(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் –
Dr.சுப்ரமணியன் சுவாமியின்  திறமை கண்டு !!

( முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன் –
பொதுவாக – எனக்கு சுப்ரமணியன் சுவாமியைப்
பிடிக்காது –  காரணம்
இலங்கைப் பிரச்சினையில்  அவரது  நிலையும்
நம்பகத் தன்மை இல்லாத அவரது பேச்சுக்களும் )

இருந்தாலும் அவரது அண்மைக்கால சாதனைகள்
காரணமாக அவரைப் பாராட்டாமல் இருக்க
முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலை முதன் முதலில் வெளிச்சத்திற்கு
கொண்டு வந்தவர்  சுவாமி தான்.
தனி மனிதராக,
விடா முயற்சியுடன்
தொடர்ந்து வழக்காடி, ஆதாரங்களைத் தேடிப்பிடித்து,
அசைக்க முடியாத மலை
போன்ற நிலையில் இருந்த ராஜா கும்பலை
இடித்து தரைமட்டம்
ஆக்கிய அவரது சாமர்த்தியத்தை பாராட்டாமல்
இருக்க முடியவில்லை.

இதற்கு மெருகூட்டுவது போல் இன்னொரு
நகாசு வேலையும் பண்ணி இருக்கிறார் –
விஷயம் பத்திரிக்கைகளில் பெரிதாக
வெளிவரவில்லை.

பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார்.
ராஜினாமா செய்த ராஜாவிடம் நிறைய பெரிய
மனிதர்களின் ரகசியங்கள் சிக்கி உள்ளன.
அவர் கைது செய்யப்பட நேர்ந்தால், ரகசியங்களை
வெளியிட்டு விடுவார் என்பதால் – ராஜா உயிருக்கு
ஆபத்து இருக்கிறது.  எனவே அவருக்கு உச்சகட்ட
பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்பதே
கடிதத்தின் சாராம்சம்.

என்ன இது மடத்தனம். யாருக்கு  காவல் ?
கொள்ளைக் காரர்களுக்கு  பாதுகாப்பா ?
– என்று நினைக்கலாம்.

சிறிது யோசித்தால்  விளங்கும்.
ராஜாவிடம் டிப்ளமாடிக் பாஸ்போர்ட்
இன்னமும் இருக்கிறது. விசாரணை ஆரம்பிக்கும்
முன்னரே  வெளியேறி விடக்கூடும்.
எந்த நிமிடமும் வெளிநாட்டிற்கு தப்பி விடலாம்.
எனவே  பாதுகாப்பு என்கிற போர்வையில்
ராஜாவைக் காவலில் வைத்திருக்க
இந்தக் கடிதம் உதவும் !

பெரும்பாலானோருக்கு சுப்ரமணியன் சுவாமியைப்
பற்றி  அதிகம்  தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே  சில  விவரங்கள் –

பெயர்  –  சுப்ரமணியன் சுவாமி
வயது – 71 (15/09/1939 )
படிப்பு – பொருளாதாரத்தில் டாக்டரேட் (ஹார்வர்டு

பல்கலைக்கழகம் , அமெரிக்கா )
இந்தி மொழியில்  மிக நன்றாக உரையாற்றக் கூடியவர்.
சீன மொழியில்   நல்ல புலமை உடையவர்.

தொழில் –  அரசியல்வாதி
மற்றும்   பொருளாதாரப்  பேராசிரியர்
(அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது  – visiting

professor  Harward University,  USA )

மிகவும் பிடித்த தொழில் –
அதிகாரத்தில் இருக்கும்
அரசியல்வாதிகளை வெறியேற்றுவது!

மிகவும் தைரியசாலி. எமெர்ஜன்சியின் போது,
அவருக்கு எதிராக கைது வாரண்ட்  இருந்தபோதே,
திடீரென்று பாராளுமன்ற கூட்டத்தில் தோன்றி,
இந்திரா காந்தியின்  முன்னிலையிலேயே –
அப்போதைய உள் துறை அமைச்சரிடம் –
என்னைப் பிடியுங்கள் பார்க்கலாம்
என்று சவால் விட்டு விட்டு  தலைமறைவாகி
தப்பித்துப் போனபோது  எனக்கு அவரை மிகவும்
பிடித்திருந்தது.

1974 முதல் 1999 வரை  ஐந்து முறை பாராளுமன்ற
மக்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
( இரண்டு முறை மும்பையிலிருந்தும், இரண்டு முறை
உத்திரப் பிரதேச்த்திலிருந்தும், ஒரு முறை
தமிழ் நாட்டிலிருந்தும் )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to (hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!

 1. ramanans சொல்கிறார்:

  நண்பரே..

  வணக்கம். இவ்வளவு குறிப்பிட்டிருக்கும் நீங்கள் டாக்டர் சுவாமியின் இணையதளம் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன். சோனியா காந்தி பற்றிய கட்டுரையைப் படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்!

  இதைக் கண்டு காங்கிரஸ் வட்டாரம் + சோனியா , மௌனமாக இருப்பதிலிருந்தே உண்மை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

  http://www.janataparty.org/sonia.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ஏற்கெனவே படித்து விட்டேன்.

   இதைப் பற்றி எழுத வேண்டியவை
   நிறைய இருக்கின்றன.

   சுவாமி எழுதியதிற்கு மேலும் …..

   நேரம் வரும். நிறையப் பேசலாம்/
   எழுதலாம் நண்பரே.

   வருகைக்கு நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.