கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம்

கலைஞரின்  பேட்டி –  தாழ்ந்து  வரும்  தரம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த
திமுக தலைவரும்,  முதல்வருமான கருணாநிதி
செய்தியாளர்களின்  கேள்விக்கு
பதில்  அளித்த விதம் அவருக்கு பெருமை  சேர்ப்பதாக இல்லை  –

வர வர  அவர் பொறுமை இழந்தும் தரம் தாழ்ந்தும்  பேசுவது
அவரது தன்னம்பிக்கை இன்மையையும் , குற்ற உணர்ச்சியையும்
வெளிப்படுத்துவதாகவே  அமைந்துள்ளது   –
இது பார்ப்பவர்களுக்கு தெரிகிறது –   ஆனால்
அவருக்கு தெரியவில்லையே !

பேட்டியின் ஒரு பகுதி  கீழே –

கேள்வி – சி.பி.ஐ. சார்பில் இரண்டாவது முறையாக தமிழகத்தில்
முன்னாள் அமைச்சர் ராசா உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளதே?

கலைஞர்: ,ஏதோ  உங்கள் வீட்டில்  சோதனை நடந்ததைப் போல
பதற்றம் காட்டுகிறீர்களே?
(பதில்   யாருடைய பதற்றத்தை காட்டுகிறது  பாருங்கள் !)

கேள்வி-: தி.மு. கழகத்திற்கும் காங்கிரசுக்கும் உறவு எப்படி உள்ளது?

கலைஞர்-: அதை  உங்களால் வெட்ட முடியாது.
(நிருபரை பாrத்து  கூறுகிறார் )

.கேள்வி: ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

கலைஞர்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என்று
முன்பே கூறியிருக்கிறேன்.

(இதென்ன பதில்  ? குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும்   நடவடிக்கை எடுக்காமல்
கூட இருக்க முடியுமா ? இப்போது நடவடிக்கை உண்டா என்பது தானே
நிருபரின் கேள்வி ?))

கேள்வி:  அமைச்சர் பூங்கோதையும் நீரா ராடியாவும்
தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

கலைஞர்:  இரண்டு பெண்கள் தானே  பேசிக் கொண்டார்கள்  !.
அதில் உங்களுக்கென்ன?

(அதாவது அவர் பார்வையில் –
ஆணும் பெண்ணும் பேசினால்  தவறு
பெண்ணும் பெண்ணும்  தானே  பேசினார்கள் ?
இதில் தவறு என்ன கண்டீர்கள் ?  என்று பேச்சை
கொண்டு போகிறார் )

அந்த அம்மையார்(நீரா ராடிய)  ஒரு வட நாட்டுப் பெண்மணி.
இவர் (பூங்கோதை )  மதுரை ஜில்லா  நாடார் வீட்டு  பெண் !

((மீண்டும் அவர் பார்வையை பாருங்கள்  –
பூங்கோதை  ஒரு நாடார்  பெண் – உடனடியாக
ஜாதி உணர்வு எவ்வளவு எதார்த்தமாக வெளி வருகிறது !)

கேள்வி -: சோனியா காந்தி நேற்று பேசும்போது  ஊழல் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

கலைஞர் -: அதற்காக நீங்கள் ஏன்  பயப்படுகிறீர்கள் ? .
(பயப்படுவது கேள்வி கேடடவரா – அல்லது பதில்
அளிப்பவரா ? )

இது எல்லாம்  எதை காட்டுகின்றது ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, ஜாதி வெறி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம்

 1. chollukireen சொல்கிறார்:

  சாதுர்யமாக பேசி சமாளிக்கிறோம் என்ற தற்காப்பைக் காட்டுகிறது எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டுமே யார் வேண்டுமானாலும் என்ற மனோபாவமா.

