M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !!

M.P.யாக முயற்சிக்கும் காமெடியன்
M.P. (மகா பொய்யர்)  ஆனார் !!

சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட, நடிகர் ஆவார்.

இவர் நடித்த முதல்  நாடகம் -அவன் ஒரு  தனி மரம் –
அரங்கேற்ற தேதி  – 27 April 1974.
இதுவரை இவர் 24 நாடகங்களை தயாரித்து, மேடையேற்றியுள்ளார்.

இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில:
நாடக சூப்பர் ஸ்டார், காமெடி கிங்,
சிரிப்பலை சிற்பி, நாடக வசூல் சக்ரவர்த்தி,
நகைச்சுவை தென்றல், நகைச்சுவை இளவரசன்,
நகைச்சுவை நாயகன், சிரிப்புச்செல்வன்,
நகைச்சுவைவேதநாயகன்,
வாணி கலாசுதாகர நாடக கலாசாரதி, நாடகரத்னா.  !!!!!!!!!!!

தமிழ் நாட்டு  சட்டமன்ற உறுப்பினராக தமிழ்  மக்களுக்கு   இவர்
ஆற்றிய   தொண்டு போதாது என்று இவரே   கருதியதால்
தனது பழய  இதய  தெய்வத்திடம்  தன்னை  டில்லிக்கு
அனுப்புமாறு  வேண்டி – விரும்பி
கேட்டுக்கொண்டார்.

அது நடக்கும் விதமாகத் தெரியாததால்,
குலதெய்வத்தை  மாற்றி
புதிய  குலதெய்வத்தை சுற்றி  வரலானார்.
அது  மனம்  மகிழும்படி ஆடிப்பாடி
பல  வித்தைகளை எல்லாம்
செய்து  காட்டினார்.
துணைத்தெய்வத்தையும்  திருப்தி செய்தார்.

இறுதியாக   க்ளைமாக்ஸ்   காட்சி
அடுத்த மாதம்  வருகிறது.  புதிதாக  6 MP க்களை
தமிழ்நாட்டிலிருந்து பாராளுமன்றத்திற்கு
அனுப்ப வேண்டிய  நேரம் !
புதிய குலதெய்வத்திற்கு மிகவும்  பிடித்தது –
தினம்  ஒரு மேடை.  திகட்ட  திகட்ட
புகழ்  மாலைகள்.

பார்த்தார்  நமது  காமெடியன்.
உடனே   ஏற்பாடு செய்தார்  ஒரு மேடை.
புதிய குலதெய்வத்தின் தலைமையில்
தனக்கே   ஒரு  பாராட்டு விழா.

தெய்வத்திற்கு  மேடை  கொடுத்த  மாதிரியும்
ஆயிற்று –  தன்  திறமைகளை
நினைவுபடுத்திய மாதிரியும்  ஆயிற்று.
பொருத்தமாக  நாடகத்தின்
பெயரே “அல்வா” தான் !

5600  ஆவது நாடக அரங்கேற்ற  விழா !
அத்தனையும்   அருமையாக   அரங்கேறியது.
ஒரே  ஒரு  விஷயத்தில்   தான்   காமெடியன்
ஏமாந்து  விட்டார் !

கடந்த 18/09/1996   அன்று  தனது
3500 ஆவது  நாடகம்  என்று  போஸ்டர்  அடித்து,
விளம்பரம் செய்து இதே  தெய்வத்தின்  சந்நிதானத்தில்
விழா  நடத்தியதை   மறந்து விட்டார் !

இடைப்பட்ட நாட்கள்  சுமார்  1325 தான்.
1325  நாட்களில் 2100  நாடகம் எப்படி ?
என்று   யாராவது  கேட்பீர்களானால்  –

நினைவு   படுத்திக்கொள்ள  வேண்டியது தான்
கவுண்டமணி  வசனத்தை –

“அரசியலில்  இதெல்லாம்   சகஜமப்பா” !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலகத்தமிழ், எஸ்.வி.சேகர், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.