ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ………

ராகுல் காந்தி இரண்டு  லட்சம்  டாலர்களுடன்
அமெரிக்காவில் மடக்கப்பட்ட   செய்தி ………

அண்மையில்,  அமெரிக்காவில்,
பாஸ்டன்  விமான நிலையத்தில்
சோதனையின்போது – ராகுல் காந்தி
கணக்கு காட்டப்பட முடியாத
சுமார்  இரண்டு லட்சம்  டாலர்களுடன்
(இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் !)
சோதனை செய்யும் அதிகாரிகளால்
நிறுத்தி வைக்கப்பட்டார்  என்றும் –  பின்பு
புது டெல்லி  தலையிட்ட  பின்பு தான்
வெளியேற  அனுமதிக்கப்பட்டார் என்றும   இன்று
நம்பகத்தன்மை உள்ள ஒரு பத்திரிகை  தகவல்
வெளியிட்டிருக்கிறது !

இந்த  தகவல் என்னை போலவே   பலருக்கும்
ஆச்சரியமாக இருக்கலாம் !

இதில் கவலை தரக்கூடிய சில விஷயங்களும்
இருக்கின்றன –

அவர் கையில் வைத்திருந்த  பணத்திற்கு கணக்கு
காட்ட முடியவில்லை  என்பதும்
இந்தியாவின்  அடுத்த பிரதமர்  என்று கருதப்படும்
இந்த இளைஞர்
அமெரிக்காவில் தன்னந்தனியே  இப்படி
சுற்றிக்கொண்டு இருக்க வேண்டிய அளவிற்கு
ரகசியமான காரணம்  என்ன  என்பதும்
சாதாரணமான விஷயங்கள் அல்ல .

கிரெடிட் கார்டு,  டெபிட்  கார்டு,
இன்டர்நெட் பாங்கிங் ,மொபைல் பாங்கிங்
என்று  பலவித  மிகச்சுலபமான வழிகள்
நடைமுறையில்  இருக்கும்போது
கோடிக்கணக்கில்
–  அதுவும்  அந்நிய செலாவணியில் – டாலராக
ஒருவர் எடுத்து செல்வது  ஒரு வித மர்ம பின்னணியை
தோற்றுவிக்கிரதே !

ராகுல் காந்தி தனிப்பட்ட மனிதர் அல்ல.
இந்தியாவில் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள
மிக முக்கியமான
மனிதர்களுள் ஒருவர்.
எனவே  இதன் பின்னணியை  தெரிந்து  கொள்ள
மக்களுக்கு
உரிமை இருக்கிறது..
சம்பந்தப்பட்டவர்கள்  விளக்குவார்களா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to ராகுல் காந்தி இரண்டு லட்சம் டாலர்களுடன் அமெரிக்காவில் மடக்கப்பட்ட செய்தி ………

 1. Ganpat சொல்கிறார்:

  இது மிகவும் முக்கியமான விஷயம்.
  இதை பற்றிய முழு விவரங்கள் உடனே கொடுக்கவும்
  ஆதாரமும் தேவை (source)
  ஏன் இந்திய ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவில்லை என தெரியவில்லை.

 2. Nithil சொல்கிறார்:

  //அண்மையில், அமெரிக்காவில்,
  பாஸ்டன் விமான நிலையத்தில்
  சோதனையின்போது //

  It was in 2001 and not recently.

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அன்புள்ள கண்பத்,
  உங்கள் மறுமொழிக்கு நன்றி,
  இன்று வரை நான் செய்தி என்று வெளியிடும் எதையும்
  நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே எழுதி
  வருகிறேன்.

  அதே சமயம் அந்த செய்தியை ஒட்டி செய்யப்படும் விமரிசனங்கள் /
  கருத்துக்கள் – என் எண்ணங்களின் அடிப்படையில்
  எழுதப்படுவை.

  ராகுல் காந்தியை பற்றிய செய்தி இந்த வார துக்ளக் இதழில்
  வெங்கட் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிவந்திருப்பவை.
  எனவே செய்தி நம்பத்தகுந்தது தான் !

  உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் பொறுப்புள்ளவன்
  ஆக்குகின்றது – நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.