உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

உங்கள் குடும்பத்தில்  ஒரு
பெண்ணுக்கு –  இது நிகழ்ந்திருந்தால்
நீங்கள்  எப்படி யோசிப்பீர்கள் ?

(எனது நேற்றைய இடுகைக்கு ஒரு
வாசக  நண்பர் எழுதி இருந்த
மடல் காரணமாக  – இன்று  இதை
நான் எழுத வேண்டியதாயிற்று !
இந்த பதிலை எல்லாரும் படிக்கட்டும்
என்று தான் தனி இடுகையாகப்
போட்டு விட்டேன் )

நம் நாட்டு சட்ட திட்டங்களும்,
நீதிமன்ற நெறிமுறைகளும்,
நடைமுறை  சிக்கல்களும் –

குற்றவாளி தண்டிக்கப்படுவதையோ,
விரைவில் தண்டனை கிடைப்பதையோ,
உறுதி செய்யும் வகையில் அமையவில்லை.

இந்தியன் பீனல் கோட்,
கிரிமினல் ப்ரொசீஜர் கோட்,
எவிடென்ஸ்  ஆக்ட் –  பிரிவுகளின்படியும்,

முதலில் செஷன்ஸ் கோர்ட்,
பின் ஹை கோர்ட்,
அதன் பின் சுப்ரீம் கோர்ட் – என்கிற வரிசையிலும்,

ஏற்கெனவே வரிசையில் காத்துக் கிடக்கும்
ஆயிரக்கணக்கான  வழக்குகள் –

வக்கீல்களின்  வாதத் திறமை,
அரசியல்வாதிகளின் செல்வாக்கு,
ஆளும்கட்சியின்  அருகாமை,
(அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி )
பண பலம் – இத்தனையையும் தாண்டி

குற்றவாளி தண்டிக்கப்படுவது அரிதாகி வருகிறது !

நம் கிரிமினல் சட்டத்தின் அடிப்படையே –
100 குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை –
ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது தான்.
எனவே தான் இத்தகைய நடைமுறைகள் !

எப்படியும் தப்பி விடலாம் என்கிற நம்பிக்கை
இருப்பதால் தான் குற்றவாளிகள் அதிகரிக்கிறார்கள்.
குற்றங்கள் அதிகரிக்கின்றன.

எனவே, நமது சட்டங்களில்,  நடைமுறைகளில்
மாற்றம் ஏற்படும் வரையில் –

தவறு செய்தால் –
தண்டனையிலிருந்து தப்ப முடியாது
என்கிற பயம் சமுதாயத்தில் உருவாக வேண்டும்.
இந்த பய உணர்ச்சி ஒன்று தான்
சமூகத்தை நிம்மதியாக  வாழ விடும்.

வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல், துணிந்து,
மனசாட்சிப்படி நடக்கும் காவல் துறை
உயர் அதிகாரிகள் தான் நமது இன்றைய தேவை.
சமுதாய நலன் கருதி அவர்களை ஊக்குவிப்பது
நமது கடமை.

(தவறான வழியில் செல்லும் அதிகாரிகளை –
மக்கள்  விழிப்புணர்வுடன் இருந்தால் –
தடுத்து விடலாம்.)

———————————————————————
வினா எழுப்பிய நண்பரே  – உங்களுக்கு மிகவும் வேண்டிய   ஒரு குடும்பத்தில் , உங்களுக்கு மிகவும்  பழக்கமான  ஒரு பெண்ணுக்கு –  இது நிகழ்ந்திருந்தால்
நீங்கள்  எப்படி யோசிப்பீர்கள் ? அப்போதும்
இந்த கேள்விகளை எல்லாம் எழுப்புவீர்களா ?

யோசியுங்கள் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருட புராணம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

 1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

  —-

  இதைதான் நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் நண்பா. இன்று அந்தப் பெண்ணிற்காக நடந்த என்கவுன்டர் நாளை என் குடும்பத்திலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் நடக்கும் என்று மக்கள் நம்புவார்கள். ஆனால் அரசியல் பின்புலம் உள்ள குற்றவாளிகளுக்கு இங்கு காட்டப்படும் சலுகைகள் உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்கும் போது சட்டம் சரிவர இயங்கவில்லை. நானே அதற்கு தண்டனை தருகிறேன் என்று எல்லோரும் துணியக் கூடும்.

  மக்களின் முழு ஆதரவு இருக்கும் போதே சட்டத்தினை இன்னும் கடுமையாக மாற்றலாம். அதைவிட்டுவிட்டு இப்படி நடந்து கொள்வதால், முறையான சட்டத்தால் ஒன்றுமே செய்ய முடியாது என மக்களுக்கு சட்டத்தில் மீதிருக்கின்ற அவநம்பிக்கை பெருகி போகும். அதை மட்டுமே நான் இங்கு சுட்டி காட்டுகிறேன்.

  நீங்கள் அவருக்காக அளித்த பதிலுக்கு என்னுடைய கருத்து இதுவே!.

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  தங்களுடைய குடும்பத்திற்காக தாங்களே சட்டத்தினை கையில் எடுத்துக்கொள்ள மக்கள் துணிவார்களா. என்று கேள்வி எழுப்ப வேண்டாம். வாய்ப்புகளும் இதுபோல நடந்த சம்பவங்களும் அதிகம்.

  நாம் சட்டத்தினை வலுசெய்ய வேண்டிய நேரம் என்றுதான் தோன்றுகிறது. அதற்கான கோரிக்கையை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய சரியான தருனமிது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.