சரியான விடையைச் சொல்பவர்களுக்கு –
நித்யானந்தாவின் சொத்து !
நித்யானந்தா போய் விட்டதால் – அடுத்தபடியாக
ஒரு நல்ல ஆன்மிகவாதியைக் அடையாளம் காண
வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது !
தமிழ்நாட்டிலுள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மிகவாதியின்
பேச்சு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் யார் என்று
சரியாகச் சொல்லும் அதிருஷ்டசாலி (?) வாசகருக்கு
நித்யானந்தாவின் அத்தனை சொத்தையும் எழுதி வாங்க –
முயற்சி செய்யப்படும் ! ஒன்றுக்கு மேற்பட்ட வாசகர்கள்
சரியான பதிலை அனுப்பினால் – குலுக்கல் முறையில்
பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு – அதிருஷ்டசாலி
வாசகருக்கு அத்தனை சொத்தையும் எழுதி வாங்க –
முயற்சி செய்யப்படும் !
48 மணி நேரம் தான் அவகாசம்.
முந்துங்கள் – மின்னஞ்சலுக்கு !!
திங்கள் இரவு 8 மணிக்கு மேல் வரும்
பதில்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டா !
——–
“ஒரு காலத்தில், ஆன்மிகத்தில் இருப்பவர்களைப்
பார்த்தாலே ஒரு வித போற்றுதலும், மரியாதையும்
மக்களிடத்தில் தோன்றியது. இன்றைக்கோ,
ஆன்மிகப் பணியில் இருப்பவர்களைப் பற்றித்
துப்பறிந்து ஆராய வேண்டிய சூழ்நிலை
உருவாகி விட்டது.
ஆன்மிகத்தின் அடிப்படையே முழுமையான
நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் தான்.
அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நாம்.
நல் வாய்ப்பும் ஆழ்ந்த ஞானமும்
கொண்ட இந்தத் தேசத்தில் சில பொறுப்பற்ற
மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் மக்களின்
நம்பிக்கை குலைந்து சிதறி விடுகிறது.
அதே சமயம் ஏதோ ஒன்றிரண்டு பேர் –
தவறான முன்னுதாரணங்களாகத் திகழ்வதைக்
கண்டு மொத்த ஆன்மிகத்தையும் சந்தேகப்பட
வேண்டிய அவசியம் இல்லை.
ஆன்மிகரீதியில் முன்னேற்றம் கொண்டுவர
வேண்டுமானால், மக்கள் அவர்கள் மீது
வைத்த நம்பிக்கையை எந்தக் காரணம் கொண்டும்
தவறாகப் பயன்படுத்த முன்வராத
நேர்மை தேவை.
ஆன்மிகம் என்பது அருவருப்பான ஆபாசங்களுக்கு
அடித்தளமாகி விடாமல்
அன்பு, கருணை, ஆனந்தம், பரவசம்
இவற்றை பரப்ப வேண்டும் என்பதே
என் விருப்பம்.”
எனக்குத் தெரியும் –
சொல்லி விடுவேன் ! ஆனால் –
நித்யானந்தா “சொத்து”
நமக்கெதற்கு என்று தான்
பார்க்கிறேன் !
க்ளூ கொடுக்காமல் இது என்ன புதிர்
சொத்தெல்லாம் வேண்டாம். க்ளூதான் வேண்டும்.
ஒகே – இதோ பிடியுங்கள் க்ளு !
அடுத்ததாக “வெளியே”
வரப்போகிறவர் !!
மறந்து விட்டேன் –
இன்னோரு க்ளூ –
விடை ஜவஹருக்குத்
தெரிந்திருக்கலாம் !!
– அவர் இன் னும் இதைப்
பார்க்கவில்லையா அல்லது
“சொத்து” அவருக்கு வேண்டாமா
தெரியவில்லை !