அமைச்சர் ராசா மூக்குடைப்பு –
சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு !
நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தான்
எத்தனை வசதிகள் ! சாதாரணமாக
காணக்கிடைக்காத பல காட்சிகள்
நம் பார்வைக்கு நேரடியாகக் கிடைக்கின்றன !
இன்று மாலை -உலகத்தமிழ்ச் செம்மொழி
மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி.
மாநாட்டை நினைவூட்டி சிறப்புத் தபால் தலை
வெளியிடப்பட்டதை ஒட்டி, தொலை தொடர்பு
அமைச்சர் ராசாவுக்கு பேச வாய்ப்பு
அளிக்கப்பட்டது.(தயாநிதி மாறன
மேடையில் அமர்ந்திருந்தாலும்,
அவருக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை)
முதலமைச்சர் கலைஞர்,
மத்திய நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி,
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
ஆகியோர் உரையாற்றக் காத்திருந்தனர்.
தனக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்பட்டது
என்பதையும், எவ்வளவு நேரம் அளிக்கப்பட்டது
என்பதையும் உணர்ந்து பொறுப்புடன்
பேச வேண்டிய ராசா –
மார்டின் லூதர் கிங் பற்றியும்,
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா
பற்றியும் எல்லாம் பேசிக்கொண்டெ போனார்.
பேச்சை முடித்துக்கொள்ளும்படி முதலில்
அறிவுறுத்தப்பட்டதும், “ஒரு நிமிடம்”
என்று கூறி விட்டு (ஒலிபெருக்கியிலும்
கேட்டது) தொடர்ந்து பேசிக்கொண்டே
போனார்.
பொறுமை இழந்த தலைமைச் செயலாளர்
ஸ்ரீபதி, அனைவரின் முன்னிலையிலும்
மேடையில் பேசிக்கொண்டிருந்த ராசாவை
நெருங்கி பேச்சை உடனே முடித்துக்கொள்ளச்
செய்வதை நேரடி ஒளிபரப்பில் காண முடிந்தது.
ஒரு அரசுச்செயலாளர், மத்திய கேபினட்
அமைச்சரை, மேடையில் – அத்தனை பேர்
முன்னிலையில் -அதுவும் நேரடி ஒளிபரப்பு
நடந்துக் கொண்டிருக்கையில் –
பேச்சை முடித்துக்கொள்ளும்படி
கூறுவது எவ்வளவு அவமானகரமான விஷயம் !
(ஆனால் – ஸ்பெக்ட்ரம் ஊழல் அவமானத்தோடு
ஒப்பிட்டால் இதெல்லாம் உரைக்காது தான் )
(உடனே கவுண்டமணி தான் நினைவிற்கு
வந்தார் “அரசியலில் இதெல்லாம்
சகஜமப்பா ” )
அதுவரை கடுகடுவென்று இருந்த -பேச வாய்ப்பு
கிடைக்காத மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்
இந்த நிகழ்வுக்குப்பிறகு மிக்க மகிழ்ச்சியோடு
காணப்பட்டதையும் நேரடி ஓளிபரப்பில்
காண முடிந்தது.
வாழ்க நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் !