நூறு இடுகைகள் நிறைவடைந்தன – இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்

நூறு  இடுகைகள்  நிறைவடைந்தன -இனி
என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்

http://www.vimarisanam.wordpress.com
என்கிற  இந்த  வலைத்தளத்தை ஒன்பது மாதங்களுக்கு
முன் துவங்கியபோது (ஜூலை 2009)
குறைந்தது 100 இடுகைகளாவது இடும் அளவிற்கு
உழைத்த பிறகு தான் நான் என்னைப்பற்றி எதுவும்
சொல்லிக் கொள்ள தகுதி உடையவன் ஆவேன்
என்று நினைத்தேன்.

எனவே  இது நாள் வரை
அறிமுகம் பகுதியை வெற்றிடமாகவே
வைத்திருந்தேன்.

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த
விருந்தினர்களின்  எண்ணிக்கை என்னை –
விறுவிறுப்பாகவும் ஓரளவு விரைவாகவும்
செயல்படத் தூண்டியது. இன்று 100 இடுகைகளைத்
தொட முடிந்தது.

தொடர்ந்து இந்த வலைக்கு
வருகை  தந்து எனக்கு ஊக்கம் கொடுத்துக்
கொண்டிருக்கும் என்
அன்பு நண்பர்களாகிய உங்களுக்கு  என்
நெஞ்சார்ந்த  நன்றிகள்.

இனி என்னைப்பற்றி சில வார்த்தைகள் –

காவிரிமைந்தன் – புனைப்பெயரிலிருந்தே
யூகித்துக்கொண்டிருபீர்கள் –
பிறப்பு  -காவிரிக்கரை – சோழத் தலைநகர் !
தற்போதைய இருப்பு  – சென்னை மாநகரம் !

வயது –  ஐம்பதுக்கு மேல் (மேலே எவ்வளவு
வேண்டுமானாலும்  சேர்த்துக்கொள்ளலாம் !)

படிப்பு – பிழைப்புக்காகப் படித்தது
டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் –
(பொருளாதாரத்திலும், உலக சரித்திரத்திலும்)

அறிந்துக்கொள்ள் வேண்டும் என்கிற ஆர்வத்தில்
படித்தது -மைசூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் !
( ஆனால் வழக்குரைஞராகத்  தொழில்
புரிவதில் ஆர்வமில்லை )

தெரிந்த மொழிகள் – பேச, படிக்க, எழுத
தெரிந்த மொழிகள் –  தமிழ்,ஆங்கிலம்,இந்தி
தாய் மொழி –  அமுதத் தமிழ்

பேசினால் புரிந்துக்கொள்ளக்கூடிய மொழிகள் –
மலையாளம், தெலுங்கு,  மராத்தி.

பணி நிமித்தமாக இந்தியாவில் பல மாநிலங்களில்
இருந்ததால் – பலதரப்பட்ட மக்களுடன்,
அவர்கள்  கலாச்சாரத்துடன் பழக்கம் உண்டு.

இந்தியாவின் முக்கிய நகரங்கள்
அனைத்துடனும் ஓரளவு பரிச்சயம் உண்டு.

வெளிநாட்டு அனுபவம் – 3 முறை சிங்கப்பூர்
சென்று வந்த அனுபவம் உண்டு.

எனக்குப் பிடித்தவர்கள் – பாரதியும், பெரியாரும் !

இருப்பவர்களில் –  நிறைய பேர் !
(அவ்வப்போது  அவர்களைப் பற்றி
எழுதுகிறேனே !)

எனக்குப் பிடித்தவை – எழுத்தும்,சமுதாய நலனும்.
நிறைய  படிப்பேன்.
இன்னும் படிக்க வேண்டும்.
அதற்கு இன்னும் நேரம் வேண்டும் !

இந்த வலைத்தளத்தில் எழுதுவதன் நோக்கம் –
நல்லதைப்  பாராட்ட வேண்டும்.
கண்ணில் படும் தவறுகளைக் கண்டிக்க வேண்டும்.
(இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? )
அச்சமின்றி  எழுத வேண்டும் ( இயன்ற வரை ! )
ஆபாசமின்றி  எழுத வேண்டும்.

