கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்

கலைஞர் காட்டிய வழி  –
முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்

(அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !)

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி
ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு
தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய
விளம்பரங்கள் கொடுத்துள்ளது.

அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில –

1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள
குடும்பங்களின்
எண்ணிக்கை (கவனிக்கவும் –
நபர்கள் அல்ல – குடும்பங்கள் ) – 1.44  கோடி
அதாவது 144 லட்சம் குடும்பங்கள்.

2) கடந்த ஒரு வருடத்தில் பயன் பெற்ற
நோயாளிகளின் (பயனாளிகளின்)
மொத்த எண்ணிக்கை       –  1.53 லட்சம் பேர்

3)இதற்காக தமிழ் நாடு அரசு மேற்படி தனியார்
காப்பீட்டு நிறுவனத்திற்கு கடந்த
ஒரு வருடத்திற்கு
செலுத்தியுள்ள
தொகை – ரூபாய் 569.54 கோடி

4) காப்பீட்டு நிறுவனம் இந்த மருத்துவ
சிகித்சைக்காக கடந்த ஒரு ஆண்டில் செலவழித்துள்ள
தொகை மொத்தம் ரூபாய் 415.43 கோடி.

இந்த விவரங்களில் என் தலையீடு
எதுவுமே  இல்லை –
மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் அரசால்
வெளியிடப்பட்டுள்ளன.

அவர்கள் சாதனை என்று காட்ட வெளியிட்ட
புள்ளி விவரங்கள் தாம் நமக்கு வேதனையைத்
தருகின்றன.

மேற்படி விவரங்களிலிருந்து கூட்டி –
கழித்து பார்த்தால்(மன்னிக்கவும் கூட்ட வேண்டாம் –
கழித்தால் மட்டுமே போதுமானது !)

அரசாங்கம் சொல்லாமலே – நமக்கு
கிடைக்கும் மற்ற  தகவல்கள் –

1) எந்தவித முதலும் போடாமல் காப்பீட்டு
நிறுவனம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும்
சம்பாதித்திருப்பது
(569.54 – 415.43 = )
154.11 கோடிகள் !!!!!!!

இதில் நிர்வாகச்செலவுகள் – மாதம் ஒரு கோடி
ரூபாய் என்றாலும் 12 மாதங்களுக்கு 12 கோடி
வேண்டுமானால் கழித்துக்கொள்ளலாம்.

அப்போதும் நிகர லாபம் 142.11 கோடிகள் !

2) உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டவர்களில்
(சுமார் ஒரு சதவீதம் பேர் ) சரியாகச்
சொன்னால் 1.16 % பேர் மட்டுமே பலன்
அடைந்திருக்கிறார்கள் !

3) இந்த காப்பீட்டு நிறுவனம் (வெளிநாட்டில்)
துபாயில் பதிவு செய்யப்பட்டு அதன் வியாபாரம்
தமிழ் நாட்டில் நடைபெறுகிறது.

4) வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்
இதனை நடத்துபவர்கள் திருச்சியைச் சேர்ந்த –
அந்தக்கால (மேகலா பிக்சர்ஸ்,க்ரெஸண்ட் மூவீஸ்
காலத்திய )
நண்பர்களின் குடும்பம் என்று
சொல்லப்படுகிறது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை
ஊழல் திட்டம் என்று  குறை
கூறுபவர்கள்  நாசமாகப் போவார்கள் என்று
கலைஞர் நேற்று தான் கூறி இருக்கிறார்.

எனவே –

நமக்கேன் கலைஞரின் சாபம் ?

நான் குறை ஒன்றுமே சொல்லவில்லை –
அந்த விளம்பரத்திலேயே சொல்லாமல்
சொல்லப்பட்டு இருக்கும் சில
விவரங்களைக் வெளிப்படுத்திக் காட்டினேன் –
அவ்வளவு தான் !

யார் என்ன குறை சொன்னாலும்
இத்தகைய நல்வாழ்வுத் திட்டங்கள்
பலவற்றை கொண்டு வந்தே தீருவேன்
என்று கலைஞர் கூறுகிறார்.

இவை நல்வாழ்வுத்திட்டங்கள் தான்
என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை !

யாருடைய நல்வாழ்வு என்பது தான் கேள்வி !!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உயிர் காக்கும் மருந்து, ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சினிமா, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.