இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா

இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் –
வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா ?

(கொஞ்ச நாட்களாக சீரியஸாகவே எழுதிக்
கொண்டிருக்கிறேன். இரத்த அழுத்தம் ஏறுகிறது.
எனவே கொஞ்சம்  வித்தியாசமாக -ஒன்றிரண்டு
கட்டுரைகள் – சிரிக்கவும், சிந்திக்கவும் …. )

கடந்த 24ந்தேதி, சென்னை தியாகராயர் அரங்கில்,
ஸ்பெக்ட்ரம் புகழ்  ராஜாவுக்கு வக்காலத்து வாங்கி
“தமிழ் ஊடகப் பேரவை” என்ற அமைப்பின் பெயரில்
ஒரு கூட்டம் நடத்தினார் தன்மானத் தலைவர் வீரமணி.

இந்த கூட்டத்தில் கலைஞர் கருணாநிதிக்கு
“இரண்டாவது அசோகர்” என்கிற பட்ட்த்தைக்
கொடுத்தார். (ஆமாம் அசோகர் – ஆரியர் தான் )

வீரமணி எப்போதுமே கொஞ்சம் சந்தேகப்பட வைப்பவர் !
தலையில் தூக்கி வைத்துக்கொள்வார் –
தொபுகடீரென்று கீழேயும் போட்டு விடுவார் !
திடீரென்று கட்சி மாறி விடுவார்.

ஜெயலலிதாவிற்கே”சமூக நீதி காத்த வீராங்கனை”
என்று பட்டம் கொடுத்தவராயிற்றே !
(ஐந்து லட்சம் பொது மேடையிலேயே
வாங்கிக்கொண்ட பிறகு தான் ) –
கலைஞருக்கு எந்த நோக்கில் புதிய பட்டம்
கொடுக்கிறாரோ என்ற சந்தேகத்தில் சிறிது
சரித்திர பக்கங்களை ஆராய்ந்தேன்.

சந்தேகம் இன்னும் அதிகமாகி விட்டது.
அசோகர் பற்றிய ஆதாரபூர்வமான
சில விவரங்களை கீழே தருகிறேன்.
சில நிஜமாகவே பொருந்துகின்றன !
உங்களுக்கும் சந்தேகம் வரும்.
நீங்களே  பாருங்களேன் –

———————————-

முழுப்பெயர்  -அசோக மவுரியன்

ஆட்சிக்காலம் -273 BC-232 BC

பிறப்பிடம் – பாடலிபுத்திரம்
(இன்றைய பாட்னா- பீகார் )

மனவிகள் 3 பேர் (இவருக்கும் கூடத்தான் )

ராணி பத்மாவதி (இவர் முதல் மனைவி பெயரும் அதே)
ராணி திவ்யரக்சா
ராணி கவுர்வகி

பிராம்மண ராஜதந்திரி சாணக்கியனின் உதவியால்
மவுரிய பேரரசை  உருவாக்கிய சந்திரகுப்த மவுரியரின்
நேரடிப் பேரன் தான் அசோகன்.

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர்.

பிந்து சாரருக்கும் அவரது பிராமண மனைவி ( ? )
சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் அசோகன்.

கலிங்கப் போருக்கு முன்னர் அசோகர் மகா
கொடுங்கோலராக இருந்துள்ளார். தான் பதவிக்கு
வருவதற்காக  தன் சகோதரர்கள்  அனைவரையும்
வஞ்சகமாகக் கொன்றார்.

அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும்
இருந்துள்ளார்.இதனை கிண்டல் செய்த
அந்தப்புர பெண்கள் கழுவில் ஏற்றி
கொன்றுள்ளார்.

கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை
நிர்மூலமாக்கினார் அசோகர்.
அப்போரில் சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில்
கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் புத்த சமயத்தை தழுவி,
சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.

அசோகருக்கு மூத்த  மனைவி  வகையில்
குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.
இதில் குணாளன் அழகு மிகுந்தவர்.
அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான
(சித்தி முறையிலுள்ள )
திவ்யரக்சா என்பவர் ஆசைகொண்டார்.
ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின்
விருப்பதிற்கு இணங்கவிலை.
எனவே, திவ்யரக்சா, குணாளனை வஞ்சகமாக
வெளிநாட்டுக்கு வேலையாக அனுப்பி, அங்கு
தனது ஆட்களை வைத்து கண்களை
குருடாக்கி விட்டார்.
(சிவாஜி நடித்த சாரங்கதரா படம் நினைவிற்கு வருகிறதா ?)

அசோகரின் இறுதிக்காலம்
மிகவும் துன்பமானதாகவும்
தனிமையாவும் அமைந்தது.
இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால்
கடுப்படைந்த ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர்
என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல்
விட்டு விட்டார்.(?)

———————————————
கிட்டத்தட்ட அசோகர் தொடர்புடைய
எல்லா விஷயங்களும் மேலே இருகின்றன.

இதில் எந்த விஷயத்தை முன்னிறுத்தி
கலைஞரை இரண்டாவது அசோகன் என்று
வீரமணியார் சொல்கிறாரோ தெரியவில்லை –
அது வீரமணியாருக்கே வெளிச்சம் !

பாவம் கலைஞர் -வீரமணியார் விளக்கம்
அளிக்கிற வரை அவருக்கே சந்தேகமாகத்தான்
இருக்கும் ! வீரமணியாரை நம்ப முடியாது
என்பது அவருக்கும் தெரிந்தது தானே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திராவிடர் கழகம், பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.