தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!

தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட
கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!

தேர்தல் ஆணையத்திடம் அறிவித்த தகவலின்படி,
கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு எட்டு கோடி
ஐம்பத்து ஆறு லட்சமாம் ! வார இதழ் ஒன்றில்
இன்று வெளிவந்திருக்கிறது இந்த தகவல்.

கனிமொழி அவர்கள் பெரிதாக சம்பாதிக்கும்படி
தொழில்கள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.
வேறு வழிகளிலும் அவருக்கு வருமானம் வர
வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை !

எனவே அநேகமாக இது கலைஞர் தன் மகளின்
எதிர்கால பாதுகாப்பிற்காக செய்த ஏற்பாடாக
இருக்கலாம் !

அண்மையில் செம்மொழி உலகத் தமிழ் மாநாட்டில்,
திமுக தலைவர் ஒருவர் பேசும்போது தனக்கென்று
இருந்த ஒரே வீட்டைக்கூட தானம் செய்த – இருக்க
இடம் இல்லாத ஒரே தலைவர் -முதலமைச்சர்
கலைஞர்  தான் என்று மிகக் கவலையுடன் சொன்னார்.

இப்போது வந்துள்ள தகவலின்படி, இந்த மகளுக்கு
செய்துள்ள ஏற்பாடு பற்றி தெரியவருகிறது.

எவ்வளவு பெரிய குடும்பம் ! குடும்பத்தில் உள்ள
மற்ற உறுப்பினர்களுக்கும் தகுந்த ஏற்பாடு –
பாதுகாப்பு செய்யாமலா இருந்திருப்பார் ?

பாவம் –  தான் ஒருவர்  திரைக்கதை வசனம் எழுதி
சம்பாதித்த பணத்தில் தான் அவருக்கு
எத்தனை எத்தனை பொறுப்புகளை
நிறைவேற்ற வேண்டி இருக்கிறது !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திரம், சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.