குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!

குமுதமும்  கலைஞருக்கு
சொந்தமாகி விட்டது !!

கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து
ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம்
வாசகர்கள்  கவனித்திருக்கலாம்.

கலைஞரை  விமரிசித்து எழுதக்கூடாது என்று
குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர்
ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார்.

இதோ  அவரது வாரத்தைகளில் – குமுதம்
ஆசிரியருக்கு அவர் எழுதிய  கடிதத்தின் சாரம் –
————-
“தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக என்
ஓ பக்கங்கள் கட்டுரையில் தங்கள் அலுவலகத்தின்
குறுக்கீடு என் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமைந்துள்ளது.  தி.மு.க, ஆட்சி,
அதன் தலைவர், அவரது குடும்பத்தினர் சார்ந்த
பொது வாழ்க்கை விஷயங்கள் பற்றியெல்லாம்
விமர்சனங்கள் செய்யவேண்டாம் என்று
வேண்டுகோள் தொடர்ந்து என்னிடம் வைக்கப்பட்டது.

இன்றும் என் கட்டுரையில் காமராஜர் நினைவிடத்தில் அணையாவிளக்கு வைப்பதாக முதல்வர் அறிவித்தது
பற்றி நான் எழுதிய விமர்சனம் நீக்கப்படுவதாக் தெரிவித்திருக்கிறீர்கள்.”

——————-
இதையடுத்து எழுத்தாளர்  ஞானி குமுதத்தில்
எழுதுவதை நிறுத்திக்கொண்டுள்ளார்.

குமுதத்திற்கு கலைஞரை குஷிப்படுத்தவேண்டிய
அவசியம் என்ன  என்று கேள்வி எழலாம்.


மே மாதம் இதே  விமரிசனம் வலைத்தளத்தில் –

“குமுதத்தில்  நடப்பது  பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய  அவசியமென்ன  ?”

என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள இடுகை
இந்த  வினாவிற்கான விடையை அளிக்கும்.

—————————-
படிப்பவர் வசதிக்காக அந்த இடுகையின்
நகலை மீண்டும் கீழே தந்துள்ளேன்.

குமுதத்தில்  நடப்பது  பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய  அவசியமென்ன  ?

லட்சக்கணக்கான   தமிழர்களை முட்டாளாக்கும்
விதத்தில் பத்திரிகை   நடத்தி,  போலி
சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும்,
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை
பரபரப்பாக்கி  பத்திரிகை   விற்பனையை  உயர்த்தியும்
தமிழ்ப் பண்பாட்டையே  நாசமாக்கும்
விதத்தில்  செயல்படும்   பத்திரிகை   குமுதம்,

இந்த  பத்திரிகை  பங்காளிகளுக்குள்  இப்போது
ஒரு   மோதல்,
சமுதாயத்துக்கோ,  அரசாங்கத்துக்கோ   இதில்
எந்தவித சம்பந்தமும்  இல்லை.  இரண்டு
மோசடிப்  பங்காளிகளுக்குள்
ஏற்பட்ட மோதலை   அடுத்து   ஒருவர்  மீது
ஒருவர்   புகார் கூறிக் கொள்ளுகிறார்கள்.

அவர்கள்  செய்த  பாவத்தின்  விளைவு   இது.
அவர்கள்   தற்போது   கொடுத்துக்கொண்டிருப்பது
பாவத்திற்கான  கூலி.

இன்று  வெளியாகியுள்ள    கீழ் காணும்
செய்தியை   பாருங்கள்  !

செய்தி –

லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு
காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும்,
நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும்
வரதராஜன் மீது ஜவஹர் பழனியப்பன் கொடுத்த
புகாரின் அடிப்படையில் வரதராஜன்
சில நாட்களுக்கு முன் கைது
செய்யப்பட்டார்.

அவர் மீது 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய
பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட
வரதராஜன், சில மணி நேர விசாரணைக்குப் பின்
நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த
காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார்
என்றும், தனது ஊதியத்தை பல மடங்கு
உயர்த்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு
கூறியள்ளார் ஜவஹர் பழனியப்பன்.

இந் நிலையில் இவர்களிடையிலான
பிரச்சனையைத் தீர்க்க சமரசக்குழுவை
அமைப்பதாக முதல்வர் கருணாநிதி
அறிவித்துள்ளார்.

————————————————————–
குமுதத்தில்  நடப்பது  பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய  அவசியமென்ன  ?
கோடிக்கணக்கான  பணம்  மோசடி
செய்யப்பட்டுள்ளதாகவும்,   ஏமாற்றப்பட்டு
விட்டதாகவும்   ஒருவர்   புகார்   கொடுக்கும்போது
அதில்  உள்ள   உண்மையை   நீதிமன்றம்
விசாரிப்பது   தானே   நேர்மையான  முறையாக
இருக்கும் ? இதில்   முதல்வர்   அவசர அவசரமாக
தலையிட  வேண்டிய  அவசியம்   என்ன ?
முதல்வராக   இருப்பவர்   கட்டை பஞ்சாயத்து
செய்வது  போல்  செயல்படலாமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், கோவணம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, மஞ்சள் பத்திரிக்கை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!

