வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ?
வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ?
(பகுதி-6 )
இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மிக மோசமான
முறையில் ஏசிப்பேசியதால்,
திராவிட இயக்கம் தளர்வு அடைந்தது.
கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
தலைவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அடுத்து நிகழ்ந்த தேர்தலில் எம்ஜிஆர் மகத்தான
வெற்றியைப் பெற்று
தமிழ் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
இதனிடையே பெரியார் ஈவேரா அவர்கள்
காலமானார். அவரால் உருவாக்கி,
வளர்த்து, கட்டிக் காக்கப்பட்ட இயக்கம் பலவீனம்
அடைந்தது. அவருடன்
இருந்த தொண்டர்களில் பெரும்பாலானோர்,
பதவியில் இருந்த கழகங்களின்
பின்னால் போயினர்.
சிறிது காலம் மணியம்மையாரின் பொறுப்பில்
இருந்த திராவிடர் கழகத்தை இறுதியாக கி.வீரமணி
அவர்கள் கைப்பற்றிக் கொண்டார்.
அதன் பிறகு ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும்,
யார் அதிகாரத்திற்கு
வருகிறார்களோ – அவர்கள் பின்னே போய்
பவ்வியமாக நின்றுக் கொண்டார்.
தனக்குத் தேவையானவை எல்லாம் கேட்டுப்
பெற்றுக் கொண்டார். சுயநலமே கொள்கையானது !
வீரமணி முன்னுக்கு வந்தார் –
இயக்கம் பின்னுக்குப் போனது !
அண்ணா திமுக அகில இந்திய அண்ணா திமுக
என்று பெயர் மாற்றம் பெற்றது !
எம்ஜிஆர் ஆட்சியில் பல மக்கள் நலத்திட்டங்கள்
நிறைவேற்றப்பட்டாலும்,
திராவிட இயக்க கொள்கைகளுக்கும் அதிமுக
ஆட்சிக்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லாமல் இருந்தது.
1987-ல் உடல் நலிவுற்று எம்ஜிஆர் காலமானார்.
சிறிது காலத்திற்கு நீடித்த
– புகழ் பெற்ற ஜானகி-ஜெயா –
போராட்டங்களுக்கு பிறகு இறுதியாக
அதிமுக ஜெயலலிதா அவர்களிடம் போய்ச் சேர்ந்தது.
இன்று வரை அவரின்
முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இரண்டு முறைகள் அதிமுக முதல்வராக
ஆட்சிப் பொறுப்பையும் வகித்தார்
ஜெயலலிதா.
அவருக்கு முழு ஆதரவு அளித்து,
“சமூக நீதி காத்த வீராங்கனை” என்று பட்டமும்
அளித்து, தொண்டரடிப் பொடி ஆழ்வார் ஆகி
பிறவிப்பயன் பெற்று மகிழ்ந்து போனார்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் !
திராவிடர் கழகத்தின் –
இறுதி கட்ட வீழ்ச்சிக்கு முழுமுதல் காரணமானவர்
தன்மானத்தலைவர்
என்று அழைத்துக்கொள்ளும் வீரமணி !
ஜெயலலிதாவின் தலைமையிலான
அதிமுக கட்சியோ பெரியாரின் கொள்கைகளைப்
பற்றியும் கவலைப் படவில்லை –
அண்ணாவின் பெயரைக் கொண்ட கட்சி ஆயிற்றே
என்றும் யோசிக்கவில்லை !
ஒவ்வொரு கூட்டத்திலும் பெரியார் நாமம்
வாழ்க – அண்ணா நாமம் வாழ்க என்று
பெரியாருக்கும் அண்ணாவுக்கும்
சேர்த்து நாமம் போடுவதிலேயே
மகிழ்ந்து போனது !!
இப்படியாக பிராம்மணரை எதிர்த்து,
பிராம்மணர்களை ஒழிப்பதற்காக என்றே
ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கம் – இறுதியில்
ஒரு பிராம்மணர் வசமே
சென்று சுமார் 50 வருட இடைவெளிக்குப் பிறகு
மீண்டும் ஒரு பிராம்மணர்
தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக வழி செய்தது.
இதற்கிடையே – தனக்குப் பிறகு தன் மகன்
ஸ்டாலின் திமுக கட்சியிலும்,
ஆட்சியிலும் தலைமை ஏற்பதற்கு தடையாக
வைகோ அவர்கள் இருப்பார்
என்று கலைஞர் கருணாநிதி கருதியதால்
வைகோ மீது கொலைப்பழி
சாட்டப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார்.
3ம் முறையாக திராவிடர் இயக்கம் பிளவுபட்டது !
தொடரும் –