இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும்
பத்மபூஷன் கிடைத்தது எப்படி ?
வியப்பூட்டும் தகவல் !
ஒரு வியப்பூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது –
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் !
இசையமைப்பாளர்கள் இளையராஜாவிற்கும,
ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் இந்த ஆண்டு குடியரசு
தினத்தன்று பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததற்கு
கலைஞர் கருணாநிதியின் (தமிழக அரசின் )
பரிந்துரை தான் காரணம் என்று
எல்லாருமே நினைத்திருந்தோம்.
ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள்
இருவருக்குமே
தமிழக அரசு பரிந்துரை செய்யவில்லை.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேடும் குழு –
தானாகவே அவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்து
கௌரவித்திருக்கிறது ! மிகவும் பெருமைப்படத்தக்க
செய்தி !
இன்னொரு காமெடியான செய்தியும்
வெளிவந்திருக்கிறது –
கலைஞர் அரசு பத்ம விருதுகளுக்காக பரிந்துரை
செய்த பெயர்களில் சில –
கி.வீரமணி, (ஆம் தொண்டரடிப்பொடியார் தான் !)
எஸ்.வி.சேகர் (மஞ்சள் சட்டை மகிமை !)
என்.ராம் (அதே ராஜபக்சேயின் உயிர் நண்பர் –
இந்து ஆசிரியர் தான் !)
இதில் நம் சந்தோஷம் –
ஏதோ காரணத்திற்காக (?)
இவர்கள் சம்பந்தப்பட்ட தமிழக அரசின் பரிந்துரைகள்
மத்திய அரசால் ஏற்கப்படவில்லை !
காணக்கிடைக்காத தங்கத்தை தேடிப் பிடித்ததாக தகவல். பாராட்டப் படவேண்டிய அம்சம் இம்மாதிரியே
ஆழ்கடலில் முத்தெடுங்கள் எனச் சொல்லி பாராட்டுவோம்