எழுத வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாகவே
உண்டு. ஆனால் எழுத ஆரம்பித்தது
என்னவோ  கடந்த 10 மாதங்களாகத்தான்.

தொழில்முறையில்  கணினியைப் பற்றி ஒன்றுமே
தெரியாது எனக்கு. பழகிக்கொள்ள வேண்டும் என்கிற
ஆர்வத்தில், ஒரு கணினியை வாங்கி என் அறையில்
பொருத்திக்கொண்டு – கம்ப்யூட்டர் படித்த
ஒரு சிறு பெண்ணிடம் ஒரு 10 நாட்கள் கணினியைப்
பற்றிய அடிப்படை விஷயங்களை  மட்டும்
தெரிந்து கொண்டு –

இந்த வலைத்தளத்தை துணிச்சலுடன் துவங்கி
விட்டேன்.(ஆங்கிலத் தட்டச்சு ஏற்கெனவே தெரியும்
என்பது ஒரு பெரிய வசதி ) சின்னச் சின்ன
சந்தேகங்களை அவ்வப்போது கிடைக்கும்
இளைஞர்களிடம்  கேட்டு நிவர்த்தி செய்து
கொள்கிறேன்.இப்போது நான் செய்துகொண்டிருப்பது
அனைத்தும் அநேகமாக என் சுய முயற்சியில்
முயன்று  தெரிந்து கொண்டது தான்.

இந்த தளத்தை இன்னும்  வலுவூட்டவும்,
மெருகூட்டவும்  விரும்புகிறேன்.  அதற்கான
ஆலோசனைகளை  யார் கூறினாலும் – நன்றியுடன்
வரவேற்கிறேன்.

நிறையவே சொல்லி விட்டேன் என்று
நினைக்கிறேன் !
மீண்டும் சந்திப்போம் – தேவை வரும்போது !

வாழ்க – வளர்க !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in 100வது இடுகை, இணைய தளம், இந்தியன், கட்டுரை, காவிரிக்கரை, காவிரிமைந்தன், சரித்திரம், சோழர் தலைநகர், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to நூறு இடுகைகள் நிறைவடைந்தன – இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்

 1. dharma சொல்கிறார்:

  Continue your services (grand father!) , you are a inspiration for youth , All the best ..

  • vimarisanam சொல்கிறார்:

   வாழ்த்துக்களுக்கு நன்றி தர்மா –

   உங்களைப் போன்ற நண்பர்கள்
   தான் எனக்கு ஊட்டச்சத்து.

   காவிரிமைந்தன்

 2. Surendran சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.

  //இந்த தளத்தை இன்னும் வலுவூட்டவும்,
  மெருகூட்டவும் விரும்புகிறேன். அதற்கான
  ஆலோசனைகளை யார் கூறினாலும் – நன்றியுடன்
  வரவேற்கிறேன//

  உங்களுடைய வலைப்பக்த்தில் எழத்துக்கள் அனைத்தும் போல்ட் செய்யப்பட்டுள்ளது.. நீங்கள் அழுத்திச்சொல்ல விரும்பும் பகுதிகளை மட்டும் போல்ட் செய்தால் நன்றாக இருக்கும்.. மற்றும் உங்கள் பக்கம் சென்டர் அலைன்ட்மென்டில் இருந்தால் அழகாக இருக்கும்.. இது அடியேனின் தாழ்மையான கருத்து.. நன்றி.

  • vimarisanam சொல்கிறார்:

   வாருங்கள் சுரேந்திரன்,

   உங்கள் ஆலோசனை உண்மையிலேயே
   வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

   நன்றி.
   இயல்பில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.

   காவிரிமைந்தன்

 3. krishnamoorthy சொல்கிறார்:

  hlelo,
  for the last one month I am following all u r publications and I have been trying to create a blog on y own. But how to send a reply in tamil to u. This itself a problem for me. But certainly I will.
  Before mine, I want to congratulate u for the 100th publication.Let us pray for more useful publications from u.