  1. ரோமிங் ராமன் சொல்கிறார்:

    குமுதம் கதை அத்தோடு முடியவில்லை… இனி ரிப்போர்ட்டர் மற்றும் சினேகிதி குமுதம் லோகோ இன்றி வெளி வரும் .. இட்லிவடை யிலும் இடுகை வந்துள்ளது ..

  2. ok yes சொல்கிறார்:

    1980-ஆம் ஆண்டு தி.மு.க. தோல்வியடைந்ததற்கு குமுதம் ஒரு காரணம் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும்; மறந்திருக்கமாட்டார். வரும் தேர்தலில் குமுதம் அதேபோல் தலையங்கம் எழுதிவிட்டால் தோல்வி நிச்சயம். எனவே குமுதத்தைக் கையகப்படுத்திவிட்டால் திமுக-விற்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாமல்லவா?

  3. Kalam சொல்கிறார்:

    Znani is not great writter. He has guts to write whatever he is thinking. It is not quite appreciable. Instead of raising Znani flag, read his writtings, you would feel it is useless.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      இந்த இடுகையின் நாயகன் ஞானி அல்ல நண்பரே

      எப்பொதும்,கலைஞர் சம்பந்தப்பட்ட எதிலும் –

      நாயகன் கலைஞராகத் தானே இருக்க முடியும் ?

      ஞானியின் பல கருத்துக்கள் எனக்கும்
      உடன்பாடானவை அல்ல.
      (மிக முக்கியமாக தமிழ் ஈழம் குறித்த
      அவரது நிலை )

  4. Velu சொல்கிறார்:

    Tamil Nadu has the “pride” of having the Cheapest “Cheap” Minister in India. Gets votes by paying money, Priyani & Quarter. All the money for development projects goes for freebies. He neglects cheif Ministers meeting in Delhi and goes to Ramba’s marriage personally. He threates the Central Govt. of withdrawl of support if the Ministry he wants is not given to his son, but in Mullai Periyar Dam, Palaru issues he never gives any pressure. At any given time he is in a function conducted by Cinema stars praising his “glories” with half naked ugly dances of actresses or in a cinema set where a story written by him is being filmed. He has become the richest fellow in Asia by his “hard work”. There is the gullible Tamil community which never care for any of these things and fellows like Kumudam who used to point these things out also now manipulated to obey this cheap Minister. He is aged, but his activities are as cheap as ever, no improvement. What he will carry with him when he dies, we don’t know.

  5. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    கலைஞருக்கு ஜால்ரா அடிக்கும் கும்பலில் குமுதமும் சேர்ந்துவிட்டதா.!

    பாவம் மக்கள்.

    – ஜெகதீஸ்வரன்.

  6. என்னது நானு யாரா? சொல்கிறார்:

    தலைவரே! தீ பெரியதாக ஆன பின், தன் பாதையில் வரும் அனைத்தையும் இறையாக கொள்கிறது. இது இயற்கை நியதி தானே! ஆனால் அந்த தீயுக்கும் ஒரு பகை உண்டு இல்லையா? அது தான், அந்த மழையை தான் சொல்கின்றேன்.

    அதனால் எல்லாம் மாறுகின்றன என்கின்ற விதியில் நம்பிக்கை வைத்து, நம் காரியங்களை செய்வோம். நல்லதே வெற்றி பெறும்.
    நன்றி!
    உங்களை என் வலைபதிவு காண அழைக்கிறேன். உங்கள் கருத்தும் ஓட்டும் இட்டு செல்ல வேண்டும்.

  7. மதுரைசரவணன் சொல்கிறார்:

    ஞானி போய் இப்ப கலைஞர்…. ஆனாலும் சர்குலேசன் உயிர்மையுடன் …ஆச்சரியம் .. பகிர்வுக்கு நன்றீ.

  8. வலைஞன் சொல்கிறார்:

    //Tamil Nadu has the “pride” of having the Cheapest “Cheap” Minister in India. Gets votes by paying money, Priyani & Quarter.//

    ஒரு முக்கிய திருத்தம்,வேலு!
    Tamil Nadu has the “pride” of having the Cheapest “Cheap” VOTERS in India. PUT votes by TAKING money, Priyani & Quarter!

    நீங்க சொன்னது,”எங்க பொண்ணு ஒருமாதிரி, ஒங்க புள்ளைய கண்டிச்சு வைங்க” ன்னு சொல்றா மாதிரி இருக்கு!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.