“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !!

“என் பேச்சை  நானே  கேட்க மாட்டேன்”
நடிகர் விஜய்  வசனத்தை பேசும் கலைஞர் !!

நேற்றைய  தினம் திமுக உயர்நிலைக்குழுவில்
நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களில் ஒன்று –

———————–
“சிறுதாவூர் நிலத்தை மீட்டு, அதை
ஏழை மக்களுக்கு  உடனடியாக வழங்கிட
அரசு ஆவன  செய்திட
வேண்டுமென்று – கேட்டுக்கொள்ள –
திமுக போராட்டம்
நடத்திட முன் வர வேண்டும் ”

(தீர்மானம் போராட்டம் நடத்த முன்வருமாறு

கேட்டுக்கொள்வது காஞ்சிபுரம்
மாவட்ட  திமுக வை ! )
—————————–
நடவடிக்கை எடுக்கக் கோருவது  தமிழக அரசை !
அதை தலைமை தாங்கி நடத்திக்கொண்டு வருவது
திமுக  தலைவரும்  முதல்வருமாகிய கலைஞர் தான்.

நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் – ஒன்று,
முதலமைச்சர்  கலைஞர் தாமாகவே  உத்திரவு போடலாம்.

அல்லது   நடவடிக்கை எடுக்கும்படி
தமிழக அரசை கேட்டுக்கொண்டு திமுக சார்பாக
ஒரு தீர்மானம் நிறைவேற்றி ஆளும்கட்சி என்கிற
முறையில் அந்த தீர்மானத்தின் அடிப்படையில்
அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

இதையெல்லாம் விட்டு விட்டு -போராட்டம்
நடத்த முன்வருமாறு காஞ்சீபுரம் திமுக வை
கேட்டுக்கொண்டு தீர்மானம்  நிறைவேற்றுவது
எந்த வகையில்  பொருந்தும் ?
அதாவது, திமுக தலைவராக,  தான்
சொல்வதை,  திமுக  முதலமைச்சராக
தானே  கேட்க  மாட்டாராம் – அதற்காக,
தனியே காஞ்சிபுரம் திமுக போராட்டம்
நடத்த வேண்டுமாம் !

எனக்கென்னவோ  ஒரு திரைப்படத்தில்
(பெயர் நினைவில் இல்லை)நடிகர் விஜய்
“சில சமயங்களில்  என் பேச்சை நானே
கேட்க மாட்டேன்” என்று வசனம்
பேசியது தான்  நினைவுக்கு  வருகிறது !

உங்களுக்கு இந்த தீர்மானத்தின்
பின்னணியைப்பற்றி
வேறு  எதாவது  தோன்றுகிறதா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, விஜய் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.