திருக்குவளை தீயசக்தி –
மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் !
ஜெ.பேச்சு !
அதிமுக தலைவி ஜெயலலிதாவின் இன்றைய
திருச்சி கூட்டம் சில விஷயங்களை
தெளிவு படுத்தியது –
எம்ஜிஆரால் 1982 ல் அறிமுகப்படுத்தப்பட்டு
கடந்த 28 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக
ஜெ. சொன்னாலும் வழக்கமாக தமிழக
அரசியலில் இருக்கும்
மேடைப் பேச்சாளர்களுக்குள்ள குணாதிசயங்கள்
அவருக்கு இன்னும் கைவரவில்லை !
கவர்ச்சியான குரலிலோ, கரகரப்பான குரலிலோ
அவர் பேசவில்லை – அதற்கு முயற்சிக்கவும்
இல்லை.குரலில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.
உணர்ச்சி வசப்படவும் இல்லை.கேட்பவர்களை
தன் பேச்சின் மூலம் வசப்படுத்தக்கூடிய திறமை
அவரிடம் இல்லை.
அவர் கூட்டத்திற்கு வரும் மக்கள்
யாரும் இதை எல்லாம் எதிர்பார்ப்பது இல்லை
என்பது வேறு விஷயம் !
ஆனால் அசாத்தியமான தைரியம் – இன்றைய
அரசியல்வாதிகளிடையே பெரும்பாலும் காணப்படாத
தைரியம் அவரிடம் இருக்கிறது.அதே போல்
அதீத தன்னம்பிக்கை !
இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் தான் அவரது
விசேஷங்கள்.
இதை வைத்துக்கொண்டு தண்ணி காட்டுகிறார்
கலைஞருக்கு ! அடுத்த ஒரு வாரத்திற்கு
வேலை கொடுத்து விட்டார் !!
சரி போகட்டும் – என்ன விசேஷம் இன்றைய
கூட்டத்தில் ?
இரண்டு புதிய பெயர்கள் சூட்டப்பட்டன –
1)திருக்குவளை தீயசக்தி !
2)மகளின் மனம் கவர்ந்த மத்திய மந்திரி !!
முதலாவது பளிச்சென்று புரிகிறது.
இரண்டாவது ??…….
//முதலாவது பளிச்சென்று புரிகிறது.
இரண்டாவது ??…….// விடையை பதினாறாம் பக்கம் தலை கீழாக பார்க்கவும் என்று போடாமல் தெள்ளத் தெளிவாக கீழேயே விடையை போட்டு விட்டு ….. ரொம்ப தான் குறும்பு போடா தம்பி!!
ஒருவேளை அது ஜெ. பேசும் போது ஏற்பட்ட spelling mistake ஆ? மக்கள் என்பதற்கு பதில் மகள் என்று வந்து விட்டதா என்ன??
Raja