குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய அவசியமென்ன ?
லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும்
விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி
சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும்,
நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை
பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும்
தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும்
விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம்,
இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது
ஒரு மோதல்,
சமுதாயத்துக்கோ, அரசாங்கத்துக்கோ இதில்
எந்தவித சம்பந்தமும் இல்லை. இரண்டு
மோசடிப் பங்காளிகளுக்குள்
ஏற்பட்ட மோதலை அடுத்து ஒருவர் மீது
ஒருவர் புகார் கூறிக் கொள்ளுகிறார்கள்.
அவர்கள் செய்த பாவத்தின் விளைவு இது.
அவர்கள் தற்போது கொடுத்துக்கொண்டிருப்பது
பாவத்திற்கான கூலி.
இன்று வெளியாகியுள்ள கீழ் காணும்
செய்தியை பாருங்கள் !
செய்தி –
லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு
காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும்,
நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும்
வரதராஜன் மீது ஜவஹர் பழனியப்பன் கொடுத்த
புகாரின் அடிப்படையில் வரதராஜன்
சில நாட்களுக்கு முன் கைது
செய்யப்பட்டார்.
அவர் மீது 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய
பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட
வரதராஜன், சில மணி நேர விசாரணைக்குப் பின்
நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த
காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார்
என்றும், தனது ஊதியத்தை பல மடங்கு
உயர்த்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு
கூறியள்ளார் ஜவஹர் பழனியப்பன்.
இந் நிலையில் இவர்களிடையிலான
பிரச்சனையைத் தீர்க்க சமரசக்குழுவை
அமைப்பதாக முதல்வர் கருணாநிதி
அறிவித்துள்ளார்.
————————————————————–
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி
கொடுக்கும் படலம் – முதல்வர் இதில்
தலையிட வேண்டிய அவசியமென்ன ?
கோடிக்கணக்கான பணம் மோசடி
செய்யப்பட்டுள்ளதாகவும், ஏமாற்றப்பட்டு
விட்டதாகவும் ஒருவர் புகார் கொடுக்கும்போது
அதில் உள்ள உண்மையை நீதிமன்றம்
விசாரிப்பது தானே நேர்மையான முறையாக
இருக்கும் ? இதில் முதல்வர் அவசர அவசரமாக
தலையிட வேண்டிய அவசியம் என்ன ?
முதல்வராக இருப்பவர் கட்டை பஞ்சாயத்து
செய்வது போல் செயல்படலாமா ?
good ques?