20,000 கோடி சொத்துக்கு அதிபதி !
இந்தியாவிலேயே பெரிய பணக்கார –
சாமியார் – ஆனால் சாமியாரில்லை !
இந்து மதம் மிகப் புராதனமான மதம்.
வேதங்களும்,உபநிஷத்துக்களும்,
ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும்
நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான
காலத்தை இன்னும்
யாரும் சரியாக கண்டுணர முடியவில்லை
என்றாலும்
குறைந்த பட்சம் 6000 ஆண்டுகளுக்கு
முன்னராகவாவது இவை உருவாக்கப்
பட்டிருக்க வேண்டும் என்று சரித்திர ஆசிரியர்கள்
கருதுகின்றனர்.
இவற்றில் நிறைய விஷயங்கள்
புரிந்துக் கொள்ள இயலாததாகவும்,
நம்புவதற்கு இயலாததாகவும்,
கற்பனையை மீறியதாகவும்,
கருதப்படுகின்றன.
சாதாரண மக்களால் இவற்றை புரிந்து கொள்ள
முடியாமல் இருந்ததால், இவற்றை எல்லாம் நன்கு
கற்றறிந்து, தேர்ந்து, தெளிந்து மற்றவர்களுக்கு
எடுத்துச் சொல்பவர்களை மகான்கள்,முனிவர்கள்,
ரிஷிகள் என்று முற்காலத்தில் மக்கள் மதித்தார்கள்.
இந்த மகான்களும், உலகப்பற்றைத்
துறந்து, மிக எளிமையான சந்நியாச வாழ்வை
மேற்கொண்டு உதாரண புருஷர்களாக வாழ்ந்தார்கள்.
மக்கள் மேன்மை அடைய எல்லா விதங்களிலும்
அவர்கள் வழி காட்டிகளாக இருந்து உதவினார்கள்.
பதஞ்சலி என்கிற முனிவர் மனிதர்களின்
உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும்
பக்குவப் படுத்தும் விஷயங்களை சுருக்கமான
வாக்கியங்களில் உருவாக்கிச் சொன்னார்.
34 சூத்திரங்களில் அமைந்துள்ள இவையே
பதஞசலி யோக சூத்திரம் எனப்படுகிறது.
இந்த யோக சாஸ்திரத்தில், உடலை மட்டும்
பக்குவப்படுத்த, வலிமைப்படுத்த
வல்லவை – யோக ஆசனங்கள்(யோகாசனம் )
என்னும் பல்வேறு உடற்பயிற்சி முறைகள்.
உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும்
சேர்த்து பக்குவப்படுத்த வல்லது
அஷ்டாங்க யோகம் என்னும் ராஜயோகம்.
யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,
பிரத்தியாஹாரம், தாரணை, தியானம்,
சமாதி என்கிற 8 பகுதிகளைக் கொண்டதால்
இது அஷ்டாங்க யோகம் என அழைக்கப்பட்டது.
(எட்டு அங்கம் – அஷ்டாங்கம் )
கடந்த 40 – 50 ஆண்டுகளாக யோக
ஆசனங்களை மட்டும் கற்று, அவற்றை
மற்றவர்களுக்கு கற்றுத்தருவதை ஒரு
தொழிலாகவே பலர் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
யோகாசனம் கற்றுத்தர பணமும் பெற்றுக்கொள்ள
ஆரம்பித்தனர்.இதன் மூலம் ஒரு புதிய
தொழில் துறையே உருவாகி விட்டது.
இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும்
இதற்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில்
உருவானது.
இது வரை கூட இதில் தவறேதும் இல்லை.
நமக்கு உபயோகமான,ஆனால் தெரியாத
ஒரு விஷயத்தை
அவர்கள் கற்றுக்கொண்டு நமக்கு சொல்லித்
தருகிறார்கள். அதற்காக ஊதியம் பெற்றுக்
கொள்கிறார்கள்.
சாதாரணமாக நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை
மற்றவர் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள
வேண்டி இருக்கிறது. அடிப்படைக் கல்வியறிவை
பள்ளிகளில் கற்கிறோம். இவற்றை நமக்கு
கற்றுத்தருபவரை நாம் ஆசிரியர் என்று கூறி
அவருக்கு உரிய மரியாதையையும்,
மதிப்பைபும் தருகிறோம்.
