கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?

கே”ளீ” ர்  அல்ல  கே”ளி”ர் –
தமிழில் எப்படித் தவறினார்  கலைஞர் ?செம்மொழி மாநாட்டை  விளம்பரப்படுத்த
வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான
தமிழ் மொழியாம்”
பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான்
இசை அமைத்துள்ளார்.

பாடல் மெட்டும், இசையமைப்பும்
மிகவும் நன்றாக இருந்தாலும் –

செம்மொழி தமிழுக்கான மெட்டு  என்னும்போது
பொருத்தமாக இல்லை.

ஆனால் நான் சொல்ல வருவது
அதைப்பற்றி  அல்ல –

இந்தப் பாடலை எழுதி இருப்பது கலைஞர்.
பாடலை ரகுமான் கூடவே இருந்து ஒலிப்பதிவு
செய்து பெற்றவர்  கவிஞர் கனிமொழி.

இந்தப்பாடலில் “யாதும் ஊரே -யாவரும் கேளிர்”
என்ற வரியை ரகுமானே  பாடி உள்ளார்.

இதில் “கேளிர்”  என்கிற வார்த்தையை
“கே”ளீ”ர்  என்று  இழுத்து  அழுத்தமாகப் பாடி
இருக்கிறார்.

இரண்டும் வெவ்வேறு பொருளைத் தரும்
வார்த்தைகள்.

யாவரும் கேளிர் என்றால்-
எல்லாரும்  உறவினர் என்று பொருள்.
யாவரும் கே”ளீ”ர் என்றால் –
எல்லாரும் கேளுங்கள்  என்று பொருள்படும்.

ரகுமான் ஆங்கில வழியில்( மீடியத்தில்)
படித்தவர். அவருக்கு அந்த வார்த்தையை
நீட்டிப் பாடினால் வேறு பொருள் வரும் என்பது
தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கூடவே இருந்த கவிஞர் கனிமொழி
எப்படித் தவறினார் ?

இந்தப் பாடலையும், அதன் ஒளிப்பதிவையும்
கலைஞரும் பல முறை பார்த்து சரி சொல்லி
இருக்கிறார்.எப்படி ?

அர்த்தம் தெரிந்தவர்களுக்கு இது
உறுத்தலாகவே இருக்கிறது.
எப்படித் தவறினார் கலைஞர் ?

காலம் இன்னும் கடக்கவில்லை.
மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள்
முன்னிலையில்  இந்த தவறு  தொடரும்
முன்னர்  சரி செய்யப்படுவது நல்லது.


கௌரவம் பார்க்காமல் செய்வார்களா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திரம், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?

  1. ramanan50 சொல்கிறார்:

    தொல்காபியதிற்க்கு உரை எழுதியவர் ,முத்தமிழ் அறிஞர் ,தமிழவேள் ,தமிழினக்காவலர் கலைஞருக்குத் தமிழில் தெரியாதது ஏதும் இல்லை .அவர் கருத்திற்கு மாறுபட்டு இருந்தால் அது தமிழே இல்லை .
    தமிழ் வாழ்க !கழகம் வாழ்க !

  2. ramanan50 சொல்கிறார்:

    தமிழ் தட்டச்சு எனக்குப்ப்திது .பிழை பொறுக்க.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.