நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே !
கலைஞர் காட்டிய பெப்பே !!
பாவம் நக்கீரன் !
தெலுங்கு மொழியில் ஒரு வேடிக்கையான
சொல் உண்டு. அது தான் தலைப்பு !
நித்யானந்தா விவகாரம் ஆறிப்போன கஞ்சியாகி
விட்டதால் – ஸ்டாலின் – அழகிரி பற்றி
சூடாக கலைஞரிடம் ஒரு மனந்திறந்த
பேட்டியை வாங்கிப் போட்டு விழுந்த சர்குலேஷனை
மீண்டும் தூக்கி விடலாம் என்று நக்கீரன் செய்த
முயற்சி அந்தோ பரிதாபம் ஆகி விட்டது.
விறுவிறுப்பு தலைப்புடன் சரி. உள்ளே ஒரே
கொழ கொழப்பு தான் !
கலைஞரா மசிவார் இதற்கெல்லாம். இந்தக் கேள்வியை
கேட்கும் முன்னர் அவருக்குப் பிடித்தமான ஜாலரா
கேள்விகளை எல்லாம் கேட்டும் அவருக்குப் பிடித்தமான
பதில்களை எல்லாம் மீண்டும் மீண்டும் போட்டும் –
இறுதிப் பலன் – பெப்பே தான்.
கீழே பாருங்களேன் – கேள்வி பதில் லட்சணத்தை !
ஏற்கெனவே ஜெகத் கஸ்பரின் கட்டுக்கதைகளுக்கு
உலகத்தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீண்டும்
முக்கியத்துவம் கொடுத்து பிரசுரம் செய்வதால் தன்
செல்வாக்கை இழந்துகொண்டிருக்கும் நக்கீரன்
கலைஞருக்கு தொடர்ந்து பலமாக ஜால்ரா போடுவதால்
இருக்கும் செல்வாக்கையும் இழந்து கொண்டிருக்கிறது
என்பதை உணர வேண்டும்.