இதற்கு மேலும், இசை, நடனம், ஓவியம்,
சிலம்பம், கராத்தே போன்ற சில குறிப்பிட்ட
விஷயங்களில் தேர்ச்சி பெற விரும்பும்போது
அதற்கேற்ற நபர்களை அணுகி பயிற்சி பெறுகிறோம்.
இவர்களை நாம் பாட்டு வாத்தியார்,
டான்ஸ் மாஸ்டர், கராத்தே மாஸ்டர் என்றெல்லாம்
அழைக்கிறோம்.
இதே நிலையில் தான் இருக்கிறார்கள்
இன்றைய தினத்தில் யோகாசனம் கற்றுக்
கொடுப்பவர்களும். அவர்கள் யோகாசனம் கற்றுக்
கொடுப்பதால் – யோகா மாஸ்டர் – அவ்வளவே !
ஆனால் மற்ற எந்த
ஆசிரியர்களுக்கும் கொடுக்காத
ஒரு அதிகப்படியான
மரியாதையை சிலர் இந்த யோகா மாஸ்டர்களுக்கு
கொடுக்க ஆரம்பித்த விபரீதம் தான் இன்றைய
தினத்தில் இத்தனை போலிச் சாமியார்கள்
உருவாக அடிப்படைக் காரணம் !
சாதாரண யோகா மாஸ்டர்களுக்கும் –
தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்து,
தேவைகளைக் குறுக்கிக்கொண்டு,
மிக மிக எளிமையான வாழ்க்கையையும்,
துறவறத்தையும் மேற்கொண்டு,
மக்களின் மேன்மைக்காக உளமாறப் பாடுபடும்
சந்நியாசிகளுக்கும் –
உள்ள மகத்தான வேறுபாடுகளை உணராமல் –
சாதாரண யோகா மாஸ்டர்களை எல்லாம் பெரிய
சாமியார் போல கொண்டாட ஆரம்பித்தார்கள்
நம்மில் சிலர்.
இதில் பெரும் ஆதாயம் கண்ட அவர்களும்
இதையே சுகமாக ஏற்றுக்கொண்டு
எந்த வித உறுத்தல்களும் இன்றி,
தங்களை பெரிய சாமியார்
அளவிற்கு உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து
விட்டார்கள்.
வெறும் யோகா மாஸ்டர்களாக இருந்தவர்கள்,
சாமியார்களாகி,பின்னர் – தங்களை
மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பாலம்
என்று கூற ஆரம்பித்து, பிறகு
தான் கடவுளின் அவதாரம் எனக்கூறத் துவங்கி,
இப்போது கடைசியாக நான் தான் கடவுள் என்றே
சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
இதில் பாவம் இடையில் அகப்பட்டுக்கொண்டு
தவிப்பவர்கள் ஆன்மிக உரையாளர்கள் தான்.
இந்து மதத் தத்துவங்களை எளிமையான
உரை நடையில், விளக்கமாகவும்,
இலக்கியச் சுவை ததும்பவும்
உரையாற்றக்கூடிய அருமையான பல
தமிழ் அறிஞர்கள் கூசிப்போய்
ஒதுங்கி நிற்கும் நிலை இன்று
உருவாகியுள்ளது.
நான் இந்த இடுகையில்
சொல்லவிருக்கிற செய்திகள் எந்த விதத்திலும்
இந்த தமிழறிஞர்களை பாதித்து விடக்கூடாது
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நான் எழுதுவது அவர்களைப் பற்றி அல்ல.
இத்தகைய தமிழறிஞர்களின் மீதும்,
உண்மையான துறவிகளின் மீதும் பெரும் மதிப்பும்,
மரியாதையும் எனக்கு என்றும் உண்டு.
