யாமறிந்த மொழிகளில் –

யாமறிந்த   மொழிகளில்  –

சமஸ்கிருதமும், தமிழும்  கலந்தே இருந்த  கடந்த
காலத்தை  பற்றி  நண்பர் வே, மதிமாறன் அவர்களின்
வலைத்தளத்தில்  ஒரு சுவையான   விவாதம்  நடந்து
கொண்டு இருக்கிறது .

இது குறித்து எனக்குத் தோன்றியவை –

ஒவ்வொரு மொழிக்கும் ஏதாவது ஒரு  வகையில் சிறப்பு
இருக்கிறது . (சிறப்பே  இல்லாத  இந்திய  மொழி  –
எனக்குத்தெரிந்து  இந்தி மட்டும்  தான்)

இருந்தாலும் – .ஒரு மொழியை நமக்கு பிடிக்கும்  என்பதால்
மற்றதை மட்டம்  தட்ட  வேண்டாம் என்பது என்  கருத்து.

எனக்கு  உருது மொழி  ஓரளவு தெரியும்,  மிக கம்பீரமான
மொழி  அது, உருதுவில்  செய்தி வாசிப்பதை  கேட்டுப்பாருங்கள் –
நீங்களும்  உணர்வீர்கள்.

அதே  போல்  தான்  தெலுங்கு -.
கேட்பதற்கு   மிக  இனிமையான மொழி,

சமஸ்கிருதம்  பேசவும், புரிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும்,
மிகவும்  கடுமையான  மொழி –

ஆனால்  கேட்பதற்கு  மிகவும்  , கம்பீரமான  மொழி.
கீதையில்  உள்ள   வாசகங்களையும்,
சாம வேதத்தில்  உள்ள  சுலோகங்களையும்    ராகம் கூட்டி
பாடுவதை கேட்க, நமக்கு  அர்த்தம்  தெரியா விட்டாலும்  கூட
மனதுக்கு  மிக  இதமாக இருக்கிறதே !

(எம்,எஸ்,சுப்புலக்ஷ்மியின்  சுப்ரபாதத்தையும்,
விஷ்ணு சஹுஸ்ரநாமத்தையும்   யாரும்
வெறுக்கவும்   கூடுமோ? )

சுதந்திர   போராட்டத்தின் போது கூட  –
ஆங்கிலேயரை  வெறுத்தாலும்  நாம் ஆங்கிலத்தை
வெறுத்ததில்லையே !

இன்றைய  தினத்தில்  கலப்படம் இல்லாமல்
தமிழில் பேசுபவர்களையோ,  எழுதுபவர்களையோ
காண்பது  அரிதாக  இருக்கிறது !

கலைஞரின்  எழுத்தில், ஏன்  வைரமுத்துவின் எழுத்திலே
கூட  வடமொழிச்சொற்கள்
கலந்து வருகின்றனவே !

மற்ற மொழிகளை வெறுக்காமலும்,  ஒதுக்காமலும்,

அதே   சமயத்தில் –

இயன்ற  வரையில்  தமிழைக்    கலப்படம்  இல்லாமல்
பேசவும்  எழுதவும்  இந்தக்  கால  இளைஞர்களை
பழக்குவதும், ஊக்குவிப்பதும்  நல்லது என்பது  என் கருத்து.

அதே சமயம்  தனித்தமிழ் என்று  பேசப்போக  அது கேலிக்கூத்தாக
ஆகி விடக்கூடாது. இயல்பாக, இயற்கையாக இருக்க வேண்டும்

எனக்கு தெரிந்து தனித்தமிழிலும்  சுவையாகப்  பேசக்கூடிய
பலர்   ( வைகோ, சுகி சிவம்  போன்றவர்கள். ) இருக்கத்தான்
செய்கிறார்கள்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், இலக்கிய அமர்வு, கட்டுரை, கருணாநிதி, பொது, பொதுவானவை, வைகோ, வைரமுத்து, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.