வீடு வேண்டுமா வீடு ?
கலைஞருக்குப் பிடித்த –
அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் –
சமூக சேவகர்கள் !
வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே
பொதுவாக, மொத்தமாக இடங்களைத்
தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில்
உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி,
வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி
போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு
அந்த இடங்களை குடியிருக்க தோதாகச்செய்து விட்டு –
பின்னர் குடியிருப்பு வீடுகளைக் கட்டியோ அல்லது
வெறும் மனைகளாகவோ வசதி குறைந்த மக்களுக்கு,
வருமானம் குறைந்த மக்களுக்கு, சலுகை விலையில்
அளிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு மக்கள் நல வாரியம்.
முக்கிய நோக்கம் வீடோ, வீட்டு மனையோ –
இல்லாத எளியவர்களுக்கு சலுகையோடு அளிப்பது.
அப்படி உருவாகும் வீடுகளையோ, குடியிருப்பு
மனைகளையோ, அரசாங்கம் தகுந்த முன்னறிவிப்புடன்
விளம்பரப்படுத்தி, பொது மக்களிடமிருந்து
விண்ணப்பங்களைப் பெற்று, பின்னர் தகுதியுள்ள
மக்களுக்கு – குலுக்கல் அடிப்படையில் விலைக்குக்
கொடுக்கும்.இது தான் பொதுவாக நடைமுறை.
அத்தகைய வீடுகளை/மனைகளைப் பெறுவோர்க்கு சில
தகுதிகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும்.
அந்த குடும்பத்தின் உறுப்பினர் யாருக்கும்
(கணவர்/மனைவி, பிள்ளை/பெண்கள் )
அதே ஊரில்/தமிழ் நாட்டில் சொந்தமாக வேறு
வீடோ, குடியிருப்பு மனையோ இருக்கக் கூடாது.
வாங்கிய இடத்தை சொந்த உபயோகத்திற்கு மட்டுமே
பயன்படுத்த வேண்டும்.
எந்த நோக்கத்தில் அந்த வீடு/மனை உருவாக்கப்
படுகிறதோ, அந்த வகையில் மட்டுமே பயன்படுத்தப்பட
வேண்டும்.
குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும்
விற்கக்கூடாது.
வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டதன்
உண்மை நோக்கம் இது தான்.
தமிழ் நாட்டில் யார் யாருக்கு வீட்டு வசதி வாரியத்தின்
வீடுகளும், நிலங்களும் கலைஞர் அரசால் –
தாரை வார்க்கப்பட்டிருக்கின்றன
என்று ஒரு சிறு பட்டியல் வெளியாகி இருக்கிறது.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி – கோபாலகிருஷ்ணன்
என்கிற பொது நலத் தொண்டர் ஒருவர்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் போராடிப்
பெற்றிருக்கும் தகவல்களின்படி இந்த பட்டியல்
வெளி வந்திருக்கிறது.இது ஒரு பகுதி தான் –
முழுப் பட்டியல் வெளிவரும்போது மேலும் அதிர்ச்சிகள்
ஏற்படலாம்.
பட்டியலில் இருப்பவர்கள் யார் ?
– ஆளும் கட்சி ஜால்ராக்கள்,
எடுபிடிகள், துதிபாடுபவர்கள்,
முதல்வர் நாற்காலியிலிருந்து எழுந்திருக்கவும்,
உட்காரவும் உதவும் உதவியாளர்கள்,
மிகவும் நெருக்கமான காவல்துறை அதிகாரிகள்,
சில நீதிபதிகளும் கூட,
கட்சிப் பிரமுகர்களின் மருமகள்கள்,
பேரன், பேத்திகள், திமுக அறிவாலயத்தில்
பணிபுரிபவர்கள், அவர்களது உறவினர்கள் –
இரண்டாவது – மூன்றாவது துணைவியரின் வாரிசுகள் –
இப்படிப் போகிறது பட்டியல்.