ஏற்கெனவே நித்யானந்தா விவகாரம்
உள்ளம் வெறுத்துப்போகும்
அளவிற்கு மிகப்பெரியதொரு
அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி விட்டதால்
இந்த இடுகையில் நான் சொல்லப்போகிற
நபர் பற்றி உங்களுக்கு பெரிய அதிர்ச்சி
எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் –
அதன் அளவு -(quantum ) உங்களுக்கு நிச்சயம்
அதிர்ச்சியை ஏற்படுத்தத் தான் செய்யும்.
சில சமயங்களில் நிஜம் – கற்பனையை விட
ஆச்சரியமாக இருக்கிறது !
ஒரு சின்ன உதாரணத்தைக் கொடுத்து
கோடி காண்பித்து விட்டு, பிறகு மேலும் விவரமாகத்
தொடருகிறேன்.
7 நாளில் யோகா கற்றுத்தரும் ஒரு பாடத் திட்டம் !
நபர் ஒருவருக்கு கட்டணம் ரூபாய் தொள்ளாயிரம் !
ஒரு குழுவில் 150 பேர். அப்படியானால் ஒரே ஒரு
இடத்தில், 5 நாள் வகுப்பிற்கு ஆகும் வசூல் எவ்வளவு ?
900 x 150 = 1,35,000/- ஆம் –
ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய் !!
அதிர்ச்சி அடையாதீர்கள் – ஒரு ஊரில் ஒரு இடத்தில்
மட்டும் ஒரு வகுப்பில் மட்டும் வசூலாகும் தொகை இது.
நாடெங்கும் எவ்வளவு பயிற்சி வகுப்புகள் நடைபெறு
கின்றன. இதில் மாதந்தோரும் எவ்வளவு வசூல்
ஆகும் என்பதை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.
இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம். கட்டணம்
என்று குறிப்பிட்டால் வரி பிரச்னை வரும். எனவே
வசூலிக்கும் பணத்தை நன்கொடை என்றே கூறுகின்
றார்கள்.ரசீதிலும் (ரசீது கொடுக்கிறார்கள் !)
நன்கொடை என்றே குறிப்பிடப்படுகிறது.
நன்கொடை என்றால் மனமுவந்து ஒருவர்
கொடுப்பது. அது எப்படி அத்தனை பேரும் ஒரே
சமயத்தில், ஒரே அளவு தொகையை
நன்கொடையாகக் கொடுப்பார்கள்
என்று அரசாங்கமோ, வரி வசூலுக்குப் பொறுப்பு
வகிப்பவர்களோ கேட்கவே மாட்டார்கள் !
காரணம் –
– தொடர்கிறேன்.
Your comments are good. But please look at this in other angles. For 7 days, what happens to the rent for the building, electricity, food, accommodation arrangement. If good thing happens, nothing wrong in paying Rs.900. Now a days this is very small amount. (For your info. I have not attended any yoga classes as of now)
– Nagarajan
உங்கள் கருத்துக்கு நன்றி நாகராஜன்.
இது குறித்து ஏற்கெனவே விசாரித்தேன்.
1) கற்றுக்கொடுக்கும் தொண்டர்களுக்கு
(volunteers – trainers )
எந்த வித பண உதவியும் அளிக்கப்படுவதில்லை.
2)சாப்பாடு, பானங்கள் ஏதும்
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மூலம்
ஏற்பாடு செய்யப்படுவதில்லை.
பங்கேற்பாளர்களே கொண்டு வரும்படி
அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நிகழ்ச்சி தினமும் 3 மணி நேரம் தான்.
3) இடத்திற்கான வாடகையும்,
மற்றச்செலவுகளும் உள்ளூர்
மையங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இருந்தாலும் வசூலில் ஓரளவிற்கு
செலவு இருக்கும் என்பது உண்மையே.
மகரிசி, ஜக்கி, நித்யா என் பார்வையில்
http://sagotharan.wordpress.com/2009/12/16/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/
sir,
When you’re seeing form out side it sound so.
If expense is born by the participant i would like to know. How the class is conducted successful for so many years? What makes a person to be volunteers – trainers? How participants are keep enrolling without any decrease in new participant?
If there are no good things why do the people spend money and time?
And in a day there could be 2 to 3 batch 3 hours each so the whole day the room space is occupied.
If there is no professionalism i believe it should have broken in between.