இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் !


இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் !


அண்மையில் நடந்த, கலைஞரைப் புகழ்ந்து
எழுதப்பட்ட கலைஞர்-87 என்கிற
புத்தக வெளியீட்டு விழாவில்
கலைஞர் முன்னிலையில் –
பார்த்திபன்  பேசியது –

“என் பார்வையில் கலைஞரும் ஒரு மகாவிஷ்ணு தான்.
விஷ்ணுவை சக்கரத்தாழ்வார் என்பார்கள்.
கலைஞரும் கால்களில் சக்கரத்தைக் கட்டியபடி
தமிழகத்தை ஆள்பவர் (முதல்வரின் சக்கர
நாற்காலியைக் காட்டுகிறார்!)

அந்த விஷ்ணு நவக்கிரக அதிபதி …
அதே போல்தான், கலைஞரும் கூட்டணிக்
கிரகங்களுக்கு அதிபதி.

மகா விஷ்ணு சூரிய கிரீடம் கொண்டவர்.
கலைஞரும் சூரியனையே சின்னமாகக் கொண்டவர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தை
கோட்டூர்புரத்தில் கட்டப்போவதாக கலைஞர்
சொல்லி இருக்கிறார்.
அது வடிகட்டிய பொய்…
அது இந்தியாவின் இரண்டாவது
பெரிய நூலகம் தான்.
முதல் பெரிய நூலகமே நீங்கள் தானே !”

————

உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் –
அதையும் வெளிப்படையாகச் சொல்லி
விடுங்களேன் பார்த்திபன் – இப்போதே
கேட்டால் தான் உண்டு ! இல்லையேல்
அடுத்து  பேசுபவர் உங்களை மிஞ்சி விடுவார் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சினிமா, செம்மொழி, தமிழீழம், தமிழ், நடிகர் டைரக்டர் பாரத்திபன், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.