பட்டியல் கீழே கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்களே பாருங்களேன் –
இவர்களுக்கு எப்படி வீடு/மனை கொடுக்கப்பட்டது என்று
கேட்டால் – சமூக சேவகர்கள், அப்பழுக்கற்ற
அரசு ஊழியர்கள் என்கிற பிரிவின் கீழ் இவர்களுக்கு
விருப்புரிமையில் ( கோட்டா )
அளிக்கப்பட்டது என்று பதில் வருகிறது.
அதென்னய்யா விருப்புரிமை என்று கேட்டால் –
இதற்கு அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,
85 சதவீத வீடுகள் முறைப்படி தான் அளிக்கப்படுகின்றன
என்றும் மீதி 15 சதவீதம் மட்டுமே இப்படி (முதலமைச்சர்
விருப்பப்படி ) அளிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது !
எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது என்றும்
கூறப்பட்டுள்ளது.
முதலாவதாக ஒரு கேள்வி – ஒரு (ஜிஓ) அரசு ஆணை
போட்டு விட்டால் எந்த தவறை வேண்டுமானாலும்
நியாயப்படுத்தி விடலாமா ? ஒரு அரசு ஆணை பிறப்பித்து
ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும்
ஆக்கி விட முடியுமா ?
விருப்பப்படி தனக்கு வேண்டுபவர்களுக்கெல்லாம் அரசு
வீடுகளையும், மனைகளையும் அள்ளித் தாரை
வார்க்கத்தான் இவர்களை அமைச்சர்களாகவும்,
முதல் அமைச்சராகவும் தேர்ந்தெடுத்து அனுப்பி
இருக்கிறோமா ?
தோராயமாக -ஆண்டுக்கு 50,000 வீடுகள்
உருவாக்கப்படுகின்றன என்றால்
அதில் 15 % – அதாவது 7,500 வீடுகளை
முதலமைச்சர் எந்த விதிகளைப்பற்றியும் கவலைப்படாமல்
தான் விரும்புபவர்களுக்கு அளிக்கலாம்.(இதற்கு
வழி செய்யும் வகையில் அவர்களே ஒரு அரசு
ஆணையையும் போட்டுக் கொண்டு விட்டார்கள் )
முதல் கேள்வி – முதல் அமைச்சருக்கு எதற்கு
இப்படி ஒரு அதிகாரம். இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு
வழி வகுக்காதா ?
இரண்டாவது கேள்வி – அப்படி தவிர்க்க முடியாமல் ஒரு
அதிகாரம் தேவை என்றால் – இவ்வளவு (15% ) எதற்கு ?
ஆண்டுக்கு 50 வீடுகளை/மனைகளை முதல் அமைச்சர்
தன் விருப்பம் போல் அளிக்க அதிகாரம் இருந்தால் போதாதா ?
அடுத்தது – தகுதி விவகாரம்.
பொதுவாக இவர்கள் கொடுத்திருப்பது
சமூக சேவகர் அல்லது அப்பழுக்கில்லாத அரசு ஊழியர்
என்கிற தகுதியில்.
யார் சமூக சேவகர் என்று கேட்டால் -யாரிடமிருந்தாவது,
அது எந்த கழிசடையாக இருந்தாலும் பரவாயில்லை-
ஒரு லெட்டர் ஹெட் காகிதம் மட்டும் அவசியம் –
ஒரு சான்றிதழ் பெற்று வந்தால் போதும். சிலருக்கு
தாசில்தார்; சிலருக்கு ரோட்டரி கிளப் ; சிலருக்கு கவுன்சிலர் :
ஒருவர் ஊர்க்காவல் படையில் உறுப்பினராக இருக்கிறார்
என்பதே சமூக சேவகருக்கான தகுதியாகி விட்டது.
ஒருவர் ஒரே ஒருமுறை ரத்த தானம் செய்ததும்
சமூக சேவை ஆகி விட்டது !
மற்றுமொரு கேள்வி -பலன் கருதாமல் மக்களுக்கு
சேவை செய்ய முன் வருபவர்கள் தானே சமூக சேவகர்கள்.
