கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில்
பார்த்த  விஜய்காந்த் !


கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக்
கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும்,
அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும்
கூறி இருக்கிறார்  விஜய்காந்த் !!

திண்டிவனத்தில் 27/08/2010 அன்று  ஒரு
திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது –

“கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன்
அந்த மஞ்சள் துண்டை தோளில் அணிந்திருக்கிறார் ?
அந்த துண்டையும், கையில் சிவப்புக்கல் வைத்த
பவழ மோதிரமும் அணிந்திருக்கிறாரே – இரண்டையும்
தூக்கிப் போடட்டும் பார்க்கலாம்.

தினமும் காலையில் வீட்டை விட்டு வெளியே
வரும்போது  அவர் வீட்டுக்கு எதிரில் இருக்கும்
கிருஷ்ணர் கோயிலின்  அருகில் நின்றபடி ஒருவர்
கும்பிடுவார்.  முதல்வரும் அவருக்கு பதில் வணக்கம் செலுத்துவது போல் கிருஷ்னரை
பார்த்து கும்பிடுவார்.

ஒரு முறை நானே  நேரில் பார்த்தேன்.
வீட்டின் கதவு திறந்தவுடன் ஒரு போலீஸ்காரர்
ஓடி வந்து எலுமிச்சம் பழம் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு,
கிருஷ்ணரைப்  பார்த்து கும்பிட்டார்.

அப்போது தான் எனக்கே தெரிந்தது அவரின்
மறுபக்கம்.
அது தெரிந்த பிறகுதான் நான் அவரிடமிருந்து
விலகினேன்.”

விஜய்காந்த்  சொல்வது நிஜமாக இருக்குமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆத்திகன், ஆன்மிகம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !

  1. raj சொல்கிறார்:

    his wife comes to malaysia hindu temples to pray but he talksabout no hindu god,he cant even stop the family how he going to stop the country?

  2. விஜயகாந்த் ஐயாவுக்கு என்னாச்சு? ஒரே காமெடியா பேசுராரே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.