 2. Ponraj Mathialagan சொல்கிறார்:

  கேள்வி: நீங்கள் நல்லவரா, கெட்டவரா?
  கருணாநிதியில் தெளிவான பதில்: கெட்டவர் என்று சொல்ல முடியாத அளவிற்கு நல்லவர் என்கிற கருத்தை ஒத்துக் கொண்டால் உங்கள் எண்ணப்படி நான் கேட்டவன் ஆகிறேன். ஆனால், நல்லவன் என்கிற கோட்பாட்டை ஆமோதிப்பதால் மக்களின் எண்ணப்படி கெட்டவனாக சித்தரிக்கப் பட்ட நான் தர்க்க ரீதியாக கெட்டவன் என்கிற எல்லைக்குள் அடங்காமல் நல்லவனாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன் என்று எண்ணுகிறேன். (இனிமே நீ கேள்வி கேப்ப….மவனே….)

 3. Ponraj Mathialagan சொல்கிறார்:

  கேள்வி: இலங்கை பிரச்சனையில் இந்தியாவின் நடவடிக்கை உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?
  கருணாநிதியில் தெளிவான பதில்: திருப்தி இல்லை என்று தி.மு.க சார்பில் தெரிவிக்கப் படவேண்டும் என்கிற கருத்து பலரால் முன் வைக்கப் படுவதால், நான் திருப்தி இல்லை என்று சொல்ல விளையலாம். ஆனால், திருப்தியை இருக்கிறது என்று கூறுவதன் மூலம் நான் திருத்தியாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல. எனவே நான் திருப்தியாக உள்ளேனா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன்.

 4. Ponraj Mathialagan சொல்கிறார்:

  கேள்வி: ராசா ஒன்றரை லட்சம் கோடியை ஆட்டையை போட்டது உண்மை தானே?
  கருணாநிதியில் தெளிவான பதில்: ராசா பல லட்சம் கோடிகளை ஏப்பம் விட்டுவிட்டார் என்ற கருத்தை ஏற்க்க முடியாவிட்டாலும ், பவுதீக ரீதியாகவும், சாதீய அடக்கு முறையில் திராவிட இயக்கத்தின் பங்கினை கருத்தி கொண்டு சீர் தூக்கி பார்க்கும் போது, ராசா செய்தது சரியே என்று வாதிட போதுமான அளவு நிகழ் தகவு பரவல் இருப்பதால், அமீபாவுக்கும் முந்திய திராவிட கலாச்சாரத்தினை கருத்தில் கொண்டு அலசுவோமேயானால், ராசா செய்தது சரியாக இருக்கும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது என்று நான் சொல்வேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எனக்கு புரிகிறது. எனவே ராசா தவறு செய்தாரா இல்லையா என்பதை உங்கள் ஊகத்துக்கே விடுகிறேன். (எப்பூடி….!!!)

 5. Ponraj Mathialagan சொல்கிறார்:

  கேள்வி: யார் அடுத்த முதல்வர்? அழகிரியா? ஸ்டாலினா?
  கருணாநிதியில் தெளிவான பதில்: அழகிரி முதல்வராய் வருவதற்கு எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைப்பதை கருத்தில் கொள்வோமேயானால், அழகிரி வருவதில் எனக்கு ஆட்சேபனை உண்டு. ஆனால், ஸ்டாலின் வரும் பட்ச்சத்தில் அவர் முதல்வராக வாய்ப்பு பிரகாசமாக உண்டு என்கிற தவறான கருத்தை அழகிரி வழிமொழிவதால் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்விக்கு இதுவே என் பதிலாய் இருக்க முடியும். (செத்தடா நீ…மவனே… கேள்வியா கேக்குற..கேள்வி…)

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பிரமாதம் மதியழகன் !
  கலைஞரிடம் பயிற்சி பெற்றீர்களோ ?

 7. ravi சொல்கிறார்:

  நல்ல இடுகை…
  மதியழகன் பின்னுகிறார்….அரசியல்வாதி-ஆக நல்ல பிரகாசம் இருக்கிறது……

 8. RAJASEKHAR.P சொல்கிறார்:

  @(~|~)@
  V

 9. RAJASEKHAR.P சொல்கிறார்:

  *(~|~)*
  . _ .

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  rajasekhar,P

  ??????????

 11. udhaya சொல்கிறார்:

  super

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.