சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !!
சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ?
(பேசும் புகைப்படங்கள் !)
கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது,
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக்
கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில்
விளம்பரம் தருவது என்பது குறித்து
ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர
ஓட்டலில் நேற்று கூடியபோது எடுக்கப்பட்டது.
(செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே
செம்மையாக யோசிக்க முடியும் ? )
(ஹால் நிறைந்திருந்தது. படத்தில் ஒரு மேஜை
மட்டும் தான் தெரிகிறது )
இரண்டாவது புகைப்படம் செம்மொழி தமிழ்
சார்பாக பண்டைத்தமிழகத்தில் நீர் மேம்பாடு
எப்படி இருந்தது என்பது குறித்து
விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டமும், அதில்
கொடுக்கப்பட்ட மட்டன், சிக்கன் உட்பட்ட
விருந்தும் ( விருந்து கொடுக்கக்ப்பட்டது
மகாவீரரின் பிறந்த நாளன்று என்பதும் அன்று
மட்டன் கடைகளை எல்லாம் மூட அரசாங்கம்
உத்திரவு இட்டிருந்தது என்பதும் கூடுதல் தகவல் )
செம்மொழி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின்
முகரைகளையும் (மன்னிக்கவும்), முக்கியமாக
உடைகளையும் கவனிக்கவும். இவர்கள்
எல்லாம் கலைஞரால் கண்டுபிடிக்கப்பட்ட
தமிழ் அறிஞர்கள் !!