விருப்புரிமை கோட்டாவில் வீட்டுமனை கிடைக்கும்
என்று வருபவர்கள் எப்படி சமூக சேவகர்களாவார்கள் ?
அடுத்தது அப்பழுக்கு இல்லாத அரசு ஊழியர் –
அதென்னய்யா அப்பு அழுக்கு என்றால், எந்த குற்றமும்
செய்யாத, 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற
அரசு ஊழியர் என்று விளக்கம் தருகிறார்கள்.
13 லட்சம் அரசு ஊழியர்களில் முதலமைச்சருக்கு
சேவகம் செய்கிற சிலர் மட்டும் தான் அப்பழுக்கு
அற்றவர்கள் என்றால் முதலமைச்சரின் பார்வையில்
படும் வாய்ப்பு பெறாத துரதிருஷ்டசாலிகளான
மற்ற லட்சோப லட்சம் அரசு ஊழியர்களும்
அழுக்கு படிந்தவர்களா – தகுதி இல்லாத –
தீண்டத் தகாதவர்களா ?
திருக்குறள் 448 சொல்கிறது :
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
இந்த குறளுக்கு கலைஞர் தந்திருக்கும் உரை:
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை
இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக்
கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும்
கெடுவான்.
-இவ்வாறு குறளுக்கு விளக்கம்
சொல்ல வல்லவர்கள் கூட,
நாம் எவ்வளவு இடித்துக்கொண்டே
இருந்தாலும் சிறிதும் சட்டை செய்யாமல்
இப்படி செய்து கொண்டே போகிறார்களே –
இவர்களை எப்படித் திருத்துவது ?
தெரியாமல் நடந்த தவறு என்றால் புரிந்துகொள்ள
முடியும். தெரிந்தே தவறு செய்வதும்,
அதைத் தொடர்ந்து செய்வதும்,
அப்படித்தான் செய்வேன் – நான் செய்வது தான் சரி
என்பதும் …………..
இதற்குப் பெயர் மூர்க்கத்தனம் அல்லவா ?
———————————————-
பட்டியல் –
பிருந்தா நெடுஞ்செழியன் – அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகத்தின் மருமகள். சமூக சேவகர் என்று சான்றிதழ்
கொடுத்தவர் சேலம் தாசில்தார் ஒருவர்.
சூர்யா – அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி.
(சான்றிதழ் – அதே )
ராஜலட்சுமி – அரசு கொரடா சக்கரபாணியின் மனைவி.
சான்றிதழ் – ஒட்டன்சத்திரம் ரோட்டரி கிளப்.
யசோதா – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்
(இவருக்கு சமூக சேவகர் என்று சான்றிதழ்
கொடுத்திருப்பவர் ஒரு கவுன்சிலர் !)
மதிமுக விலிருந்து திமுகவுக்கு வந்த
பழைய அமைச்சர் எல்.கணேசன் –
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி.
கவிஞர் கனிமொழியின் தோழி – கவிஞர் சல்மா
துர்கா சங்கர் – முதல்வரின் செயலாளர் –
ராஜமாணிக்கத்தின் மகன்.
தீபா – முதல்வரின் இன்னொரு செயலாளர்
தேவராஜின் மகள்.
நவீன்குமார் – தேனி கலெக்டர் முத்துவீரனின் மகன்.
வித்யா மற்றும்
சிவசங்கரி – முதல்வரின் பிஆர் ஓ மருதநாயகத்தின் மகள்கள்.
சரவணன் – முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின்
இல்லத்தில் பணி புரிபவர்.
வினோதன் மற்றும்
கணேசன் – முதல்வரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள்.
மீனா – இன்னொரு தனி பாதுகாப்பு அதிகாரி பாண்டியனின் மனைவி.
இளமுகிழ் – (திமுக அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில்
பணி புரிபவர் )
இளந்தென்றல் – மேற்படி இளமுகிழின் சகோதரி.
முரளீதரன் – அண்ணா அறிவாலய ஊழியர்.
