திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி

திருமாவளவனின்  இரட்டைக் குதிரை சவாரி

ஒரு பேட்டியில் விடுதலைச்சிறுத்தைகள்
தலைவர் தொல். திருமாவளவன் கூறுகிறார் –


———————————–
சில தினங்களுக்கு முன் என்னைச் சந்திக்க
சால்வை போர்த்தியபடி ஒரு இளைஞர் வந்திருந்தார்.
17 அல்லது  18 வயதுதான் இருக்கும்.

“உஙளைப்பார்க்க வேண்டும் என்பது
என் நெடுநாள் ஆசை!” எனச்சொன்ன  அவரிடம்
கைகுலுக்கும் விதமாகக் கை நீட்டினேன்.

அவர் சிரித்தார்.சால்வை விலக ….ஒரு
கணம் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அவருக்கு
இரு கைகளும் இல்லை. கைகள் இரண்டும் பிய்த்து
எறியப்பட்டதைப்போல தோள்பட்டைகள் இருந்தன.

நான் பதறிப்போய் விசாரித்ததும் சிரிப்பு மாறாமல்,
“அண்ணா, நான் ஈழத்தில் இருந்து வருகிறேன்”
என்றார்.
போரில் கைகளை இழந்து, சிகிச்சை முடிந்து
தட்டுத்தடுமாறி இந்தியா வந்து என் முன்பு நின்ற
அவரிடம், “தம்பி, ஏதாவது உங்களுக்கு
உதவி வேண்டுமா?” எனக்கேட்டேன்.

“உதவ வேண்டிய நேரம்
கடந்து விட்டது அண்ணா” என்றார்.

அந்த வார்த்தைகளின் வலி, நித்தமும்
என் நித்திரையைக்
கொன்று கொண்டு இருக்கிறது”
———————————–

மனசாட்சியைத் தொலைத்தவர்களுக்கு
நித்திரையும்  தொலைந்து தான் போகும்.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் திருமா –
நேரம் கடந்ததற்கும்,  நேரத்தைக் கடத்தியவர்களுக்கும்
நீங்களும்  துணை போனது தானே  உண்மை ?

ஈழத்தமிழர்களிடையே செல்வாக்கைத் தக்க
வைத்துக்கொள்ள வேண்டும் – அதே நேரத்தில்
அரசியல் எதிர்காலம்  பாதிப்படையும் என்கிற
சுயநல நோக்கு காரணமாக – கலைஞரையும்
அனுசரித்துப்போக வேண்டும்  என்றால்
எப்படி முடியும் திருமா ?

இரட்டைக் குதிரைகளின் மீது எத்தனை நாட்கள் தான்
சவாரி செய்ய முடியும் ? எதாவது ஒரு குதிரையை
விட்டு விடுங்கள் !

இல்லையேல் –                    விழுந்து  விடுவீர்கள்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பேரழிவு, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to திருமாவளவனின் இரட்டைக் குதிரை சவாரி

 1. யா சொல்கிறார்:

  இவர்களின் திருகுதாளங்கள் தூரோகங்களை முள்ளிவாய்கால் அன்று குருடாகவும் செவிடாகவும் இருந்த போது அறிந்தோம். அதன் பின் கொலைவெறியன் மஹிந்தனுக்கு பொன்னாடை போர்த்தி காலில் விழுந்த போது புரிந்தோம். விழித்துக் கொண்டோம். அந்த இளைஞனிடம் கைகளில்லாததற்கு இவர்களின் அரசியலும் ஒரு காரணம். அதையும் புரிந்து கொள்ளட்டும்.

 2. அரசியல் என்ற நிலைப்பாட்டில் ஜவாஹிருல்லாவும் திருமாவும், இராமதாசும் ஒன்றே.

  ஈழப் பிரச்சனைகளில் திருமா இரட்டைவேசம்,
  இஸ்லாமியர்களை ஒழித்துவிட துடிக்கும்
  பார்பாணியத்தின் மோகினி பிசாசுடன் தேர்தலுக்கான கல்ல உறவுக்கு தயாராகும் ஜவாஹிருல்லா,
  யாருடன் வேண்டும் என்றாலும் கூட்டணி என
  முந்தானை விரிக்கும் இராமதாசு…

  மேற்படி தலைவர்கள் தேவையான அரசியல் நியாயகாரணங்களை தயாராக
  வைத்திருப்பார்கள்..

  ”அரசியல் என்பதே எண்ணிக்கை விழையாட்டே!!!
  அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை!!! , நிரந்தர நண்பர்களும் இல்லை!!!
  தொகுதி உடன்பாடு வேறு ,அரசியல் கூட்டணி வேறு!
  அரசியலில் எதுவும் நடக்கலாம்!!!
  ஓட்டு போடுவது மட்டும் தான் நம் வேலை.
  கேள்வி கேட்பவர்கள் எதிரிகளாக கருதப்படுவார்கள்..
  பல பேரிடம் படுத்து உயிர் வாழும் விலை மாதுவுக்கு கூட சில தார்மிக நியாய தர்மங்கள் இருக்கலாம்,
  ஜனநாயகத்தில் என்ன மிஞ்சியிருக்கிறது??

