குமுதத்தை முரசொலியாக மாற்றிய
கருணாநிதி – இது நானில்லை -சாரு !
பல சமயங்களில் திட்டத்தோன்றினாலும்
சாருவை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை.
இது நானில்லை – சாரு –
————————————
“இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக
கருணாநிதி
எழுத ஆரம்பித்திருக்கிறார்…
அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது.
குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை
மக்கள் அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள
மாட்டார்கள்…
குமுதம் முரசொலியாக மாறியதால் லாபம்
அடைந்த ஒரே ஆத்மா யார் தெரியுமா?
உயிர்மை ஆசிரியர்தான். எப்படி? … .
இப்போது குமுதம் சர்க்குலேஷனும்
உயிர்மை அளவுக்கு வந்து விடும்.
பிறகு, உயிர்மைக்கும் குமுதத்துக்கும்
நடக்கும் சர்க்குலேஷன் போட்டியில்
உயிர்மையே முந்திச் செல்வதற்கு
அதிக வாய்ப்புகள் உள்ளன.”
yen kumutham mele ithanai kummi….