்கிறது உதவிகள் )

பின்னர், மாலன் போன்றவர்களின் –
இலங்கை அரசை  கடுமையான வார்த்தைகளால் கூட
காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லையே  என்கிற  கேள்விக்கு
“நான் இதை ஏற்று கொள்ள மாட்டேன் – தமிழ் நாட்டில்
ஐந்து பொது  கூட்டங்களில் நானே  இதைப்பற்றி பேசி இருக்கிறேன்
இலங்கை அரசின் செயல்பாடுகளை கண்டித்தேன்” என்று
ஒரு அபத்தமான பதிலையும் கூறி இருக்கிறார்
காத்திருக்கும் பிரதமர்  !

எனக்குத் தெரிந்து தமிழ் நாட்டில் எந்த பொதுக்கூட்டங்களிலும்
இவர் பேசியதே இல்லை. காங்கிரஸ் உள்கட்சி கூட்டங்களில்
பேசி இருக்கலாம்,  அதிலும் இலங்கை பிரச்சினையை  பற்றி
பேசியதாக  செய்தியே இல்லை !

கடைசி கேள்விக்கு இவர் கூறிய பதில் இவரது சுயரூபத்தை
அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது –
“அப்படியானால் காமன்வெல்த்  போட்டிகளுக்கு ராஜாபக்சேயை
ஏன் அழைத்தீர்கள்” என்கிற நேரடியான   கேள்விக்கு
இவர் நழுவிக்கொண்டே கூறியுள்ள   பதில்
“அவரை நான் ஒன்றும்  அழைக்கவில்லையே”

பத்திரிகை நண்பர்களுக்கு  ஒரு வேண்டுகோள்.
அடுத்த முறை  காங்கிரஸ் கட்சித்தலைவர்கள்
யார் கிடைத்தாலும் சரி – இந்த கேள்விக்கான
பதிலைப்பெற முயற்சி செய்யுங்களேன் !

ராகுலினின்  தமிழ் நாட்டு சுற்றுப்பயணத்திற்கான
செலவுகளை யார் ஏற்றுக்கொண்டார்கள் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சின்ன வயசு, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மக்கள் பணத்தில் விருந்து, ராஜ பக்சே, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.