மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா –
சுப்ரீம் கோர்ட் கண்டனம் –
தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை !
2 G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு
ஏற்பட்டுள்ள 1,32,652 கோடி ரூபாய் இழப்பு
சம்பந்தமாக தில்லி சுப்ரீம் கோர்ட்டில்
தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கை
விசாரிக்கும்போது, நேற்றைய தினம் (29/10/2010)
நீதிபதிகள் மத்திய அரசுக்கும்,
சிபிஐ க்கும், அமைச்சர் ராஜாவுக்கும் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ காட்டும் மெத்தனத்தை
கண்டித்து, ஏற்கெனவே ஒரு வருடம் கடந்து விட்ட
நிலையில் சிபிஐ விசாரணையில் எந்த வித
முன்னெற்றமும் இல்லையே – இன்னும்
10 வருடம் விசாரித்துக் கொண்டே
இருப்பீர்களா ?
மேலும் அமைச்சர் ராஜா அதே பதவியில் இன்னும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார் –
சட்டம் இப்படித்தான் செயல்படுமா ?
மத்திய அரசு செயல் படும் விதம் இதுதானா ?
அவரிடம் இன்னும்
சிபிஐ எந்த விசாரணையையும்
ஏன் மேற்கொள்ளவில்லை ?
எல்லா வழக்குகளிலும் இப்படித்தான்
செயல்படுகிறீர்களா ? இதில் மட்டும் ஏன்
இப்படி மெத்தனம்?
என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வழக்கு நவம்பர் 15ந்தேதி மீண்டும்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும்
அன்றைய தினம் இது குறித்து மத்திய அரசின் நிலை
பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும்
நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள்.
ஆச்சரியப்படும் விதமாக, அநேக தமிழ்
பத்திரிகைகளில் இந்த செய்தி வரவே இல்லை.
வெளிவந்த ஒன்றிரண்டு பத்திரிகைகளில்
இதற்கு எந்த முக்கியத்துவமும்
கொடுக்கப்பட வில்லை –
முழுமையாகவும் செய்தி போடவில்லை.
இத்தகைய செய்திகள் வெளிவராமல் கலைஞர்
எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பது வியப்பாகவே
இருக்கிறது !