கூட்டணியை உடைக்கிறார் EVKS இளங்கோவன் !

கூட்டணியை உடைக்கிறார் EVKS
இளங்கோவன் !

ஒரு வழியாக EVKS இளங்கோவன்
திமுக-காங்கிரஸ்
கூட்டணியை உடைக்கும் முயற்சியில்
முழுமூச்சாக இறங்கி விட்டதாகவே
தெரிகிறது.

கலைஞர் மீது வெளிப்படையாகவே அவர்
வைக்கும் குற்றச்சாட்டுக்களைப்
பாருங்களேன் –

1)குடிசைகளை கான்க்ரீட் வீடுகளாக்கும்
திட்டத்துக்கு ஒரு வீட்டுக்கு மத்திய அரசு
45,000 ரூபாய் தருகிறது.
தமிழக அரசு 15,000 ரூபாய் மட்டுமே
அளிக்கிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு
“கலைஞர் வீட்டு வசதி திட்டம்” என்று
பெயர் வைப்பது என்ன நியாயம் ?

இதைக்கேட்டால் பொல்லாப்பும்
கோபமும் வருகிறது !

2)திமுக வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ்
MLAக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை.
ஆனால் 15 MP க்களை
வைத்துள்ள திமுக வுக்கு மத்தியில்
5 அமைச்சர் பதவிகளை
பெற்றுள்ளனர்.

3)எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக
வாழ்கின்றார்கள். எங்களுக்கு கோவில் தர்மகர்த்தா
வேலை கூட கிடைப்பதில்லை !

4)108 இலவச ஆம்புலன்ஸுக்கு மத்திய அரசு தான்
பணம் கொடுக்கிறது. இது மட்டும் மாநில அரசின்
திட்டமாக இருந்தால் ஆம்புலன்சில் கலைஞர்,
ஸ்டாலின் படங்களை வைத்திருப்பார்களே !

5)ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூலியாக
100 ரூபாய் வழங்குவதற்கு பதில் 70 முதல்
80 ரூபாய் வரை தான் வழங்குகிறார்கள்.
அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதைச்
செய்கின்றனர்.
தமிழகத்தில் மக்கள் நல்ல ஆட்சியை
எதிர்பார்க்கின்றனர்.
திருந்தினால் தேவலை !

6) முதல்வரை சந்திக்க 2 முறை
நேரம் கேட்டேன்.
அவர்  நேரம் ஒதுக்கவில்லை.

7)குறை சொல்பவர்களை முடித்து விட
நினைத்தால் (?)ஜனநாயகத்தில்
என்ன நியாயம் இருக்கிறது ?

8)ஒருவருக்கு வயதாக வயதாக
முதிர்ச்சியாக வேண்டும்.
சின்ன மனிதனாகக் கூடாது.

9)தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய
40 ஆண்டுகளாக
காத்திருக்கிறோம்.இன்னும் எங்களால்
காத்திருக்க முடியும்.

உங்களால் பதவி இல்லாமல்
இருக்க முடியுமா ?

வெறுப்பை  உமிழும்
இளங்கோவனின் எண்ணம் வெளிப்படையாகவே
தெரிகிறது !

ஆனால் – விடுவாரா கலைஞர் ?
கூட்டணி இளங்கோவனுக்கு வேண்டுமானால்
தேவை இல்லை.

கலைஞருக்கு அவசியம்
தேவை ஆயிற்றே !

எனவே,  கலைஞர் எப்படிப் பூசி
மெழுகப் போகிறார் என்பதை
விரைவில் காணலாம் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சாட்டையடி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், மிரட்டல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கூட்டணியை உடைக்கிறார் EVKS இளங்கோவன் !

 1. porko சொல்கிறார்:

  மத்திய அரசு என்ன இத்தாலியில் இருந்தா பணம் கொண்டு வந்து கொடுக்கிறது. அட சனியனே ! நீயெல்லாம் இன்னுமா அரசியல் பேசுற? உன் வாயை தான் ஈரோட்டு துண்டால் இருக்க கட்டியும் இந்த நாதாரியின் உளறல் நின்றபாடில்லை! அட ஏன்பா இவன் கொட்டாவி விடுறதெல்லாம் ஒரு செய்தின்னு போடுறீங்க!

 2. ராமன் இந்தியா சொல்கிறார்:

  ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பதிவாளர் எப்படி இத்தகைய ஓர் ஆபாசமான _ பொற்கோ வின் மறுமொழி யை பிரசுரித்துள்ளீர்?? இளங்கோவன் சொல்வது பெரும்பாலும் சரியே!! இந்த தேசத்தின் மீது ஆசையும் காதலும் இருந்தால் அல்லது காமராஜர் அவர்கள் மீது மரியாதை இருந்தாலே போதும் _ இளங்கோவன் சொல்வதில் கு.ப. ஐம்பது சதவீதம் சரி என்று ஒப்புக்கொள்ள முடியும்!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபம் வேண்டாம் நண்பரே –
   அவரவர் கருத்துக்கு கிடைக்க வேண்டிய
   மரியாதையை
   அவரவர் எழுத்தே கொடுத்து விடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.