பசி வந்தால் பத்தும் பறந்து போகும் –
கலைஞருக்கு பயம் வந்தால் ? –
பகுத்தறிவு பறந்து போகும் !
தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி 1000 ஆண்டுகள்
நிறைவடைவதையொட்டி இந்த மாதக்கடைசியில்
கோவிலில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள்
நடைபெறவிருக்கின்றன.
உலக அளவில் பேசப்படும் அளவிற்கு
1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும்
நிகழ்ச்சி ஒன்றை நடனக் கலைஞர் பத்மா
சுப்ரமணியம் அறிவித்தார்.
கலைஞர் இல்லாமல் இவ்வளவு பெரிய விழா
நடக்கலாமா ? இந்த விழாவை தமிழக அரசே
ஏற்று நடத்தும் என்றும், தாமே விழாவிற்கு
தலைமை தாங்கி நடத்தப் போவதாகவும்
கலைஞரே அறிவித்து விட்டார்.
(கவிஞர் கனிமொழி இல்லையா
என்று கேட்டு விடாதீர்கள் – கனிமொழி
தான் விழாவினைத் துவக்கி வைக்கப்போகிறார் !)
விழாவினையொட்டி கோயிலுக்குள் செல்ல
வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
பெரிய கோவிலைப்பற்றி ஏற்கெனவே ஒரு
அழுத்தமான நம்பிக்கை பரவலாக உள்ளது.
ஆட்சியில் உள்ள பெரிய தலைவர்கள் யாராவது
அதன் பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால்,
அவர்கள் வகிக்கும் பதவிக்கோ, உயிருக்கோ
கேடு வரும் என்பதே அது.
இதை உறுதிப் படுத்துவது போல் சில பழைய
நிகழ்வுகளும் உண்டு.(இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் ).
கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
பிரதான வாயில் வழியாகச் செல்ல பயம்.
(என்ன பயம் என்று கேட்காதீர்கள் – )
என்ன செய்வது ?
சே – கலைஞர் அனுபவத்திற்கு இதெல்லாம்
ஒரு பிரச்சினையா என்ன ?
சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கலைஞருக்காக
புதிய நுழை வாயில் ஒன்று அவசர அவசரமாக
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது !
வாழ்க பகுத்தறிவு !
சூப்பர். ஆனா எப்பவுமே அவர பகுத்தறிவாதின்னு தானே எல்லரும் எழுதுறீங்க. அதான் சிப்பு சிப்பா வருது.