கடந்த 3 ஜென்மங்களின் நினைவு
எனக்கு இன்னும் இருக்கிறது ….
20,000 கோடிக்கு சொத்துக்கு அதிபதி ….
(பகுதி -4 )
சென்னையிலும், டெல்லியிலும் கைலாசம்-மானசரோவர்
யாத்திரைக்கு வழக்கமாக அழைத்துச்செல்லும் யாத்திரைக்
குழுக்கள் நிறைய இருக்கின்றன. இவை வர்த்தக
ரீதியில் செயல்படுகின்றன.அதை விளம்பரம்
கொடுத்தும் செய்கின்றன.
இவை சாதாரணமாக அனைத்துச் செலவுகளும் உட்பட
வசூலிக்கும் கட்டணம் –
ரூபாய் 61,000/- முதல் 65,000 வரை.
இத்தகைய விளம்பரங்களின் மாதிரி ஒன்றை கீழே
தந்திருக்கிறேன்.
இதே யாத்திரைக்கு “சற்குரு” வாங்குவது எவ்வளவு
தெரியுமா ?
வெளிநாட்டினராக இருந்தால –
அமெரிக்க டாலரில் கட்டணம் 4500 டாலர்.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக இருந்தால் –
ரூபாய் 1,80,000/-
இந்தியாவில் வசிக்கும் இந்தியராக இருந்தால் –
ரூபாய் 1,50,000/-
இதைத்தவிர கைச்செலவுக்கு சில்லரையாக (?)
ரூபாய் 20,000/-(அனைவருக்கும் பொருந்தும்)
தனியாகக் கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு தேதியிலும் சுமார் 500 பேர் வரை
அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில்
எவ்வளவு தேதிகளில் பாட்சுகள் செல்கின்றன என்று
அவர்களின் விளம்பரத்தில் பார்க்கவும்.
ஆக மொத்தம் இந்த கைலாச யாத்திரையில்
அடிக்க்கப்படும் கொள்ளை எவ்வளவு இருக்கும்
என்பதை படிப்பவர்களே தோராயமாகக் கணக்கு
போட்டுப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டுக்கொள்ளவும் !
இந்தத் தொடரை ஒட்டி சில கேள்விகளை
எழுப்ப விரும்புகிறேன். இதற்கான பதில்களை
என்னால் இப்போதைக்கு கொடுக்க முடியா விட்டாலும்,
இந்த கேள்விகளே இதைப் படிப்பவர்களிடம் தேவையான
எண்ண ஓட்டங்களை உருவாக்கும் என்று
நம்புகிறேன்.
1 இது அவர்களின் வலைத்தளத்திலேயே
உள்ள அறிவிப்பு –
Isha Foundation is registered as a
Charitable Trust in India.
Donations to Isha Foundation are
exempt from Income Tax under
Section 80G of the Income Tax Act.
இந்தப் பிரிவின் கீழ் இந்த நிறுவனம் இதுவரை
பெற்றுள்ள மொத்த தொகை
எவ்வளவு கோடி இருக்கும் ?
அவர்களின் குறிக்கோள்களாக அவர்களது
வலைத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளவை –
2)human upliftment to more than
2,500 destitute villages in
rural southern India.
ஆதரவற்ற், கவனிப்பாறின்றி கிடக்கும்
2500 கிராமங்களை ( கவனிக்கவும் 2500
கிராமங்களை)தத்தெடுத்து வளப்படுத்தவும்,
3) aiming to plant 114 million
trees, restoring
33% green cover in Tamil Nadu,
11 கோடியே, 40 லட்சம் மரங்களை நட்டு
தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிய பசுமையாக
ஆக்கவும்,
4)206 new village schools in
rural southern India
தென்னிந்தியாவில் 206 புதிய கிராமப்புற
பள்ளிக்கூடங்களை நிறுவவும் –
5) ஆக தனது வலைத்தளத்திலேயே கூறியுள்ள
மேற்கூறிய 2,3,4 ஆகிய 3 லட்சியங்களுக்காக
மட்டும் இந்த ஈஷா நிறுவனம் உள் நாட்டிலும்,
வெளிநாடுகளிலும் கடந்த 15 வருடங்களாக
பெற்றுள்ள மொத்த நன்கொடை எவ்வளவு ?
அவற்றில் இதுவரை இந்த காரணங்களுக்காக
செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு ?
மீதி இருப்பது எவ்வளவு ?
6)மேற்கூறிய லட்சியங்களில் இதுவரை
அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு ?
எவ்வளவு பணிகள் பூர்த்தியாகி இருக்கின்றன ?
இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவு ?
7)இந்த நிறுவனத்தின் சொத்துக்கள், பணம
அனைத்தையும் நிர்வகிப்பது யார் ?
“சற்குரு” எந்த அளவிற்கு நிதி நிர்வாகத்தில்
பொறுப்பு ஏற்கிறார் ?
இதன் பொறுப்பில் உள்ள மற்ற நிர்வாகிகள்
(டிரஸ்டு டைரெக்டர்கள்) யார் யார் ?
