ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !

ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில்
ப.சிதம்பரம் அவர்களின்  பெரும் பணி !

ஒரு காலம் இருந்தது.
18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு
மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம்.

இப்போது அப்படியே  தலைகீழாகி
விட்டது நிலைமை.
சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே
என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை
கலைஞர் வேண்டும் சூழ்நிலை !

பொதுவாக ஜெயலலிதாவுடன் காங்கிரஸ்
கூட்டணி வைக்கும்
நிலை ஏற்படக்கூடாது என்பது
சிதம்பரம் அவர்களின் கருத்து.

விஜய்காந்துடன் சேர்ந்தால் –
ஜெயிப்பது நிச்சயம் இல்லாத நிலை
என்பதுடன் விஜய்காந்துடன்
நெருங்கி இருப்பவர்கள்  ஜிகே வாசனும்,
இளங்கோவனும் என்பதால் அதுவும் சரிவராத நிலை.

எனவே காங்கிரஸ் கட்சிக்கு –
இருப்பதற்குள் சிறந்த வழி –
திமுக வுடன் கூட்டணி தொடர்வதே.
ஆனால், அதே சமயம்
திமுகவை  தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர வேண்டும். அதிக அளவு இடங்களில்
போட்டி இடுவதுடன்
ஒருவேளை ஜெயித்தால் –
தமிழ் நாட்டில் காங்கிரஸ் + திமுக கூட்டணி அரசும்
அமைய வேண்டும்.

அதற்கு வழி ?

தமிழ் நாட்டில் ராஜாஜிக்குப் பிறகு இது வரை
கலைஞர்  தான் சாணக்கியராக இருந்தார்.
தன் ராஜதந்திரத்தால் அனைவரையும் ஆட்டி வைத்தார்.

இப்போது, கலைஞரை மிஞ்சக்கூடிய
அடுத்த சாணக்கியராக உருவெடுத்திருப்பது –
ப. சிதம்பரம் அவர்கள்.

நாட்டில் உள்ள இத்தனை அரசியல்வாதிகளிலும்
ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றியோ,
ராஜாவைப் பற்றியோ
இதுவரை கருத்து எதுவும் சொல்லாத
ஒரே தலைவர் ப.சிதம்பரம் மட்டும் தான்.
அதே சமயம்  இது பற்றிய
அனைத்து விவரங்களையும் அறியக்கூடிய நிலையில்
இருப்பவரும் அவர் ஒருவர் மட்டும் தான்.
(மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பதால்)

இன்று நீரா ராடியா டேப் மூலம்
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரம் நாடு பூராவும்
விஸ்வரூபம் எடுக்க மூல முதற் காரணமாக
இருந்தவர் யார் ?

எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் -இன்று
இந்த உரையாடல்கள் வெளிவரக் காரணமாக
இருந்தவர் இந்த நாட்டிற்கு பெரும் பணி
ஆற்றி இருக்கிறார் !

நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களைப்
பதிவு பண்ண அனுமதி மட்டும் தான் நாங்கள்
(மத்திய உள் துறை அமைச்சகம்) கொடுத்தோம்.

மற்றபடி உள்துறை அமைச்சர்
(ப.சிதம்பரம் அவர்கள் ) கூறி நான் தான்
(உள் துறை செயலாளர் – ஜிகே பிள்ளை )
இந்த உரையாடல்கள்  ஊடகங்களில்
கசியும்படி செய்தோம் என்று சிலர் கூறுவது தவறு –

– என்று இன்று (சனிக்கிழமை) மாலை
உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை அவர்கள்
செய்தி வெளியிட்டு உள்ளார்.

நாமும் நம்புவோம் –
“என் அப்பா குதிருக்குள் இல்லை” என்கிற
தமிழ்ப் பழமொழி அவருக்குத் தெரியாது என்று !!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !

 1. yatrigan சொல்கிறார்:

  ஒரு வழியாக கலைஞரின் குடுமி
  ப.சி.யின் கையில் சிக்கி விட்டதா !

  அப்படியானால்
  இன்னும் கொஞ்ச நாட்களுக்கு –
  சட்டமன்ற தேர்தல் வரை –
  ஆடு களத்தில் சுவை கூடும் என்று
  கூறுங்கள் !!

  பணி மேன்மேலும் சிறக்க
  வாழ்த்துக்கள் .

 2. aravarasan சொல்கிறார்:

  மு.க ,மூப்பனார் என இரு வரும் சேர்ந்து செய்யமுடியாத செயலை இப்போ உள்ள காங்கிரஸ்காரன் என்னத்தை புடுங்கிட போறான். என்ன.. முக.வை மிரட்டி மீன் பிடிக்க முயற்சிப்பான்கள் இப்போ உள்ள காங்கிரஸ் கதர் சட்டை களவாணிகள்.
  அரவரசன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.