 3. samaththuvan சொல்கிறார்:

  ஈழம் வெல்ல வேண்டும் என்றால் நமக்கு உலக நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் உதவி மிகவும் முக்கியம் காரணம் ஆசிய கண்டத்தில் மிக பெரிய இரண்டு நாடு ஒன்று சீனா இன்னொன்று இந்தியா சீனாகாரன் எப்பொழுதும் தமிழ் ஈழத்திற்கு துணையாக வரபோவது இல்லை காரணம் சிங்களவனும் சினாகரனும் மதத்தால் ஒன்று, இந்தியா உதவலாம் அந்த அடிப்படையில் தான் இந்திராகாந்தி ஈழத்திற்கு உதவினார் ஆனால் ராஜீவ் உதவவில்லை காரணம் ராஜீவிற்கு கூட இருந்து ஆலோசனை சொன்ன நபர்கள் தமிழ் இன துரோகிகள் தமிழ் வளர்ச்சி பிடிக்காத சுப்பிரமணியன் சாமி போன்ற போன்ற பார்பன அதிகாரிகள் அதனால் தான் பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்தும் பி ஜே பி அரசுகூட இந்தியாவில் இருந்த பொழுது, ஈழம் வெல்ல முடியாமல் போனது இப்படி இருக்க ராஜீவ் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக ஒருபோதும் செயல்படவில்லை இருந்தும் திருமா காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த காரணம் ஒரு சில ராஜதந்திர செயல்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் அரசின் ஆதரவை பெறலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததை நாம் சோனியாவின் தமிழக வருகையின் பொழுது திருமா மேடையில் கெஞ்சி கேட்டுகொண்டதே நமக்கு உணர்த்தும் அதே போன்று போர் நடைபெறும் நேரத்தில் திருமா காங்கிரசோடு கூட்டணி வைத்துகொன்ண்டது என்பது அடுத்த ஓரிரு நாளில் போர் முடிவுறும் என்றுஈழம் வெல்ல வேண்டும் என்றால் நமக்கு உலக நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் உதவி மிகவும் முக்கியம் காரணம் ஆசிய கண்டத்தில் மிக பெரிய இரண்டு நாடு ஒன்று சீனா இன்னொன்று இந்தியா சீனாகாரன் எப்பொழுதும் தமிழ் ஈழத்திற்கு துணையாக வரபோவது இல்லை காரணம் சிங்களவனும் சினாகரனும் மதத்தால் ஒன்று, இந்தியா உதவலாம் அந்த அடிப்படையில் தான் இந்திராகாந்தி ஈழத்திற்கு உதவினார் ஆனால் ராஜீவ் உதவவில்லை காரணம் ராஜீவிற்கு கூட இருந்து ஆலோசனை சொன்ன நபர்கள் தமிழ் இன துரோகிகள் தமிழ் வளர்ச்சி பிடிக்காத சுப்பிரமணியன் சாமி போன்ற போன்ற பார்பன அதிகாரிகள் அதனால் தான் பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்தும் பி ஜே பி அரசுகூட இந்தியாவில் இருந்த பொழுது, ஈழம் வெல்ல முடியாமல் போனது இப்படி இருக்க ராஜீவ் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக ஒருபோதும் செயல்படவில்லை இருந்தும் திருமா காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த காரணம் ஒரு சில ராஜதந்திர செயல்களை உள்ளடக்கியதாக இருக்கலாம் அரசின் ஆதரவை பெறலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததை நாம் சோனியாவின் தமிழக வருகையின் பொழுது திருமா மேடையில் கெஞ்சி கேட்டுகொண்டதே நமக்கு உணர்த்தும் அதே போன்று போர் நடைபெறும் நேரத்தில் திருமா காங்கிரசோடு கூட்டணி வைத்துகொன்ண்டது என்பது அடுத்த ஓரிரு நாளில் சரியாக கணிக்காமல் அவர் புலிகள் தொடர்ச்சியாக போரை நடத்துகிறார்கள் அந்த சுழலில் காங்கிரஸ் மினாரிட்டியாக வென்றால் ஈழம் ஆதரவு என்ற நிபந்தனையோடு காங்கிரசுக்கு ஆதரவு தரலாம் என்று எண்ணியிருப்பார் ஆனால் விதி தேர்தல் முடிவு வரும் முன்னரே ஈழம் அழிந்து விட்ட நிலையில் திருமா ஈழ ஆதரவாளராக காட்டிகொண்டால் அவருக்கு என்ன இலாபம்? ஈழ ஆதரவாளராக இருந்த வைகோவே தோல்வியை சந்தித்தார் அப்படி இருக்க ஈழ ஆதரவு என்ற நிலையில் திருமா வெற்றி தோல்வி என்று சிந்திக்காமல் தொடர்ந்து ஈழ ஆதரவு நிலையில் உள்ளார் இதற்க்கு காரணம் தேர்தல் அல்ல உண்மையான ஈழபற்றே. திருமா கூட்டணியில் இருந்ததனால் தான் ஈழத்தில் நடந்த போற்குற்றத்தை நேரில் பார்த்து வெளிச்சம் போட்டு சொன்னார். இன்றும் கூட்டணியில் இருந்துகொண்டு குரல் கொடுக்கிறார். இந்த போராட்டத்தில் எத்தனை பேர் உயிர் போனாலும் ஈழம் பிறக்காது திருமா உயிருக்கும் மதிப்பு இல்லை — திலீபன் தொடங்கி முத்துகுமார் வரையில் செய்த உயிர் தியாகம் போற்றுதற்குரியது அதே வேலை நாம் உலகநாடுகளின் ஆதரவை பெற்று நமது துயரங்களை வெளி உலகிற்கு உணர்த்தினால் மட்டுமே ஒரு சில அமைத்தி போராட்டத்திற்கு பிறகு ஈழம் மலரும் அந்த அடிப்படையில் தான் திருமாவின் போராட்டங்கள் தொடர்கின்றது அதை அடிப்படையாக கொண்டுதால் கருத்துரிமை மீட்பு மாநாடு / தமிழ் ஈழ அங்கிகரமாநாடு / இனவிடுதலை அரசியல் மாநாடு / தமிழர் இறையாண்மை மாநாடு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.