இன்னுமோர் அட்டாக் பாண்டி ? கலைஞருக்கே மிரட்டலா ?

இன்னுமோர் அட்டாக் பாண்டி ?
கலைஞருக்கே மிரட்டலா ?

கீழ்க்காணும் – தினமலரில் வெளிவந்துள்ள
விளம்பரத்தைப் பாருங்கள் –

ஜூனியர் விகடனில் வெளிவந்த -மதுரை
VIP க்களைப் பற்றிய – சில திரைமறைவு
நிகழ்ச்சிகளைப் பற்றிய கட்டுரையை கண்டித்து,
பயமுறுத்தி, வெளியிடப்பட்டுள்ள விளம்பரம்
தான் இது.

அந்த கட்டுரையை படிக்காதவர்களுக்கு
ஆவலாக இருக்கும் -அப்படி என்ன தான் எழுதி
இருந்தது அதில் – என்று.

கலைஞர் “ஆசியுடன்”
சில திருந்தாத தென் மாவட்டத்து
பிரமுகர்களுக்கு “கவனிப்பு”
நடந்ததாக செய்தி வெளியாகி இருந்தது !!

இப்போது சில  கேள்விகள் –

1) “சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில்
பெரும் போராட்டம்” என்றால் என்ன அர்த்தம் ?
சட்டம் ஒழுங்கை சீர்குலைப்போம் என்று தானே ?
காவல் துறைக்கு பொறுப்பான  கலைஞருக்கே
சவால் என்று தானே அர்த்தம் ?

2) உண்மையில் இந்த விளம்பரத்தின் நோக்கம்
யாரை பயமுறுத்துவது ? ஜுனியர் விகடனையா –
இல்லை கலைஞரையா ?

3) “தமிழ்நாடு இல்லத்துப் பிள்ளைமார்  மாநில
சங்கம்” –
இப்படி ஒரு சங்கத்தைப் பற்றி
இதற்கு முன்னால் யாராவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

4) ஜாதி சங்கம் என்று சொல்லிவிட்டு
அதென்ன  “பெரியார் வழியில் ”

5)அதென்ன  “நேதாஜியை நினைத்து”

6) கால் பக்க அளவிற்கு தினமலரின் எல்லா
பதிப்புகளிலும் பெரிய விளம்பரம்
அளிக்கவல்ல  பெரிய பணவசதி உள்ள
சங்கமா  இது ?

7) நேற்று காலை வந்த விளம்பரம் இது.
இன்று இரவு வரை கலைஞர் அலுவலகத்தில்
இருந்து எந்தவித ரீ-ஆக் ஷனையும் காணோம்.
என்ன காரணமோ ?

8)உடனுக்குடன் அதிரடி பதில் கொடுக்கும்
கலைஞர் ஏன் மௌனம் சாதிக்கிறார் ?

9) தினமலர் பத்திரிகைக்கு மானம், வெட்கம்,
சூடு, சொரணை,கொள்கை, கோட்பாடு  –
என்று எதாவது ஒன்றாவது
இருந்தால் தன் சக பத்திரிகையை பயமுறுத்தும்
இத்தகைய விளம்பரத்தை வெளியிட
ஒப்புக்கொள்ளுமா ?

10) தமிழ் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், ஜாதி வெறி, தமிழீழம், தமிழ், தினகரன், தினமலர், திமுக, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.