அசுர வேகத்தில் தப்பான செயல்கள் – கலைஞரின் புதிய மதுபான தொழிற்சாலைகள் !

அசுர வேகத்தில் தப்பான செயல்கள் –
கலைஞரின்  புதிய மதுபான தொழிற்சாலைகள் !

தமிழ் நாட்டில் உள்ள ஒன்றிரண்டு பத்திரிகைகளைத்
தவிர மீதி அத்தனையும்  அரசுக்கு அடங்கிக்
கிடக்கின்றன.காரணம் –
பணமா – பயமுறுத்தலா – தெரியவில்லை.

ஒரே ஒரு இதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
அவசர அவசரமாக கடந்த  ஒரு மாத காலத்துக்குள்
நான்கு புதிய மதுபானத் தொழிற்சாலைகள்
துவங்க அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஏற்கெனவே  கலைஞர் அரசில் புதிதாக அனுமதி
கொடுக்கப்பட்ட 5 தொழிற்சாலைகளையும் சேர்த்தால்
மொத்தம் 9 ஆகிறது.

புதிதாக துவங்கப்படும்
மற்ற தொழிற்சாலைகளைப் பற்றி அவ்வப்போது
அறிவித்துக்கொண்டே இருக்கும் அரசு இந்த
தொழிற்சாலைகள் புதிதாக
வருவதைப்பற்றிய செய்தியை   மட்டும்
மர்மமாக வைத்திருப்பது ஏன் ? புதிய வேலை
வாய்ப்புகள் உருவாவதில் மக்கள்  மகிழ்ச்சி தானே
அடைவர் !

காரணம்  இருக்கிறது.
புதிய தொழிற்சாலைகளுக்கு யார் உண்மையான
சொந்தக்காரர்கள்
என்று வெளியே  தெரிந்தால்  அரசியல் வாழ்வு
சிக்கலாகி விடும் !

ஒருவர் உளியின் …  படத்தயாரிப்பாளர் !
இன்னொருவர்  மத்திய அமைச்சகர்  …  ரட்..கன்.
(இது வாலாஜா அருகே )
மற்றுமொருவர் முன்னாள் கப்பல் அமைச்சரின் மகன்.
( இது திருவாரூர் அருகே)
இப்போது கடைசியாகச் சொல்லப்போகும்
நபர் தான் புதிய விஐபி –
கலைஞர் தொலைக்காட்சியின்
நிர்வாக இயக்குனர் — கும்மிடிப்பூண்டியில் புதிய
தொழிலைத் துவங்குகிறார்.
இவர் பினாமி. இவ்வளவு முதலீட்டுக்கு
இந்த மேனேஜர் எங்கே போவார் ?  ஒரிஜினல் ஓனர்
யார் என்பது அவருக்கே  சொல்லப்படவில்லையாம் !

இந்த செய்திகள் இன்னும் மறுக்கப்படவில்லை.
ஆசிரியர் எப்போது உள்ளே போவாரோ தெரியவில்லை!

குடிமகன்கள்  பெருகி விட்டார்கள் –
தேவை  அதிகரிக்கும்போது
புதிய தொழிற்சாலைகள் வருவதில் தவறு என்ன
என்று  கேட்கப்படலாம். பணமும், செல்வாக்கும்
உள்ளவர்கள்  புதிய தொழில்களைத் துவக்குவது
சகஜம் தானே  என்றும் கேட்கப்படலாம்.
உண்மை தான்.

நான்  என்ன சொல்ல வந்தேன் என்றால்  –
கலைஞர் அண்மையில் மதுக்கடைகளை
மூடுவதைப்பற்றி
தீவிரமாக யோசித்து வருகிறேன்
என்று அறிவித்தாரே –
அதை  சீரியசாக  எடுத்துக்கொண்டு சில
தமிழ்க் குடிமகன்கள்  மிகவும் கவலையுடன்
ஒவ்வொரு நாளையும் திகிலுடன் கழிக்கிறார்கள்.

அவர்களுக்கு இந்த செய்தி தெரிந்தால் மிக்க
மகிழ்ச்சி அடைவார்களே என்று தான்.நான் இந்த
இடுகையை எழுதுவதும் அவர்கள் நிம்மதிக்காக
மட்டும் தான் !

மற்றபடி   கலைஞர் அரசைக் குறை கூறி விட்டு
உள்ளே போக  எனக்கென்ன ஆசையா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.