கனிமொழி வீட்டில் டாடாவிற்கு
என்ன வேலை ?
(தொடர்ச்சி -பகுதி 2)
சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து
கொண்டபோது மகா உத்தமரைப் போல்
ரத்தன் டாடா பேசினார் –
“நான் சில ஆண்டுகளுக்கு முன்னர்
விமான போக்குவரத்து சேவை ஒன்றை
டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க
முயன்றேன்.
அப்போதைய துறை அமைச்சர் என்னிடம்
15 கோடி ரூபாய் கேட்டார்.
அப்படி பணம் கொடுத்து
காரியம் சாதிக்க எனக்கு மனம் வரவில்லை.
ஆனால் தொடர்ந்து 3 பிரதமர்கள்
மாறிய பிறகும்
என்னால் அந்த காரியத்தை சாதிக்க
முடியாமல் அந்த அமைச்சர்
தடுத்துக்கொண்டே இருந்தார் “-என்று.
(ஒரு தொலைக்காட்சி பேட்டியில்
வந்தது இது )
உண்மையில் நான் கூட இந்த ஒலி நாடா
வெளிவரும் வரையில் டாடாவைப் பற்றி மிக
உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருந்தேன்.
அரசியல்வாதிகளுக்கும் -தொழில் அதிபர்களுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை என்பது இப்போது
நிதரிசனமாகத் தெரிகிறது .
என்ன – இவர்கள் செய்வது
நமக்கு தெரிகிறது. அவர்கள் செய்வது வெளியே
தெரிவதே இல்லை !
ராஜா தொலை தொடர்புத் துறை அமைச்சராக
ஆக வேண்டும் என்று டாடா முயன்றதற்கு
வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது.
தயாநிதி மாறன் இந்த துறையை நிர்வகித்து
வந்தபோது, சன் நிறுவனத்திற்கும்
டாடா நிறுவனத்திற்கும் டிடிஹெச்
( டைரக்டு டு ஹோம்) சேவை
விவகாரத்தில் மோதல் இருந்தது. அப்போது
டாடா, மறைமுகமாக தயாநிதி மாறன்
சன் நிறுவனத்திற்கு சாதகமாகத் தன் பதவியைப்
பயன் படுத்துகிறார் என்று குறை கூறி இருந்தார்.
தயாநிதி மாறன் அமைச்சகத்தால்
தனக்கு தொழில் ரீதியாக தொந்திரவுகள்
கொடுக்கப்படுவதாகக் கூறி இருந்தார்.
அதன் பிறகு செல் போன் துறையில் வேறு
டாடா நிறுவனம் நுழைந்து விட்டதால் –
தங்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய ஒருவர்
இந்த துறைக்கு அமைச்சராக வர வேண்டும்
என்பதில் ரத்தன் டாடா ஆர்வம் காட்டி இருக்கிறார்.
ஏற்கெனவே கனிமொழியும்
ராஜா அந்த துறையைப் பெற வேண்டும் என்று
முனைப்பாக இருக்கவே கூட்டணி உருவாகி விட்டது !
இதில் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள
நீரா ராடியா ஒரு மீடியமாக செயல்பட்டிருக்கிறார்.
இன்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல்கள்
முடிந்த கையோடு ரத்தன் டாடா சென்னை வந்து
கனிமொழி-ராசாத்தி அம்மாள் வீட்டில் வைத்து
கலைஞரை சந்தித்து மிக நீண்ட நேரம்
பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
அவருடன் நீரா ராடியாவும்
வந்திருக்கிறார். இருவருக்கும் கனிமொழி
வீட்டில் மதிய விருந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தொழிலதிபர் தன் தொழில் சம்பந்தமாக
முதலமைச்சரை சந்திப்பதில் தவறு ஏதுமில்லை.
இந்த சந்திப்பு முதலமைச்சரின் அலுவலகத்தில்,
அதிகாரிகள் முன்னிலையில் நிகழ்ந்திருந்தால்
முறையாக இருந்திருக்கும்.
ஆனால் தொழிலதிபருக்கு – முதலமைச்சரின்,
இரண்டாவது மனைவியின்,
மகள் வீட்டில்
விருந்து வைப்பதும், அதன் மூலம்
சம்பந்தப்பட்ட தொழிலதிபருக்கு உண்மையான
அதிகார மையம் எது என்பது புரிவதும் …..
பின்னால் ஏற்படும் பல தவறுகளுக்கு
இதுவே காரணமாகி விட்டதே !
மொத்தம் 500 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவிற்கு
ஒலி நாடாக்கள் இருக்கின்றனவாம். இப்போது
வெளியாகி இருப்பவை மிஞ்சிப்போனால்
20 நிமிடங்களுக்கானவையே !
இன்னும் தவணை முறையில் என்னவெல்லாம்
வெளியே வரப்போகின்றனவோ !
வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்து விட்டுப்
போனபோது, இனி –
எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்றார்கள்.
ஆனால் – இந்த மன்னர்களை ஏமாற்ற
இப்பேற்பட்ட மனிதர்கள் எல்லாம் வருவார்கள் என்று –
அப்போது யாரும் சொல்லவே இல்லையே !
அய்யா தங்களது கருத்துக்கள் சமுகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. பணத்தால் பல்லூடகங்களையும் தமக்கு சாதகமாக்கி மக்களை அறியாமையின் விளிம்பிற்கும், போதைக்கும் அடிமையாக்கி விட்டு, ஆட்டம் போடுகிறார்கள்.விழிப்புணர்வை கீழ்தட்டு மக்களுக்கு கொண்டு சென்றால் ஒழிய இதற்க்கு விடிவு இல்லை. பூனைக்கு மணி கட்ட ஓட்டை தவிர வேறு வழி தான் என்ன..? கிராமம்தோறும உண்மை தகவல்கள் கொண்டு சேர்க்க இணையம் தவிர்த்து, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது வேறு வழியில் முயற்சி வேண்டும்.
முன்பு திரு ரஜினிகாந்த் தமிழகத்தை ஆண்டவனால் காப்பாத்த முடியாது என்று, இவரை கொண்டுவந்தார். இன்று இவர்கள் இந்தியாவை காப்பாத்த முடியாத சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வாழ்க சூப்பர் ஸ்டார் ..! வளர்க கழக கண் “மணி ” கள் .
அய்யா தங்கள் கருத்துக்களுக்கு orkut, face book share option கொடுக்கவும்.
ayya please visit this site and add the plug in.
http://wordpress.org/extend/plugins/add-to-any/
தங்கள் ஆலோசனைக்கு
மிக்க நன்றி சிபி ராஜ்குமார்.
-காவிரிமைந்தன்