 4. vimarisanam சொல்கிறார்:

  நண்பர் கிருஷ்ணமூர்த்தி,

  உஙகள் பாராட்டுதலுக்கும்,
  வாழ்த்துக்கும் நன்றி.

  தமிழில் எழுதுவது குறித்து நீங்கள்
  கேட்டதற்கு எனக்குத் தெரிந்த
  ஒரு சுலபமான வழியைக் கீழே
  தந்திருக்கிறேன்.
  இன்னும் சில முறைகளும்
  நடைமுறையில் இருக்கின்றன.

  இதை முயற்சித்துப் பாருங்களேன்.

  உங்களுக்கு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத்
  தெரிந்திருந்தால் இது மிகவும் சுலபம்.
  இதை டிரான்சிலிடெரேட் என்று சொல்வார்கள்.

  நீங்கள் தமிழில் சொல்ல விரும்புவதை அதே
  உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய
  வேண்டும்.

  உதாரணமாக – அம்மா வா – என்பதற்கு

  amma vaa என்று தட்டச்சு செய்ய வேண்டும்.

  இதற்கு வேண்டிய மென்பொருள் தமிழ்வெளி யில்
  (www.tamilveli.com )-ல் கிடைக்கிறது.
  முதலில் இந்த வலைத்தளத்திற்கு போங்கள்.
  அங்கே வலது ஓரத்தில் – தமிழில் எழுத – என்று
  ஒரு வரி இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.

  உடனே உங்களுக்கு தேவையான பெட்டி திறக்கும்.
  நீங்கள் எழுத வேண்டியதை எல்லாம் எழுதியவுடன்
  மேலே edit பகுதிக்கு சென்று, select all
  ஐ தேர்ந்தெடுத்து copy ஐ கிளிக் செய்யவும்.
  பிறகு உங்களுக்கு எந்த வலைத்தளத்தில் இவற்றை
  பதிக்க வேண்டுமோ அதைத் திறந்து கர்சரை
  தேவைப்பட்ட இடத்தில் பொருத்தி, மீண்டும் எடிட்
  பகுதிக்கு சென்று paste ஐ கிளிக் செய்யவும்.

  அவ்வளவு தான் வேலை முடிந்தது.
  4-5 தடவை பழகினால் பிறகு மிக சுலபமாக
  வரும்.

  கத்துக்குட்டியான என்னையும் நம்பி முதல் முறையாக
  ஒருவர் கணினி தொடர்பான ஆலோசனை
  கேட்டிருக்கிறீர்கள்.
  இதற்கு விடை கூறும் அளவிற்கு எனக்கு
  ஓரளவிற்காவது தெரிந்திருப்பது குறித்து மகிழ்ச்சி
  அடைகிறேன்.

  வாழ்த்துக்களுடன்,.

  காவிரிமைந்தன்

 5. Karthi சொல்கிறார்:

  sir,

  count me as your regular reader

 6. நெற்குப்பை.தும்பி சொல்கிறார்:

  வேறு மாநிலங்கள் அறிமுகம் ஆகியிருந்து, ஹிந்தி புரிதல் இருந்தால் தான் இந்தியாவைப் பற்றிய சரியான கருத்து உருவாகும் என நம்புபவன் நான்.
  பல விஷயங்களில் என்னுடன் ஒத்துப் போகிறீர்கள் (வயது ஐம்பது பிளஸ்; திருச்சி பக்கம்; தமிழுடன் ஹிந்தி, தெலுங்கு, …;; ) .
  உங்கள் எழுத்துகளிலே நடுநிலையும் தர்க்க ரீதியான வாதங்களும் தனித்து நிற்கின்றன.
  பணி தொடரட்டும்.

 7. D. Chandramouli சொல்கிறார்:

  As of this moment, I completed reading all your 100 blogs. I agree with most of your views.

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  thanks a lot chandramouli.
  this is the tonic which makes me
  work more and more.

 9. Surferz World சொல்கிறார்:

  I liked your boldness. Your perspective is different than others. Carry on your job. My best wishes.

 10. Ramya சொல்கிறார்:

  Sir,

  You writings are very genuine! Keep writing. All the best for your efforts 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.