தேசத்துரோகி மத்திய அமைச்சர் – டிஸ்மிஸ் செய்ய அதிகாரமில்லாத பரிதாபமான பிரதமர் !

தேசத்துரோகி  மத்திய   அமைச்சர் –  டிஸ்மிஸ் செய்ய
அதிகாரமில்லாத   பரிதாபமான   பிரதமர்  !

சீனாவில் இரண்டு  நாட்களுக்கு   முன்  நடைபெற்ற
பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில்
கலந்துகொண்டு பேசிய ஜெய்ராம் ரமேஷ், மத்திய
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின்
சீனக் கொள்கைகளை கடுமையாக சாடி பேசி  இருக்கிறார் .

சீனாவின் ஹுவாய் என்ற நிறுவனத்திடமிருந்து தொலைபேசி
உபகரணத்தை இறக்குமதி செய்வதற்கு, பாதுகாப்பு
காரணங்களை காட்டி உள்துறை அமைச்சகம் தடை  விதித்ததை
ரமேஷ் தனது பேச்சில் கடுமையாக குறை கூறி பேசி   இருக்கிறார் .

மத்திய அரசு எடுத்த   கொள்கை முடிவுகளை விமரிசிக்க
மத்திய  அரசில்   அங்கமாக  இருக்கும்   எந்த அமைச்சருக்கும்
உரிமை இல்லை.   விவாதங்கள்  அனைத்தும்  அமைச்சரவை
கூட்டத்தில்   தான்  இருக்க வேண்டும்.  மாறுபட்ட   கருத்துக்களை
தெரிவிப்பதாக  இருந்தாலும்   அதற்கான  இடம்,  அமைச்சரவை
தான்.

அமைச்சரவைக்கு   உள்ளது  கூட்டுப்பொறுப்பு.
ஒன்று  எடுக்கப்பட்ட  முடிவுகளை   ஏற்றுக்கொள்ள  வேண்டும்.
அல்லது  அரசை  விட்டு  வெளியேற   வேண்டும்.

உள்  நாட்டிலேயே   குறை  கூறுவது  தவறு  என்னும்போது
வெளி நாடு  ஒன்றில்  அதுவும்  சம்பந்தப்பட்ட  நாடான
சீனாவிலேயே   மத்திய   அரசின் பாதுகாப்பு   குறித்த
கொள்கை  முடிவுகளை
குறை கூறிப் பேசி  இருக்கும்   மத்திய  அமைச்சர்  ரமேஷுக்கு
ஒருக்கணம்   கூட  அந்தப்பதவியில்   நீடிக்க
தகுதி  இல்லை.

அவர் டிஸ்மிஸ்   செய்யப்பட்டு   உடனடியாக
நாடு   திரும்ப  உத்திரவு   இடப்பட   வேண்டும்,
அவர்  மீது   தேசத்துரோக     வழக்கும்  உடனடியாக   பதிவு
செய்யப்பட்டு  கைது  செய்யப்பட  வேண்டும்.
ஆனால்   இது  எதுவும்   நடக்கப்போவதில்லை ! உண்மையில்
பிரதமருக்கு   அதிகாரம்   இருந்தால்  தானே   அவர்   இந்த
நடவடிக்கைகளை   எடுக்க  முடியும் ?

கட்சித்தலைமைக்கு  கப்பம்   கட்டி  விட்டால்
என்ன வேண்டுமானாலும்
செய்யலாம்   என்பது  தானே  இன்றைய  நிலை ? .
அமைச்சர்   ராஜா  காட்டிய   வழி  இது   தானே ?
கட்சித் தலைமைக்கு தன   பங்களிப்பை ( ? )  ஜெயராம் ரமேஷ்
ஒழுங்காக  செலுத்தி கொண்டிருக்கும்    வரையில்   அவர்
மீது   நடவடிக்கை   எடுக்க   பிரதமரால்  எப்படி முடியும் ?

தமிழரான    ப. சிதம்பரம்    தன   சுய மரியாதையை  தக்க
வைத்துக்கொள்ள   வேண்டுமானால்   ஒன்று   ரமேஷ்  மீது
நடவடிக்கை  எடுக்க   தலைமையை  வற்புறுத்த  வேண்டும்
– தலைமை    தவறினால்   தானே   பதவி   விலக  வேண்டும் .
செய்வாரா  ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், சீனா, சோனியா காந்தி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், வசூல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.