சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட
தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?
தமிழ்ப் போராளி சீமானை
சிறையில் தள்ளியது
சட்ட விரோதம் என்றும்
கைது ஆணையை பிறப்பித்த அதிகாரிக்கு
சட்டப்படி அதற்கான அதிகாரம் இல்லை என்றும்
இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து
உடனடியாக சீமான் விடுதலையாக
வழி வகுத்துள்ளது.
தன்னால் முடிந்த வரை வழக்கை
விசாரணைக்கு கொண்டு வராமலே
இழுத்தடிக்க முயன்ற அரசின் முயற்சி
இறுதியில் பரிதாபமாகத் தோற்றுப் போனது!
ஜூலை மாதம் 10ஆம் தேதி கைது செய்யப்பட்டு
வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட சீமான்
ஆறு மாதங்களுக்குப் பிறகு நாளை தான்
வெளியுலகத்தைக் காணக்கூடும் –
விடுதலை செய்யப்படக்கூடும்.
சரியாக ஆறு மாதங்கள்.
இந்த ஆறு மாதங்களில்
திரைப்பட இயக்குனரான
சீமான் தன் தொழிலைச்
செய்ய முடியாமல் தடுக்க்கப்பட்டார்.
அவர் பொருளாதார ரீதியாக பெருத்த இழப்பைச்
சந்தித்துள்ளார்.
மனைவி, குழந்தைகளுடன் இருக்க முடியாமல்
பிரிக்கப்பட்டு தனிமைச் சிறையில்
வைக்கப்பட்டார்.குடும்ப வாழ்விலிருந்து
தடை செய்யப்பட்டுள்ளார்.
அவரது கருத்து சுதந்திரம்,
நடமாட்டம் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு
உள்ளன. அரசியல் சட்டம் உறுதியளிக்கும்
அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன.
சிறை வாழ்வு சீமானின் புகழை உயர்த்தி
இருப்பதுடன், அவரது கருத்துக்கள் அதிக அளவு
மக்களைச் சேரவும் உதவி யுள்ளன
என்றாலும்,
சட்ட விரோதமாகத் தன்னைச் சிறையில்
தள்ளிய தமிழக அரசின் மீது சீமான்
இழப்பீடு ( நஷ்ட ஈடு) கேட்டு
வழக்குத் தொடர சட்டத்தில் வழி
இருக்கிறது. அவர் முயற்சி எடுக்க வேண்டும்.
பணத்திற்காக இல்லா விட்டாலும் –
எதிர்காலத்தில் அரசு மீண்டும் இத்தகைய
முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்க
இது அவசியம்.