8) கடந்த 5 ஆண்டுகளாக, சராசரியாக
வருடத்திற்கு 210 விமானப்பயணங்களை
“சற்குரு”மேற்கொண்டிருக்கிறார் என்பது
சரியான தகவலா ?
9)இவருக்கு ஒரு மகள் இருந்தாரே –
அவர் இப்போது இவர் கூடத்தான், இவர் ஆதரவில்
தான் இருக்கிறாரா ? அல்லது வேறு எங்கே ?
அதற்கும் இந்த தலைப்பிற்கும் தொடர்பு
இருப்பதால் மட்டுமே இந்தக் கேள்வி.
10) கடந்த 3 ஜென்மங்களின் நினைவு தனக்கு
இருப்பதாகக் கூறும் இவர் அவற்றைப் பற்றிய
விவரங்கள் எதையாவது
ஆதாரத்துடன் நம்பும் விதமாகக் கூற முடியுமா ?
11)இவர் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான photo
pose களில் சில கீழே –
இவ்வாறு விதம் விதமாக கவர்ச்சிகரமாகக்
காட்சி அளிக்க, கவர்ச்சிகரமான
உடைகளைத் தேர்ந்தெடுக்கவும், தைக்க
ஏற்பாடு செய்யவும், அவற்றை இவர் செல்லும்
நாடுகளுக்கு எல்லாம் உடன் எடுத்துச்செல்லவும்
இவருக்கு எவ்வளவு நேரமும், பணமும்
செலவழியும் ?
“சற்குரு”வான இவருக்கு
இது எல்லாம் ஒத்து வருகிறதா ?
இதற்கான செலவுகள் எல்லாம் எதிலிருந்து
செய்யப்படுகின்றன ? ஈஷாவின் லட்சியங்களாக
மேலே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவைகளை
நிறைவேற்றும் பொருட்டு பெறப்படும்,
வருமான வரியிலிருந்து இந்திய அரசால்
விலக்கு அளிக்கப்பட்ட,
நன்கொடைகளிலிருந்தா ?
இனி –
பிரமிக்க வைக்கும் பணவசதிகளும்,
அளவு கடந்த அரசியல் செல்வாக்கும்,
பிரம்மாண்டமான கட்டமைப்பும்,
லட்சக்கணக்கான சீடர்களையும்
கொண்டுள்ள இந்த நபரை -நம்மால்
சுட்டு விரலளவு கூட அசைக்கக்கூட முடியாது.
நமது எழுத்துக்கள் எந்த விதத்திலும்
அவரை பாதிக்காது என்பது நிதரிசனமாக
எனக்குத் தெரிந்தாலும் –
இந்த இடுகைகளுக்கான காரணம் –
சொல்லுவதைச் சொல்லி வைப்போமே !
இன்றில்லா விட்டாலும் நாளையாவது
நிலைமை மாறலாம் அல்லவா ?
என்கிற நம்பிக்கையில் தான்.
சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். ஆனால் –
எல்லாரையும், எப்போதும் ஏமாற்றி விட முடியாது
என்பது உண்மை தானே ?
//சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். ஆனால் –
எல்லாரையும், எப்போதும் ஏமாற்றி விட முடியாது
என்பது உண்மை தானே ? //
சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். ஆனால் –
எல்லாரையும், எப்போதும் ஏமாற்றி விட முடியாது
என்பது உண்மை தானே ? //
அது தான் சரித்திரம் நமக்குத் தரும் பாடமும் கூட ; ஆனால் யார் அதையெல்லாம் கவனிக்கப் போகிறார்கள்…
தனிமனித துதி இதுவரைக்கும் விளங்கியிருக்கிறதா..?
Money is also collected in centres for the flight tickets for teachers. Say, if a teacher is taking a class in a country, the volunteers in that region will collect / donate money for the flight ticket for the teacher to travel from the country she stays to the country where he/she will take classes. This will not come into any account. No receipts. No bills. No taxes.
அப்படியே ஜெயேந்திரர் சொத்து எவ்வளவுன்னு சொல்லுங்க
ஒருமுறை ஈஷா யோகா வகுப்பில் கலந்து, அதை முறையாக தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை பயணம் சுகமான அனுபவமாக இருக்கும் . இதை அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்கிறேன்
சரி அதற்கும் இந்த குற்றசட்டுகும் என்ன தொடர்பு? தியானம் என்பது வேறு குற்றசாட்டு வேறு அல்லவா?
NEE ELUTHUNATHA ENNAKKU SIRIPPA ERUKKU………..
ONE QUESTION KETKKUREN NEE ENGU POI YOGA CLASS OTHER PROGRAM ELLAM ATTEN PANNI athukku appuram eluth en solurena…………………………………………..
MAMPALLAM THINNAVANALATHAN MAMPALAM TEST THERIUM ,MAMPALATHA PARTHITTU TEST SONNA ATHA ETHUKKA MUDIYATHU
This blog is a big bullshit. you can comment about anything only if you have experience in that. you dont know anything . Enaa aachu nu unaku theriyumaa.. You prople will realise only after a realised being is not on earth. Jesus, Buddha were also neglected like him. ungaluku dress mukyama ila spirituality mukyama. pongada loosungala.