வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

வில்லங்கமான தமிழ்ப் போட்டி –
பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

பகுதி ‘அ’
—————
1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய
வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக்
கொடுத்தான் கண்ணப்பன் –
கண்ணை மட்டுமல்ல தன்னையே
கொடுத்தார் கலைஞர்.

2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன்.
திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே
தேர்ந்தெடுத்து விட்டேன்.

3)பென்னை பிராந்தி பாட்டிலாகப் பார்த்தார்கள்.
நீ தான் பிரதீபா பாட்டீலாகப் பார்த்தாய்.

4) உன்னை கும்பிட்டால் ஊரையே கும்பிட்ட மாதிரி.
உலகமே உன்னை அண்ணாந்து பார்க்கிறது.

5)வள்ளுவன் கூட அறம்,பொருள், இன்பம்
தான் கொடுத்தான்.  நீ வீடும் வழங்கி,
வள்ளுவரையே வென்று விட்டாய்.

6)தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர் தான் காவல். இவன் பணி இல்லாது போயின்,
தமிழ் துருப் பிடிக்கும்.

7)குடியிருக்கும் வீட்டையே கொடையாய் தந்து,
குமணனையே வென்றாய் தனக்கு ஒரு
வீடில்லாத தலைவன் நீ.

8)கலைஞர் தலை வைத்ததால் தண்டவாளம் கூட
தமிழ் பேசக் கற்றுக்கொண்டது.

9) திருக்குவளையில் ஒரு தாய் சூரியனைக்
காட்டி சோறூட்டினாள். அந்தக் குழந்தை
சோற்றை விட்டு விட்டு
சூரியனைச் சாப்பிட்டது.

10) நாள் முழுதும் நிற்காமல் ஓடிக்கொண்டே
இருப்பது கடிகாரமும் கலைஞரும் மட்டும் தான்.

11) உன்னிடம் வந்து சேர நோபல் பரிசே
நோன்பிருக்கிறது.

12) கலைஞர் தமிழன்னையின்
மடியிலுள்ள லேப்டாப்.
உலகத்தமிழர்களை இணைக்கும் ஒரே வெப்சைட்.

13) தமிழனுக்கு சொரணை கொடுத்தது கலைஞர்.
மானம் கொடுத்தது  கலைஞர்.
——————
பகுதி ‘ஆ’

ஆண்டாள் பிரியதர்சினி,  அருட்திரு வின்சென்ட்
சின்னதுரை,   கவிஞர் நா. முத்துக்குமார்,
கவிஞர் வாலி, கவிஞர் மு.மேத்தா,
பேராசிரியர் கருணாநிதி, கவிப்பேரரசு வைரமுத்து,

———————–

பகுதி ‘அ’ வில்
காணும்  புகழுரைகள், கோவை
செம்மொழித்தமிழ் மாநாட்டில்
தமிழை  ஆய்வு செய்ய வந்த தமிழ்ப் புலவர்கள்,
முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் புகழ்ந்து
பேசிய வார்த்தைகள்.

பகுதி ‘ஆ’வில்
அவற்றைக் கூறி தமிழுக்குப் புகழ் சேர்த்து
தங்கள் கடமையை செவ்வனே செய்த
புலவர் பெருமக்களின்  பெயர்கள் உள்ளன.

—————–
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும்
தமிழ் ஆர்வலர்கள் செய்ய வேண்டியது  ஒரு
சின்ன – ஆனால் சிக்கலான செயல் மட்டுமே!

பகுதி’அ’வில் காணும் புகழுரைகளைகூறிய
கவிஞர் யார் என்பதைப் பகுதி’ஆ’வில் இருந்து
தேடியெடுத்துப் பொருத்த வேண்டும்.

அனைத்துப் புகழுரைகளுக்கும் உரிய
சரியான விடையை உடனடியாக எமக்கு
மின்னஞ்சல் வழியாக -மறுமொழி –

அனுப்ப வேண்டும்.( kavirimainthan
@gmail.com ) விடைகள் செவ்வாய்
(20/07/2010 )முன்னிரவு
இந்திய நேரப்படி எட்டு மணிக்குள்ளாக எம்மை
வந்து சேர வேண்டும்.

சரியான விடை அளிக்கும் சிறந்த தமிழார்வலருக்கு
-என் சொந்த சேமிப்பிலிருந்து –
ரூபாய் ஐந்து லட்சம் பரிசளிக்கப்படும். ஒன்றுக்கு
மேற்பட்டவர்கள்  சரியான விடையை அனுப்பி
இருந்தால், பரிசுத் தொகை சமமாகப் பிரித்தளிக்கப்படும்.

பின்குறிப்பு -(இதை கண்ணுக்குத் தெரியாத சின்ன
எழுத்தில் தட்டச்சு செய்ய முயன்றேன் – முடியவில்லை!

எனவே நீங்களாகவே இதையடுத்து எழுதி இருப்பதை
படிக்காமல் தவிர்த்து விடுங்கள் !!)

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம்
புதன்கிழமை அறிவிக்கப்படும்.

பரிசளிப்பு விழா  மட்டும் –
என் காலத்திற்குப் பிறகு,
என் மனைவியின் காலத்திற்குப் பிறகு,
என் சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தால்,
அதில்  – கடன்காரர்களுக்கு
கொடுத்தது போக
மீதி  ஏதும் இருந்தால் –
என் பிள்ளைகளும் அதற்கு
ஒப்புக்கொண்டால் – நிச்சயம் நடைபெறும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, செவ்வாய், தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, மட்டமான விளம்பரம், வைரமுத்து, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

 1. Ganpat சொல்கிறார்:

  கொன்னுட்டீங்க!!
  வாழ்த்துக்கள்

 2. Surendran சொல்கிறார்:

  //என் காலத்திற்குப் பிறகு,
  என் மனைவியின் காலத்திற்குப் பிறகு//

  //என் பிள்ளைகளும் அதற்கு
  ஒப்புக்கொண்டால்//

  ஏதேது…. கலைஞரையே விஞ்சிவிடுவீர்கள் போல இருக்கிறதே..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.