நித்தியானந்தன் – முதல்வரின் இன்னொரு உதவியாளர்.
பி.கு.-இன்னும் சில பெயர்களும் கிடைத்துள்ளன.
ஆனால் (என்) பாதுகாப்பு கருதி அவற்றை இங்கு
வெளியிடவில்லை !
————————————————————————————————-
பின் குறிப்பு –
நாளுக்கு நாள் இந்த வலைத்தளத்திற்கு
வருவோர் எண்ணிக்கை அதிகமாகிக்
கொண்டே போவதை நான் அறிகிறேன்.
இது மகிழ்ச்சியைத் தருவதாக
இருந்தாலும் …….
ஒவ்வொரு இடுகையிலும் ஏதேனும்
ஒரு தலைப்பை மையமாக எடுத்துக்கொண்டு
நான் எழுதுகிறேன்.
அநேகமாக – அரசியல், சமூகம்,மற்றும்
பொது நலம் தொடர்புடையதாகவே
அவை இருக்கும்.
நான் எந்த கட்சியையும்
சார்ந்தவன் அல்ல.
தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தில் மட்டுமே
கட்சியைப் பற்றி தீர்மானித்தால் போதும்
என்பதே என் எண்ணம்.
எனக்கு கிடைக்கும் தகவல்களை –
என்னுடைய அனுபவத்தையும்,எண்ணங்களையும்
அடிப்படையாக வைத்து எனக்கு
சரியென்று படுவதை –
என்னுடைய பாணியில் எழுதுகிறேன்.
அதனைப் படிப்பவர்களில் –
அந்த கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள்.
மாறுபட்ட கருத்து உடையவர்களும்
இருப்பார்கள்.
இரு தரப்பினரிடையேயும் அதற்கான
காரணங்களும் இருக்கும்.
இத்தகைய ஒத்த அல்லது மாறுபட்ட
கருத்துக்களை, படிப்பவர்கள் பின்னூட்டங்களில்
எடுத்துக் கூறினால் – மறுமொழி
கூறவும் எந்த தலைப்பிலும்
ஒரு விவாதத்தை உருவாக்கி,
சரியான விளக்கங்களையும்,
பொதுக் கருத்தையும் உருவாக்க
உதவியாக இருக்கும்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும் என்பதே.
(என் எழுத்துக்களின் மூலம் நான் ஒரு
“சீரியஸான ஆசாமி” என்கிற தோற்றம்
உருவாகி விட்டதாகத் தெரிகிறது.
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை !
அனைவரும் சகஜமாக உரையாடலாம்.
என்ன – வெறும் அரட்டையாகி விடாமல்
பயனுள்ள விவாதங்கள் உருவாக வேண்டும்
என்று விரும்புகிறேன் – அவ்வளவு தான். )
எனவே இந்த தளத்திற்கு வருகை தரும்
நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் –
தயவுசெய்து இயன்ற வரையில்
பின்னூட்டங்களை இட முயற்சி
செய்யுங்களேன்.
அது இந்த வலைத்தளத்தை மேலும்
பயனுள்ளதாக்கும்.
உங்களுடைய தளம் சிறப்பாக விபரங்களைத் தொகுத்து கூறியும் ஏன் பின்னூட்டமே அதிகம் வரவில்லை?? காரணம் என்ன?
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்
நன்றி நண்பரே.
நீங்கள் கூறுவது சரியே.
காரணம் தான் எனக்கும் புரியவில்லை.
நாளுக்கு நாள் இந்த வலைத்தளத்திற்கு
வருவோர் எண்ணிக்கை அதிகமாகிக்
கொண்டே போவதை நான் அறிகிறேன்.
இது மகிழ்ச்சியைத் தருவதாக
இருந்தாலும் …….
ஒவ்வொரு இடுகையிலும் ஏதேனும்
ஒரு தலைப்பை மையமாக எடுத்துக்கொண்டு
நான் எழுதுகிறேன்.
அநேகமாக – அரசியல், சமூகம்,மற்றும்
பொது நலம் தொடர்புடையதாகவே
அவை இருக்கும்.
