எந்திரன் இந்தி திரைப்பட இசை குறுந்தகட்டை
வெளியிட்டு 14/08/2010 அன்று மும்பை
நிகழ்ச்சியில் அமிதாப்
பச்சன் பேசியது:
“ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய
விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள்
ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள்.
இந்திய மண்ணின் உண்மையான மைந்தன்
ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும்
உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி.
அவரது மனித நேயம், எளிமையை
நான் மிகவும் விரும்புகிறேன்.
வானளாவிய புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தும்,
ஒரு சாதாரண மனிதனாகவே தன் வாழ்நாள்
முழுதும் இருந்து வருகிறார் ரஜினி.
அவரைப் போன்ற ஒரு
சிறந்த மனிதரை,
நண்பரை,
கலைஞரை நான் பார்த்ததில்லை,” என்றார் அமிதாப்.
———————————-
ரஜினியின் பெருமையை மற்றவர்கள் பேசினால்
நமக்குப் பெருமையாக இருக்கிறது !
அமிதாப் பச்சனின் பேச்சு – அமிதாப்பின்
பெருந்தன்மையைக் காட்டுகிறது !