டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !

டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு
ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !

பிபிசி செய்தி –

தில்லி -20 நவம்பர்
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் –
மன்மோகன் சிங்

எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக
இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை
என்றும் மன்மோகன் கூறினார்.

இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள்
யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் நீதிக்கு
முன் நிறுத்தப் படுவார்கள். இதில் யாருக்கும்
எந்த சந்தேகமும் வேண்டாம் என்று அவர்
மேலும் தெரிவித்தார்.

தில்லி – நவம்பர் 19 –


நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருவது
நம்  கலாச்சாரத்தை சீரழிக்கும் !- சோனியா காந்தி

டெல்லியில் இந்திரா காந்தி பெயரிலான
10வது மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு பேசினார்.

நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது.
பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு
விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த
கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை
உருவாக்கினார்கள்.

ஆனால் இப்போது நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி
வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக
மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின்
பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தினமணி செய்தி –

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை
நான் எப்போது எதிர்த்தேன் ? – கருணாநிதி

சென்னை, நவ. 19: 2-ஜி அலைக்கற்றை
விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு
விசாரணைக்குத் தயார் என்று முதல்வர்
கருணாநிதி கூறியுள்ளார். விசாரணையை
ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும்
அவர் கூறியுள்ளார்

—————————————–———————————————

இதை எல்லாம் படித்தால் எனக்கே சந்தேகம்
வருகிறது.

தலைவர்கள் அனைவரும்
லஞ்சத்தை ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார்களே !

இவர்களை மீறி யார் ஊழல் செய்து விடப்போகிறார்கள் –
நாம் ஏன் அநாவசியமாக டென்ஷனாகிறோம் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சோனியா காந்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !

  1. BALAJI சொல்கிறார்:

    கரெக்ட் பாஸ்

    டென்சனே ஆவகூடது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.