நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் !

நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின்
கோபம் !

காலையிலேயே எழுத நினைத்தேன் –
ராசா நிகழ்ச்சியால் மறந்தே போனேன்.

இன்று காலை நடிகர் சிவகுமார்
தலைமையில்  நிகழ்ந்த ஒரு
கருத்தரங்கம் –

முன்னால் பேசியவர் சிவகுமாரின்
“என்றும் இளமை” தோற்றத்தை
புகழ்ந்து விட்டுப் போனார்.

பின்னால் பேச வந்த திருச்சி
செல்வேந்திரனுக்கு இது பொறுக்கவில்லை !

“இளமை”யை தக்க வைத்துக்கொள்வது
அப்படி ஒன்றும் கடினமான காரியமில்லை.
15 நாட்களுக்கு ஒரு தடவை
முக்கால் மணி நேரமும், 350 ரூபாய்
பணமும் செலவழிக்கத் தயாராக இருந்தால்
போதும் – யாரும் “இளமை”யுடன்
இருக்கலாம் என்றார்.
(அவர் சொன்னது
தலைக்கு டை அடித்துக்கொள்வது பற்றி)

கோவம் பொத்துக்கொண்டது
சிவகுமாருக்கு.

உட்கார்ந்த இடத்திலேயே
மைக்கை கையில் எடுத்துக்கொண்டு
இடை மறித்துச் சொன்னார் –
இளமை முடியில் மட்டும் இருந்தால்
போதாது.
அது தோற்றத்தில்
வர வேண்டுமானால் – அதற்கான
வழிமுறைகள் வேறு இருக்கின்றன.
“யோகா”… செய்ய வேண்டும்
என்றார்.

அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே
திருச்சி செல்வேந்திரன் “நான் பட்டி
மன்றத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லையே
என்று வருத்தத்தில் இருந்தேன்.

இப்போது சிவகுமாரின் இடைமறிப்பால்
அந்த வருத்தம் போய் விட்டது” என்றார்.

சிவகுமார் இடைமறித்தது சரியே
என்றாலும் –

நிறைய திறமைகளை வளர்த்துக்
கொண்டிருக்கும் அவருக்கு இந்த “டை”
சமாச்சாரங்கள்  எதற்கு ?

இயற்கைத் தோற்றத்துடன்
இருந்திருந்தால் அவருக்கு இந்த நிலை
ஏற்பட்டிருக்காதல்லவா ?
65 வயதுக்கு மேல் ஒப்பனை எதற்கு ?

நாம் சிவகுமாரை மதிப்பது அவரது
தோற்றத்திற்காக அல்ல
.அவரது
ஒழுக்கம் நிறைந்த தனி வாழ்க்கைக்காகவும்,

அவரது திறமைகளுக்காகவும்,
தமிழார்வத்திற்காகவுமே

என்பது அவருக்குப் புரியவில்லையே ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், ஒளிபரப்பு, காமெடி, சன் டிவி, சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், நடிகர் சிவகுமார், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.