ஹையோ ஹையோ ஹையோ !!
எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் எஸ்.வி.சேகர்! -கருணாநிதி !!
இன்றைய முக்கியமான செய்தி –
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் `நாடகப்பிரியா’ என்ற
நாடக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய நாடகம்
‘அல்வா’ சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான
சபாவில் நேற்றிரவு அரங்கேறியது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த நாடகத்தை
அவர் மிகவும் ரசித்து பார்த்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
நாடகங்களில் சமூகக் கருத்துக்களைச் சேர்த்துச் சொல்வதில்
நடிகவேள் எம்ஆர் ராதாவுக்கு அடுத்து திறமை பெற்றவர்
நடிகர் எஸ்வி சேகர் என்றார் முதல்வர் கருணாநிதி.
—————————————————————-
” சோ ” தான் தனது முன்மாதிரி என்று முன்பு சொல்லி வந்த
சேகரும் மகிழ்வுடன் இதை ஏற்றுக்கொண்டார் !
——————————————————————–
நல்ல வேளை இதைக்கேட்க எம்.ஆர் ராதா அவர்கள்
இன்று உயிருடன் இல்லை !
//நல்ல வேளை இதை கேட்க இப்போது எம்.ஆர். ராதா இல்லை//
இருந்திருந்தால் !….!….! பட்டாசு பறந்திருக்கும். செவிப்பறை கிழிந்திருக்கும்.