திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?

திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா?
மானம் உள்ளவன் இல்லையா?
இரண்டு தட்டு தட்ட மாட்டானா?

சட்டமன்ற  நிகழ்வுகள் பற்றிய ஒரு  செய்தி கீழே   –
———————————————————————-
டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம்
பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே
நெஞ்சம் பதைக்கிறது.

அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதல்
சம்பவத்தில்  பத்திரிகையாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
ஜெயா டிவி ஒளிப்பதிவாளர் பொன்னையா தேவன் உள்ளிட்டோர்
கடுமையாகத் தாக்கப்பட்டு தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்போது உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த டிஜிபி
வன்முறையைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையையும்
எடுக்கவில்லை.

இந்த  சமயத்தில் –
குறுக்கிட்டு அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசியது:–

“கருப்புக் கொடி காட்டப் போகிறோம் என்று யாரும்
போலீஸôரிடம் அனுமதி பெறவில்லை. நான்கைந்து பேர்
திருட்டுத்தனமாக கருப்புக் கொடியை கொண்டு வந்து
காட்டுவார்கள்.

அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா?
அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று சொல்லி
ரகளை செய்தால் அதனை பொறுத்துக் கொண்டு
இருக்க வேண்டுமா?

திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா?
மானம் உள்ளவன் இல்லையா?
இரண்டு தட்டு தட்ட மாட்டானா?
உங்கள் தலைவர் முன்பு இப்படி நடந்து கொண்டால்
சும்மா இருப்பீர்களா?”
என்றார் துரைமுருகன்.
——————————————————————————-

இதில்  சில  கேள்விகள்  எழுகின்றன  –

1)எதிர்க்கட்சி   உறுப்பினர் சொன்னது,  செய்தி  சேகரிக்கச்சென்ற
தொலைகாட்சி /  பத்திரிக்கையாளர்
தாக்கப்பட்டது குறித்து  – போலீசார்  அதனைத் தடுக்க
முயற்சி  கூட  செய்யாதது பற்றி .  அதைக்குறித்து
அமைச்சர்  பெருமான்
பதில் ஏதும் கூறவில்லை – வருத்தமும்  தெரிக்கவில்லை.

2) அமைச்சரின் குறுக்கீட்டில் தெரியும்  தொனி –
எங்கள்  கட்சித் தலைவரை   எதிர்த்ததால் தாக்கப்பட்டனர்
என்றால் என்ன  அர்த்தம்  ?   உச்ச நீதி மன்ற  தலைமை நீதிபதி
முன்னர்  நடந்த  ஒரு  தாக்குதல்  சம்பவம்
நியாயப்படுத்தப்படுகின்றது.
எங்கள்  தலைவரை  அவமதித்து  குரல்  எழுப்பினால்
இப்படித்தான்  போடுவார்கள்  என்று  சட்டசபையிலேயே,
சட்ட அமைச்சரே   சொல்லும்  அளவிற்கு  ஆணவம்.
எங்கள் கட்சியினர் அப்படித்தான்  சட்டத்தை  கையில் எடுத்து
கொள்வார்கள்  –
உங்களால் என்ன செய்ய முடியும் என்று சட்ட  அமைச்சரே
சொல்லுகிறார் .  அதை  முதல் அமைச்சரும்  அனுமதிக்கின்றார்,
——————————

இந்த சட்ட  மன்ற  நிகழ்வு    தொகுப்புகளே  இந்த  வழக்கை
உச்ச நீதிமன்றம்   வரை  எடுத்து சென்று  நியாயம்
கேட்கப்  போதுமான  அளவு  ஆதாரங்களை உள்ளடக்கி இருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள்  நீதிமன்றம்  சென்றால் வெற்றி   நிச்சயம் .

அதுமட்டும்  அல்ல  மக்கள்  மெளனமாக இருப்பதால்
இவற்றை எல்லாம்  ஏற்றுக்கொள்கிறார்கள்  என்று
அர்த்தமில்லை.  அவர்கள்  எல்லாவற்றையும்  தங்கள்  இதயத்தில்
பதிவு  செய்துக்கொண்டு  தான்  இருக்கிறார்கள்.

அவர்களுக்கும்  தெரியும்  -எப்போது தட்ட  வேண்டும்,
யாரைத் தட்ட வேண்டும்,
எப்படித் தட்ட  வேண்டும்  என்பதெல்லாம்.
அவர்கள்   தட்டும்போது  இந்த  அமைச்சரேல்லாம்
என்ன வேகத்தில்  ஒடப்போகின்றார்கள்  என்பதை
பொறுத்திருந்து  தான் பார்க்க  வேண்டும் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, முதலமைச்சர், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.