சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு !
நீண்ட காலம் வட இந்தியாவில் வசித்ததால்
எனக்கு சீக்கியர்களைப் பற்றிய நல்ல
பரிச்சயம் உண்டு. நிறைய
சீக்கிய நண்பர்களும் உண்டு.
சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள்.
தைரியசாலிகள்.
நன்றாகச் சாப்பிடுபவர்கள்.
பொதுவாக வாட்டசாட்டமாக, வலுவுடன்
இருப்பார்கள்.
இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு
மதிப்பு மிக்கது. ஒவ்வொரு போரிலும்
அவர்கள் காட்டும் வீரம் பிரமிக்கத்தக்கது.
பாகிஸ்தான் எல்லையில் இருப்பதால்,
பிரிவினையால் மிக அதிகமாக
பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தான்.
பொதுவாக சீக்கியர்களின் தொழில் –
– ராணுவத்தில் பங்காற்றுதல் –
இந்திய ராணுவத்தில் அவர்களுக்காகவே
உருவாக்க்கப்பட்ட “சிக் ரெஜிமெண்ட்”
உலகப் புகழ் பெற்றது.
– விவசாயம் – இந்தியாவிலேயே
நவீன யந்திரங்களைப் பயன்படுத்தி
விவசாயத்தில் அமோக விளைச்சல்
காண்பவர்களில் முதன்மையானவர்கள்
சீக்கியர்கள்.
ஆட்டோமொபைல், மற்றும் மின் சாதன
பொருட்கள் விற்பனை அவர்களுக்கு
ஒத்து வந்த துறை. தில்லியில் முக்கால்வாசி
வாகனங்களை ஓட்டுபவர்கள் சீக்கியர்கள் தான்.
சீக்கிய மதம் மிக உன்னதமான
கொள்கைகளை போதிக்கும் மதம்.
அவர்களது “குருத்வாராக்கள்”
(வழிபாட்டுத் தலங்கள்)மிகப் புனிதமானவை.
அங்கே உள்ள “லங்கர்” (சமையலறை)
24 மணிநேரமும் திறந்தே இருக்கும்.
வருபவர்களின் பசியைப் போக்குவதை
பெரும் புண்ணியமாக எண்ணுபவர்கள் அவர்கள்.
பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்வதை
தெய்வப்பணியாகக் கருதிச் செய்வார்கள்.
சிகரெட் பிடிக்கும் சீக்கியரை நீங்கள்
எங்கும் காண முடியாது.
எனக்குத் தெரிந்து அவர்களது ஒரே பலவீனம் –
மூளையை முன் நிறுத்தி –
செய்யப்படும் வேலைகள் அவர்களுக்குப்
பிடிப்பதில்லை !
இத்தகைய பெருமைகளைக் கொண்ட
சீக்கிய சமூகத்திலும் – ஒரு விதிவிலக்கு.
மிக மிக புத்திசாலி.
பொருளாதார மேதை.
அனுபவம் மிக்கவர்.
பண ஆசை பிடிக்காதவர்.
லஞ்ச லாவண்யத்தில் சிக்காதவர்.
(அவர் தான் வாங்க மாட்டார் –
அவர் கூட இருப்பவர்கள் வாங்கினால்
பார்த்துக்கொண்டே இருப்பார் !)
இத்தனை இருந்தும் என்ன பயன் ?
மதுவை விட,
மங்கையரை விட,
அதிக போதை தரக்கூடியது பதவி சுகம்.
தானாகத் தேடி வந்த அந்த பதவியை,
அது தரும் போதையை – விட முடியாமல்
எண்ணற்ற பாவங்களுக்கு மௌனமாகத்
துணை போகின்றாரே !
வாயே திறக்காமல்,
எந்தவித பாவனையும் இன்றி,
தன் தனிப்பட்ட பழியைத் தீர்த்துக்கொள்ள,
ஒரு இனத்தையே அழிக்கும் ஒருவருக்கு
துணை போகிறாரே.
இருபது கல் தொலைவில் –
கொத்து கொத்தாக
குண்டுமழை – எத்தனை எத்தனை கொலைகள்,
அங்கஹீனங்கள், அநாதைப் பிணங்கள் !
அத்தனையையும் பார்த்துக்கொண்டு
மௌன சாட்சியாக நின்றாரே !
இன்றும் தொடரும் பாவங்களுக்கு
துணையாக நிற்கிறாரே –
இவரது மனசாட்சி உறுத்தவில்லையா ?
மனசாட்சி என்று ஒன்று இவருக்கு இருக்கிறதா ?
சே – இவரும் ஒரு சீக்கியரா ?
சீக்கியரல்ல,பதவிச் சீக்குப் பிடித்தவர்.
அவரை குறைசொல்லி என்னபயன். உங்கள் கலைஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அதைவிடக்
கேவலமாக இல்லையா?
உண்மை தான்.
ஆனால் –
கலைஞர் தொழில்முறை
அரசியல்வாதி – அதனால் அவர்
சுயநலவாதியாக இருப்பது
அதிர்ச்சி அளிக்கவில்லை.
ஆனால் இவரோ இயல்பில்
பொருளாதார நிபுணர்.
பதவி கிடைத்ததால் –
சுயநலவாதி ஆனவர்.
தற்செயலாகக் கிடைத்த,
தகுதி இல்லாமலே கிடைத்த –
பதவி கொடுக்கும் போதையால் –
அதிலிருந்து விடுபட விரும்பாததால்
சுயநலவாதி ஆனவர்.
சரி தானே நண்பரே ?
விசுவாசமான நாய் போல இங்கு பன்னீர் இருந்தாரே அதுபோல அங்கே அவர்!,..
-ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/