வாழ்க … மன்றங்கள் – யார் எக்கேடு கெட்டாலென்ன ? குஷ்புவை காக்க வைக்கலாமா ?

வாழ்க  … மன்றங்கள் – யார் எக்கேடு
கெட்டாலென்ன  ?
குஷ்புவை  காக்க வைக்கலாமா ?

இன்றைய  தலைப்புச் செய்தி –

———————————-
“வழக்கு விசாரணையும், வக்கீல் விவாதத்தையும்
நேரில் காண குஷ்பு  வந்து இருந்தார். ஆரஞ்சு
நிறத்தில் சல்வார் கமீசும் பச்சை நிற துப்பட்டாவும்
அணிந்து எளிமையாக காணப்பட்டார்.
நெற்றியில் பெரிய பொட்டு வைத்து இருந்தார்.

கோர்ட்டில் முன் இருக்கையில் உட்காருவதற்கு
அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இப்படி மனுதாரர்கள் முன் வரிசையில் அமர்வது
அபூர்வம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக
முன் பகுதியில் அமர்வதற்கு யாரும் எளிதில்
அனுமதி பெற்று விட முடியாது.”
———————————-

பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்
எத்தனை  இருக்கக்கூடும் ?

நீதிமன்றங்களில் – கணவரால் கைவிடப்பட்ட,
ஆதரவற்ற பெண்களால் – ஜீவனாம்சம் கோரி
போடப்பட்ட, கிடப்பில் இருக்கும்
வழக்குகள்  எத்தனை ஆயிரம்  ?

முதல் மனைவி உயிரோடு இருக்கையிலேயே
இரண்டாவது திருமணம் செய்த கணவனை எதிர்த்து
போடப்பட்டு காத்திருக்கும் வழக்குகள்
எத்தனை ஆயிரம் ?

வரதட்சணை  கொடுமை  காரணமாக
ஸ்டவ் வெடிப்பில் உயிரிழந்த, பெற்றமகளைப் பறி
கொடுத்துவிட்டு  நீதி கேட்டு
அலையும்  பெற்றோர்களின் காத்திருக்கும்
வழக்குகள் எத்தனை ?

விபத்தில் குடும்பத்தலைவனை இழந்து,
நஷ்ட ஈடு கிடைக்காமல் ஒவ்வொரு நீதிமன்றமாக
அலையும் அபலைப்பெண்களின் வழக்குகள் எத்தனை ?

கொலை வழக்கில் தண்டனை பெற்று அப்பீலில்
தடை உத்தரவு பெற்று  வெளியே மேன்மேலும்
கொலைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்
கொலைகார அரசியல்வாதிகளுக்கெதிரான
அப்பீல்   மனுக்கள்  எத்தனை  ?

வரவிற்கு மேல் கோடிக்கணக்கான சொத்து சேர்த்த்
கொள்ளைக்கார அரசியல்வாதிகளின்
18 வருடத்தையும் தாண்டி  காத்திருக்கும்
அப்பீல் வழக்குகள்  எத்தனை எத்தனை ?

அவற்றிற்கென்ன  அவசரம் இப்போது ?
கிடக்கட்டும்  எல்லாம்  கிடப்பிலேயே –

காக்க வைக்கலாமா குஷ்புவை ?
எத்தகைய  முக்கியமான பிரச்சினை-
கல்யாணத்திற்கு முன் ….. வைத்துக்
கொள்ளலாமா – கூடாதா ?

ஏன் – பிரபு குடும்பத்தினரைக்
கேட்டிருந்தாலே போதுமே –
சரியான  தீர்ப்பு கொடுத்திருப்பார்களே !

வெட்கக்கேடு !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், குஷ்பு, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சுதந்திரம், தமிழ், திருமணத்திற்கு முன், நாகரிகம், நாளைய செய்தி, பெண்ணியம், பொது, பொதுவானவை, மகளிர் தினம், மனைவி, Uncategorized and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.