நான் எந்த கட்சியையும்
சார்ந்தவன் அல்ல.
தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தில் மட்டுமே
கட்சியைப் பற்றி தீர்மானித்தால் போதும்
என்பதே என் எண்ணம்.
எனக்கு கிடைக்கும் தகவல்களை –
என்னுடைய அனுபவத்தையும்,எண்ணங்களையும்
அடிப்படையாக வைத்து எனக்கு
சரியென்று படுவதை –
என்னுடைய பாணியில் எழுதுகிறேன்.
அதனைப் படிப்பவர்களில் –
அந்த கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள்.
மாறுபட்ட கருத்து உடையவர்களும்
இருப்பார்கள்.
இரு தரப்பினரிடையேயும் அதற்கான
காரணங்களும் இருக்கும்.
இத்தகைய ஒத்த அல்லது மாறுபட்ட
கருத்துக்களை, படிப்பவர்கள் பின்னூட்டங்களில்
எடுத்துக் கூறினால் – மறுமொழி
கூறவும் எந்த தலைப்பிலும்
ஒரு விவாதத்தை உருவாக்கி,
சரியான விளக்கங்களையும்,
பொதுக் கருத்தையும் உருவாக்க
உதவியாக இருக்கும்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம் –
நல்லதைப் பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி எழுத வேண்டும் என்பதே.
(என் எழுத்துக்களின் மூலம் நான் ஒரு
“சீரியஸான ஆசாமி” என்கிற தோற்றம்
உருவாகி விட்டதாகத் தெரிகிறது.
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை !
அனைவரும் சகஜமாக உரையாடலாம்.
என்ன – வெறும் அரட்டையாகி விடாமல்
பயனுள்ள விவாதங்கள் உருவாக வேண்டும்
என்று விரும்புகிறேன் – அவ்வளவு தான். )
எனவே இந்த தளத்திற்கு வருகை தரும்
நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் –
தயவுசெய்து இயன்ற வரையில்
பின்னூட்டங்களை இட முயற்சி
செய்யுங்களேன்.
அது இந்த வலைத்தளத்தை மேலும்
பயனுள்ளதாக்கும்.
இந்தக் கருத்தை வெளியிடும் வாய்ப்பை
உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு என் நன்றி.
வணக்கம் . உங்கள் பணி மிகவும் சிறப்பானது .மிக்க மகிழ்ச்சி. தைரியாயமாக மனதிற்கு சரியென பட்டதை எழுதுங்கள்.தொரட்டும் உமது சேவை .வாழ்த்துங்கள்
நன்றியுடன்
ஆதித்யா
Vaazhthukkal. very good work. Keep it up
வணக்கம் . உங்கள் பணி மிகவும் சிறப்பானது .மிக்க மகிழ்ச்சி. தைரியாயமாக மனதிற்கு சரியென பட்டதை எழுதுங்கள்.தொரட்டும் உமது சேவை .வாழ்த்துங்கள்
நன்றியுடன் udhaya
valka vazhmudan.your doing verey good social work.all the best.
anbudan seenu
இனி வரும் காலங்களில் இதுபோலவே நடுநிலை தவறாமல் செய்திகளைத் தொகுக்கவும்.
“நொடிகளின் இடைவெளியில் வாழ்ந்தாலும் மின்னலாய் மின்னுவதன்றி அடிமை சாசனத்திற்கு ஒரு போதும் அடிபணிய மாட்டேன்” -மாவீரன் சேகுவேரா.
வாழ்த்துக்கள்.
vazhthukal
வணக்கம். உங்களுடைய இந்த சேவை மிக்க பயனுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பின்னுட்டங்கள் இட்டதில்லை என்றாலும் மனதிற்குள் பாராட்டுவார்கள் கண்டிப்பாக. http://www.savukku.net மூலமாகவும் நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இருவருக்கும் என் போன்றோரின் வாழ்த்துக்கள். இப்படிக்கு, இனியவன்