9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? )

9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை
ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? )

அடுத்த நீரா ராடியா ஒலிப்பதிவில் வெளிவந்திருப்பது
(சனிக்கிழமை அவுட்லுக்  இதழில் )
ஒரு ரியல் எஸ்டேட்
வழக்கில் சாதகமான தீர்ப்பு சொல்ல 9 கோடி
லஞ்சம் வாங்கிய டெல்லி உயர் நீதி மன்ற
நீதிபதியைப் பற்றியது.

வெளிப்படையாக கொடுத்தவர் பெயரையும்
வாங்கியவர் பெயரையும்  கொடுக்கப்பட்ட
இடத்தையும்,  கூறி இருக்கிறார்கள்.

இந்த ஒலிப்பதிவு  மத்திய அரசின் கையில்
ஜூன் 2009 லேயே கிடைத்திருக்கிறது.
இருந்தும் இன்று வரை இது விஷயமாக
உள்துறையோ, சட்ட அமைச்சகமோ எந்த
நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்த லட்சணத்தில் அன்னை சோனியாவும்
பிள்ளை  ராகுலும் இன்று  சூளுரைக்கிறார்கள்
அதே டெல்லியில் – ஊழலை கடுகளவும்
சகித்துக் கொள்ள மாட்டோம் என்று,
வாய்  சொல்லில் வீரரடீ என்று புரட்சிக்கவி
அன்றே சொன்னது  இவர்களைப்
போன்றவர்களைத் தானோ ?

இன்று இன்னுமொரு தகவல்  வெளியாகி இருக்கிறது.
அடுத்த வாரம்  பட்டத்து இளவரசர்  தமிழ்நாடு விஜயம்
செய்யப்போகிறாராம்.

டெல்லியில் இருந்து சென்னை தனி விமானம்.
சென்னையிலிருந்து  –

வேலூர்,

திருப்பூர்,
மதுரை,

நெல்லை,

புதுவை,

திருச்சி

ஆகிய ஊர்களுக்கு
பவனி தனித்தனி   ஹெலிகாப்டரிலாம்.

எனக்குத் தான் தெரியவில்லை.  உங்களில்
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
இவரோ அரசில் எந்த மந்திரி பதவியும்
வகிக்கவில்லை. எந்த கமிட்டி தலைவரும் இல்லை.
வெறும்  எம்பி  தான்.
அப்படி இருக்க  அண்ணனின்  தனி விமான சவாரிக்கான

செலவுகளை  யார் ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள் ?

நிச்சயமாக  சொந்தக் காசாக இருக்காது !
அப்படியானால் – காங்கிரஸ்  கட்சியா ?

கட்சிக்கு அத்தனை  வசதி உண்டா ?
எப்படி ?  ஜட்ஜ்  வழி தானா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.