“அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி
அம்மாள் பற்றி கவிஞர் வாலி
ஒருவர் தன்னுடைய பழைய நினைவுகளை
வெளிப்படையாகக் கூறுவது மற்றவர்களுக்கு
எவ்வளவு சங்கடங்களை உண்டாக்கும்
என்பதற்கு கீழ்க்காணும் நிகழ்ச்சி ஒரு
நல்ல உதாரணம்.
கவிஞர் வாலிக்கு அண்மையில் திருச்சியில்
பாராட்டு விழா நடந்தது. அப்போது வாலி
தன் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நடந்த
சம்பவங்களைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு
பேசினார். அப்போது அவர் கூறியது –
“நான் திருச்சியில் நாடகம் போட்டபோது புக்
செய்திருந்த நடிகைக்கு காய்ச்சல் வந்து விட்டது.
இதை அறிந்ததும் நாடகம் நடக்குமோ
நடக்காதோ என்று எனக்கும்காய்ச்சல் வந்து விட்டது.
அப்போது திருச்சி வானொலியில்
ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக சென்னையிலிருந்து
ஒரு பெண் வந்திருந்தார்.
என்னுடைய நண்பர் ஒருவரின் பரிந்துரையில்
அவர் என் நாடகத்தில் நடித்தார். அடுத்த நாள்
அவரை ரெயில் ஏற்றி அனுப்பும்போது
“நீ வாழ்க்கையில் பெரிய ஆளாக வருவாய்”
என்று வாழ்த்தி அனுப்பினேன்.
அந்த பெண் தான் முதல்வரின் துணைவியார்
ராஜாத்தி” !!