இந்து நாளிதழ் நிர்வாகத்தில் குடுமிபிடி சண்டை !
65 வயதாகும் ராம் பதவி ஓய்வு பெற வற்புறுத்தல் !
செய்தியை வெளியிட்டால் கிரிமினல் நடவடிக்கை !
ராம் பயமுறுத்தல் !
பிரபல ஆங்கில நாளிதழ் “இந்து” கடந்த சில
வருடங்களாக ஆசிரியர் என். ராம் அவர்களின்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரது எதேச்சாதிகாரமான
போக்கும், தன்னிச்சையான, ஒரு சார்பான,
அணுகுமுறைகளும் இந்து நாளிதழின் மதிப்பைக்
குலைப்பதாக இருக்கின்றன என்று நிர்வாகக் குழுவில்
சில உறுப்பினர்கள், குறிப்பாக அவரது இளைய
சகோதரர் என்.முரளி போன்றோர் கருதுகிறார்கள்.
என்.ராம் அவர்களுக்கு வருகிற மே மாதத்தில் 65 வயது
நிரம்புகிறது. எனவே அவர் ஆசிரியர் பதவியிலிருந்து
ஓய்வு பெற்று அவரது இளைய சகோதரர் முரளி
ஆசிரியர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று சில
நிர்வாக (குடும்ப) உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்.
இந்த தருணத்தில்,அதிரடியாக நேற்று முதல்
முரளி அவர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் விதத்தில்
ராம் சில நிர்வாக உத்திரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்.
இதன் மூலம் தன்னை பதவி விலகச்சொன்ன முரளியை
செல்லாக்காசு ஆக்குவதோடு தான் பதவியிலிருந்து
ஓய்வு பெற முடியாது என்றும் ராம் அறிவித்திருக்கிறார் !
இந்த தகவலை அறிந்து வெளியிட முயன்ற
பத்திரிகையாளர் மீது சிவில் மற்றும் கிரிமினல்
நடவடிக்கை எடுக்க்கப்படும் என்று மிரட்டி ராம் அவர்கள்
இன்று அறிவிப்பு செய்திருக்கிறார்.
பத்திரிக்கை சுதந்திரத்திற்காக எந்தவிதத் தியாகமும்
செய்யத்தயார் என்று அறிவித்த ராம் தான்
இன்று சொந்த விஷயம் என்றவுடன்,
செய்தியை வெளியிட்டாலே கிரிமினல்
நடவடிக்கை என்று பயமுறுத்துகிறார் !
இதோ செய்தியை வெளியிட்டு விட்டோம்.
என்ன செய்யப்போகின்றார் பார்ப்போம்.
வாழ்க பத்திரிக்கை சுதந்திரம் !!!