படித்ததில் பிடித்த சில வரிகள்

படித்ததில்  பிடித்த சில வரிகள்
(நன்றி – திரு மொஹம்மது சலீம் )


Ø  உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை;
தீமையையும் விரட்டுகிறது.
– வால்டேர்

Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள்.
குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள்.
முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள்
ஒரு புதையல்
-நெப்போலியன்

Ø பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க
இருபது வருடங்களாகிறது.
அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
– ஆஸ்கார் ஒயில்ட்

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே
நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது.

– ஹாபர்ட்.

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத
பெண்ணும் மதிப்பு இல்லாதவை!

– பாலஸ்தீனப் பழமொழி

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக்
காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக்
காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

-ப்ரெட்ரிக் நீட்சே

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு
தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
கடல் பயணத்திற்குச் செல்லும்போது
இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள்

(ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்).
– வின்ஸ்டர் லூயிஸ்

-இந்த கருத்தை நான் இப்படியே ஏற்கவில்லை.
இப்படி மாற்றினால் பொருத்தமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்.

-திருமணம் செய்ய துணையைத் தேர்ந்தெடுக்கும்போது
மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.
(ஏனென்றால் – பாதிப்பு இரு தரப்பிலிருந்தும்
ஏற்படுகிறது !)

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும்
மிதிபட்ட எறுப்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும்
அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில்
ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம்  இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளியே செல்கிறது.

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு
திறக்கிறது. ஆனால், நாம்
மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு
திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அழகு, இணைய தளம், இலக்கிய அமர்வு, கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.